குவைத்தின் ஆளுநரகங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குவைத்தின் ஆளுநரகங்கள்
வகைஆளுநரகம்
அமைவிடம்குவைத்து குவைத்
எண்ணிக்கை6 ஆளுநரகங்கள் (as of 27 நவம்பர் 1999)
மக்கள்தொகைமுபாரக் அல் கபீர் ஆளுநரகம் - 254,999 (குறைந்தளவு); பர்வானியா ஆளுநரகம் - 1,169,312 (உயர்ந்தளவு)
பரப்புகள்ஹவல்லி ஆளுநரகம் - 85 km2 (33 sq mi) (சிறியது); ஜஹ்ரா ஆளுநரகம் - 12,750 km2 (4,920 sq mi) km² (பெரியது)
அரசுகுவைத் அரசு
உட்பிரிவுகள்குவைத்தின் பிராந்தியம்

குவைத் நாடு ஆறு கவர்னரேட் எனப்படும் ஆளுநரகங்களாக ( muhafazah ) பிரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆளுநரகங்கள் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. பிரதமரின் முன்மொழிவின் பேரில் அமைச்சரவையின் ஆணையால் 4 ஆண்டு காலத்திற்கு (நீட்டிக்கத்தக்கதாக) நியமிக்கப்பட்ட ஆளுநர் ஆளுநரகத்தின் தலைமை பொறுப்பில் இருப்பார்.

வரலாறு[தொகு]

குவைத் நாட்டில் ஆளுநரகங்கள் உருவாவாக்கமானது 1962 ஆம் ஆண்டில் எமிரி ஆணை எண் 6 இன்படி தொடங்கியது. இது குவைத்தை மூன்று ஆளுநரகங்களாகப் பிரித்தது. அதாவது அல்-அசிமா ஆளுநரகம், ஹவல்லி ஆளுநரகம், அஹ்மதி ஆளுநரகம் என்பனவாகும். பின்னர், ஜஹ்ரா ஆளுநரகம், பர்வானியா ஆளுநரகம், முபாரக் அல் கபீர் ஆளுநரகம் போன்றவை முறையே 1979, 1988 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்டன.

ஆளுநரகங்கள்[தொகு]

கவர்னரேட் ஐஎஸ்ஓ 3166-2: கே.டபிள்யூ உருவாக்கம் மக்கள் தொகை பரப்பளவு (கிமீ²) குறிப்புகள்
அஹ்மதி ஆளுநரகம் KW-AH 1962 959,009 5,120 குவைத்தின் 10 வது ஆட்சியாளரான ஷேக் அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் பெயரிடப்பட்டது.
அல்-அசிமா கவர்னரேட் KW-KU 1962 568,567 175 இது குவைத்தின் நிதி மற்றும் வணிக மையங்களான குவைத் பங்குச் சந்தை போன்றவற்றைக் கொண்டுள்ளது .
பர்வானியா ஆளுநரகம் KW-FA 1988 1,169,312 204 இது அதிக மக்கள் தொகை கொண்ட ஆளுநரகமாகும், இது குவைத்தின் முக்கிய குடியிருப்பு பகுதியாகும்.
ஹவல்லி ஆளுநரகம் KW-HA 1962 939,792 85 இது மிகச்சிறிய மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட ஆளுநரகமாகும்.
ஜஹ்ரா ஆளுநரகம் கே.டபிள்யூ-ஜே.ஏ. 1979 540,910 12,750 இது மிகப்பெரிய ஆளுநரகமாகும், விவசாயப் பகுதிகளைக் கொண்டுள்ளது.
முபாரக் அல் கபீர் ஆளுநரகம் KW-MU 1999 254,999 104 குவைத்தின் புதிய ஆளுநரகமாக, 1999 இல் நிறுவப்பட்டது.