குவெம்பு பல்கலைக்கழகம்

ஆள்கூறுகள்: 13°55′0.12″N 75°34′0.12″E / 13.9167000°N 75.5667000°E / 13.9167000; 75.5667000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குவேம்பு பல்கலைக்கழகம்
ಕುವೆಂಪು ವಿಶ್ವವಿದ್ಯಾಲಯ
குறிக்கோளுரைಬೋಧನೆ ರಲ್ಲಿ ಫಾಸ್ಟರ್ ಕ್ರಿಯೆಟಿವಿಟಿ
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
"Foster Creativity in Teaching"
வகைபொது
உருவாக்கம்1987 (1987)
வேந்தர்வசுபாய் வாலா
கருநாடக ஆளுநர்
துணை வேந்தர்எஸ்.ஏ.பாரி
அமைவிடம்
சிமோகா,
, ,
வளாகம்ஊரகப் பகுதி
230 ஏக்கர்கள் (93 ha) (முதன்மை வளாகம்)
சேர்ப்புப.மா.ஆ, என்ஏஏசி, ஏஐயூ
இணையதளம்www.kuvempu.ac.in

குவேம்பு பல்கலைக்கழகம் (Kuvempu University, கன்னடம்: ಕುವೆಂಪು ವಿಶ್ವವಿದ್ಯಾಲಯ) கருநாடக மாநிலத்தில் சிமோகா நகரில் அமைக்கப்பட்டுள்ள ஓர் பொதுத்துறை மாநில அரசு பல்கலைக்கழகம் ஆகும். இது 1987ஆம் ஆண்டு கருநாடக மாநில பல்கலைக்கழக சட்டம் 1976இன் கீழ் திருத்தம் எண்.28/1976 மூலம் சட்டப் பேரவை தீர்மானத்தால் நிறுவப்பட்டது. [1] இந்தப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் பட்ட மற்றும் பட்டமேற்படிப்பு கல்வித்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இதன் வளாகம் 230 ஏக்கர்கள் (0.93 km2) பரப்பளவு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 1994ஆம் ஆண்டில் பல்கலைக்கழக மானியக் குழு அங்கீகாரம் வழங்கியது. மேலும் இந்தியப் பல்கலைக்கழகங்களின் சங்கத்தில் உறுப்பினராக உள்ளது.[2][3] தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை குவேம்பு பல்கலைக்கழகத்திற்கு உயர்ந்த "பி" தரச்சான்று வழங்கியுள்ளது.[4]

பல்கலைக்கழகத்தின் தலைமையகம் சிமோகாவிலுள்ள ஞான சயாத்ரி வளாகத்தில் இயங்குகிறது.இந்தப் பல்கலைகழகத்தின் கீழ் சிமோகா, சிக்மங்களூர், தாவண்கரே மற்றும் சித்திரதுர்கா மாவட்டங்கள் உள்ளன. வளாகம் 230 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளது.[5] இந்தப் பல்கலைக்கழகம் புகழ்பெற்ற கன்னட மொழிக் கவிஞர் குவேம்புவின் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது. இவர் சிமோகா மாவட்டத்தைச் சேர்ந்தவர். மைசூர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகப் பணியாற்றி உள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "About Kuvempu University". July 4, 2009 இம் மூலத்தில் இருந்து 2008-05-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080510132843/http://www.kuvempu.ac.in/aboutus.htm. பார்த்த நாள்: 2007-10-16. 
  2. "About Kuvempu University". Universities of Karnataka. July 13, 2009 இம் மூலத்தில் இருந்து 2007-10-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071024085611/http://www.exam-results.com/universitiesinkarnataka/kuvempuuniversity.htm. பார்த்த நாள்: 2007-10-16. 
  3. "Members of the Association of Indian Universities". Association of Indian Universities. August 29, 2006. http://www.aiuweb.org/Members/MembersK.asp. பார்த்த நாள்: 2007-10-16. 
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2010-09-28. பார்க்கப்பட்ட நாள் 2012-04-09.
  5. "Kuvempu improve infrastructure". தி இந்து. July 14, 2009 இம் மூலத்தில் இருந்து 2013-01-25 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130125060309/http://www.hinduonnet.com/2004/02/27/stories/2004022702380301.htm. பார்த்த நாள்: 2007-10-16. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குவெம்பு_பல்கலைக்கழகம்&oldid=3792827" இலிருந்து மீள்விக்கப்பட்டது