குவியமில்லா அமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குவியமில்லா அமைப்பில் ஒளியின் பாதை வரைபடம்.

குவியமில்லா அமைப்பு (Afocal system) என்பது ஒளியியல் அடிப்படையில் ஒளியை முழுமையாகக் குவிக்கவோ அல்லது ஒரு புள்ளியிலிருந்து விரிக்கவோ இயலாத ஒரு அமைப்பாகும். அதாவது குறிப்பிட்ட குவிய துாரம் என்பது இவ்வமைப்பில் இல்லை.[1]

இவ்வமைப்பு ஒரு இணை ஒளியியல் சாதனங்களால் உருவாக்கப்படுகிறது. அவற்றின் நீளம் இரண்டு ஒளியியல் சாதனங்களின் குவிய துாரங்களின் கூடுதலுக்குச் சமம் (d = f1+f2).

எடுத்துக்காட்டாக நட்சத்திரங்களைக் காண உதவும் தொலைநோக்கிகளில் குவியமில்லா அமைப்பு பயன்படுகிறது. இதில் பொருளும் வெகு தொலைவில் உள்ளது, பிம்பமும் வெகு தொலைவில் உருவாகிறது (அதாவது ஒளி இணை கற்றை ஆக்கப்படுகிறது). [2]

இவ்வமைப்பில் இணை கற்றையின் விரிகை மாற்றப்படுவதில்லை. ஆனால் உருப்பெருக்கத்தை மாற்றுவதன் மூலம் அதன் அகலம் மாற்றப்படுகிறது. அப்படிப்பட்ட தொலைநோக்கியின் உருப்பெருக்கம்:

குவியமில்லா அமைப்புகள் சீரொளி (லேசர்), அகச் சிவப்பு கதிர்கள் அமைப்பு, நிழற்படக் கருவி மற்றும் தொலைநோக்கி ஆகியவற்றில் ஒளிக்கற்றைகளைச் சீர்செய்ய உதவுகிறது.[3] நிழற்படக் கருவியும் தொலைநோக்கியும் இணைந்து உருவாக்கும் நிழற்படக் கலை குவியமில்லா நிழற்படக் கலை எனப்படுகிறது.

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குவியமில்லா_அமைப்பு&oldid=2749129" இருந்து மீள்விக்கப்பட்டது