குவி வில்லை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(குவிவில்லை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
குவிவில்லை
ஒளிக்குவியும் காட்சி

இயற்பியலில் வில்லை ஒன்றின் இருபக்கமும் குவிந்து இருந்தால், அது குவிவில்லை (Convex lens) என்றழைக்கப்படுகிறது. இவை குவிலென்சுகள் என்றும் தமிழகத்தில் அழைக்கப்படுகின்றன. இலங்கையில் குவிவு வில்லை என்றும் அழைக்கப்படுகிறது. இது தன்மீது விழும் இணை ஒளிக்கற்றைகளை, ஒரு குறிப்பிட்ட புள்ளியில் குவிக்கும் இயல்பைப் பெற்றுள்ளது. குவிவில்லைகளில் பலவகை உள்ளன. நம் கண்ணில் இருப்பது, இருபக்க குவிவில்லை ஆகும்.

குழி மற்றும் குவி வில்லைகள் இரண்டிற்கும் உருப்பெருக்கச் சமன்பாடு பொருந்தும்.

குவிவில்லையின் பலன்கள்[தொகு]

  • குவிவில்லைகளே பற்பல சோதனைக் கருவிகளில் பயன்படுத்தப்படுகின்றன. எ.கா: நுண்ணோக்கி, தொலைநோக்கி, இருகண் நோக்கி, போன்றவை.
  • வானவியல்: 2008 ஆம் ஆண்டில், பிரபஞ்சத்தில் 23% அமைந்துள்ள, ஆயினும் கண்ணுக்குப் புலப்படாத இருட் பிண்டம் (Dark Matter) எனப்படும் மர்மமான பொருள் இருப்பதைக் கண்டிருக்கிறார்கள். அபிள் விண்வெளித் தொலைநோக்கி மூலம், இருட்பிண்டத்தின் தளப்பரப்பு அறிய நிபுணர் பயன்படுத்திய பொறிநுணுக்க முறை, ஈர்ப்பாற்றல் வில்லை வளைவு முறை (Gravitational Lensing) ஆகும். ஒரு நோக்காளர் தூரத்திலிருக்கும் விண்மீன் பேரடை ஒன்றை உளாவும் போது, இடையில் ஓர் இருட்பிண்டம் இருந்தால், விண்மீன் பேரடையிலிருந்து எழும் ஒளிக்கோடு, வளைக்கப்பட்டு இரண்டு பிம்பங்கள் தோன்றுகின்றன. பற்பலச் சிறிய குவிவில்லைகள் மூலம் தெரிவது போல, பல பிம்பங்கள் காணப்படுகின்றன. அச்சிறு குவிவில்லைகள், ஒவ்வொன்றும் ஒரு துண்டு இருட்பிண்டம் என நிரூபிக்கப்பட்டுள்ளது.
  • இருபக்கக் குவிவில்லையால் தோன்றும் பிம்பமானது, தலைகீழாகத் தான் உண்டாகும். அப்படியிருக்க நம் கண்ணில் தெரியும் பிம்பமானது நமக்கு நேராகத் தெரிவதற்கு, நமது கண்ணிலுள்ள நரம்பு மண்டல அமைப்பின் சிறப்பான செயற்பாடே ஆகும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குவி_வில்லை&oldid=2675098" இருந்து மீள்விக்கப்பட்டது