உள்ளடக்கத்துக்குச் செல்

குவாய் சுங் கொள்கலன் முனையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குவாய் சிங் கொள்கலன் முனையத்தின் காட்சி

குவாய் சுங் கொள்கலன் முனையம் அல்லது குவாய் சுங் கொள்கலன் முனையங்கள் (Kwai Tsing Container Terminals) என்பது ஹொங்கொங், புதிய கட்டுப்பாட்டகம் பகுதியில், குவாய் சிங் மாவட்டத்தில், குவாய் சுங் நகரத்தில் கடல்வழி பொதிகள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் கொள்கலன் முனையங்களாகும். தமிழில் கொள்கலன் துறைகள் என்றும் அழைப்பர். இந்த கொள்கலன் முனையங்கள் உலகின் முதல் தரமான தற்கால வசதிகளைக் கொண்டுள்ளன. இவை இறெம்பளர் கால்வாய் ஊடாக குவாய் சுங் மற்றும் சிங் யீ தீவு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன.

வரலாறு

[தொகு]
இறெம்பளர் கால்வாய் ஊடாக முனையம் நோக்கி செல்லும் கப்பல்கள்
குவாய் சிங் தற்கால கொள்கலன் முனையத்தின் முகப்புக் கட்டடம்
குவாய் சிங் கொள்கலன் முனையத்தின் உட்புறக்காட்சி
இரவு நேரத்திலும் துடிப்பாக இயங்கும் முனையங்கள்

இந்த கொள்கலன் முனையங்களில் 1970 ஆம் ஆண்டு நான்கு முனையங்கள் (கப்பலில் பொதிகளில் ஏற்றி இறக்கும் மேடை) கட்டப்பட்டன. இந்தக் கட்டுமானப்பணிக்கான நிலத் தேவைக்காக இரண்டு சிறிய தீவுகள் சிதறடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டே இவை கட்டப்பட்டன. 1980 ஆம் ஆண்டு மேலும் இரண்டு முனையங்கள் கட்டப்பட்டு விரிவாக்கப் பெற்றது. அத்துடன் 1990 ஆம் ஆண்டு கல்லுடைப்பான் தீவு உடன் இணைக்கப்பட்டு மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டது. 2000 ஆம் ஆண்டு ஒன்பது முனையங்களாக விரிவடைந்தது. அதன் பின்னரெ "குவாய் சுங் கொள்கலன் முனையங்கள்" என பெயரிடப்பட்டது. இதில் ஒன்பதாவது முனையம் இரண்டு வடக்கு, கிழக்கு என இரண்டு பிரிவுகளாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு

[தொகு]

2007 ஆம் ஆண்டின் கணிப்பின் படி உலகத்தில் துடிப்பான முனையங்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அதாவது சிங்கப்பூர் முனையம், மற்றும் சங்காய் முனையங்களுக்கு அடுத்தப்படியான துடிப்பான முனையம் இதுவாகும்.

குவாய் சுங் கொள்கலன் முனையங்கள்

[தொகு]

ஒன்பது முனையங்களும் அவற்றின் இயக்குநர்கள் அல்லது இயக்கும் நிருவனங்கள்:

  • முனையம் 1 - தற்கால முனைய வரையறுக்கப்பட்ட நிறுவனம்
  • முனையம் 2 - தற்கால முனைய வரையறுக்கப்பட்ட நிறுவனம்
  • முனையம் 3 - டுபாய் பன்னாட்டு துறைகள் ஹொங்கொங் வரையறுக்கப்பட்ட நிறுவனம்
  • முனையம் 4 - ஹொங்கொங் பன்னாட்டு முனையங்களின் வரையறுக்கப்பட்ட நிறுவனம்
  • முனையம் 5 - தற்கால முனைய வரையறுக்கப்பட்ட நிறுவனம்
  • முனையம் 6 - ஹொங்கொங் பன்னாட்டு முனையங்களின் வரையறுக்கப்பட்ட நிறுவனம்
  • முனையம் 7 - ஹொங்கொங் பன்னாட்டு முனையங்களின் வரையறுக்கப்பட்ட நிறுவனம்
  • முனையம் 8 - (கிழக்கு) ஹொங்கொங் மற்றும் COSCO பசுபிக் நிறுவனம்)
  • முனையம் 8 (மேற்கு) - ஆசியா முனையங்களின் வரையறுக்கப்பட்ட நிறுவனம்
  • முனையம் 9 (North) - தற்கால முனைய வரையறுக்கப்பட்ட நிறுவனம்
  • முனையம் 9 (South) - ஹொங்கொங் பன்னாட்டு முனையங்களின் வரையறுக்கப்பட்ட நிறுவனம்

தகர்க்கப்பட்ட தீவுகள்

[தொகு]

இறெம்பளர் கால்வாய் நிர்மானப்பணிகளின் போது தகர்த்து தரைமட்டமாக்கப்பட்ட இரண்டு தீவுகளின் பெயர்கள்:

போக்குவரத்து கட்டுமாணம்

[தொகு]

இந்த முனையங்களின் கட்டுமானப் பணிகள் நடந்துக்கொண்டிருந்தப் போது குவாய் சுங் வீதியை குவாய் சுங் நகரத்திற்கும் கவுலூன் இரண்டிற்கும் இணைக்கப்பட்டது. அத்துடன் கொள்கலன் துறை வீதி குவாய் சிங் வீதியில் ஒரு கிளையானது. இந்த கிளைப்பாதை ஹொங்கொங்கில் உள்ள பல இடங்களிற்கான பிரதான வழங்கல் பாதையானது.

வெளியிணைப்பு

[தொகு]