குவிக் துடுப்பாட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குவிக் துடுப்பாட்டம் அல்லது கங்கா கிரிக்கெட் (ஆஸ்திரேலியா) என்றும், கிவி கிரிக்கெட் (நியூசிலாந்து) என்றும் அழைக்கப்படும் விளையாட்டானது, துடுப்பாட்டத்தின் அதிவேக பதிப்பாகும், இது பெரும்பாலும் குழந்தைகளை, முக்கிய விளையாட்டில் பங்கேற்க ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டது, பங்கேற்பு மற்றும் இன்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.[1][2][3]

விதிகள்[தொகு]

விதிகள் பலவற்றை துடுப்பாட்டத்தை தழுவி எடுத்திருந்தாலும், குவிக் துடுப்பாட்டம் ஒரு நெகிழி மட்டை , பந்து (பாதுகாப்பு காரணங்களுக்காக) , மற்றும் சட்டப்பூர்வமாக பந்து வீசப்படும் அதிகபட்ச அகலத்தைக் குறிக்க, நெகிழி கூம்புகள் ஆகியவற்றைக்கொண்டு விளையாடப்படுகிறது. ஆட்ட விதிமுறைகளை மாற்றியமைக்க முடிவதால், குழந்தைகள் அனைவரும் கிடைக்கக்கூடிய நேரத்தில் விளையாட முடியும். மேலும் ஆடுகளத்தின் அளவு பரிமாணங்களை மாற்றுவதன் மூலம் விளையாட்டை எளிதாகவோ கடினமாகவோ மாற்றலாம். ( அதாவது இலக்குக்குச்சிகளின் அகலம், அவற்றிற்கு இடையேயான தூரம் ஆகியனவற்றை மாற்றுவது, எகிறும் களத்தை அகலப்படுத்துதல் அல்லது குறுக்குவது, எல்லையை இழுப்பது அல்லது வெளியே தள்ளுவது போன்றவை).

உபகரணங்கள்[தொகு]

முறையான போட்டிகள்[தொகு]

ஐக்கிய இராச்சியத்தில் ஒரு கையால் பந்தை பிடித்தால் முழு அணியும் வெளியேற்றப்படுகிறது, மேலும் நெகிழிக் கூம்புகளுக்கு பதிலாக அருகிலுள்ள மரமோ மைல்கல்லோ எல்லையாக பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் ஆசுதிரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் இவ்விளையாட்டு மிக முறையானதாக திகழ்கிறது. மட்டையாளரின் இடது மற்றும் வலது காலுக்கு அடுத்ததாக கூம்புகள் வைக்கப்படுகின்றன (சுமார் ஒரு மீட்டர் தொலைவில்), இந்த கூம்புகளில் வரிப்பந்துகள் வைக்கப்படுகின்றன. ஆஸ்திரேலியாவில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பந்து வீச்சாளர், பிழைவீச்சோ அகலப் பந்தோ , இறந்த பந்தோ வீசினால், மட்டையாடும் நபர் கூம்புகளில் ஒன்றை அடித்து "இலவச மட்டையடி" பெறலாம் . மட்டையாளர் பந்தைத் தாக்கும் வரை களத்தடுப்பு வீரர்களால் நகர இயலாது.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "New South Wales Government, Department of Education and Training (NSW DET)". www.education.nsw.gov.au (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-18.
  2. Rundell, Michael (2009). "Kanga Cricket". Wisden Dictionary of Cricket. London: A&C Black. 
  3. "England and Wales Cricket Board (ECB) - The Official Website of the ECB". www.ecb.co.uk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-03-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குவிக்_துடுப்பாட்டம்&oldid=3890216" இலிருந்து மீள்விக்கப்பட்டது