குவாய்சோ
தலைமைச் செயலகம் | |
| வகை | சமூக வலைத்தளம் |
|---|---|
| வர்த்தகப் பெயர் | குவைசோயு |
| நிறுவனர்(கள்) | சுகுவா மற்றும் செங்கியியாவே |
| தலைமையகம் | பெய்ஜிங், சீனா ஹைடன் மாவட்டம் |
| முதன்மை நபர்கள் | சுகுவா - முதன்மை செயல் அலுவலர் (CEO) |
| தொழில்துறை | Internet |
| உரிமையாளர்கள் | சீன சைபர் நிர்வாகம் மற்றும் பெய்ஜிங் தொலைத்தொடர்பு வலையமைப்பு |
| உருவாக்குனர் | குவைசோ தொழில்நுட்பம் |
|---|---|
| இயக்கு முறைமை | ஆண்ட்ராய்ட்
ஐஒஸ் ஐபாட் ஒஸ் |
| மென்பொருள் வகைமை | காணொளி பகிர்தல் |
| இணையத்தளம் | kwai.com |
குவாய்சோ தொழில்நுட்பம் (Kuaishou) சீன அரசாங்கத்தின் கீழ் இயங்கும் ஒரு சமூக நிறுவனமாகும். இதன் தலைமைச் செயலகம் பெய்சிங்கில் உள்ள ஐடன் மாவட்டத்திலுள்ளது. 2011ஆம் ஆண்டில் சூ உவா [1] மற்றும் செங்கியிக்சியாவ் [2] ஆகியோரால் நிறுவப்பட்டு ஆங்காங்கு பங்கு சந்தையில் பதிவு செய்யப்பட்டது. இதன் நிறுவனர் கூகுள் மற்றும் பைடு நிறுவனங்களில் மென்பொருள் பொறியியலாளராக பணிபுரிந்தார்[3].
இந்நிறுவனர்கள் தொலைபேசியில் செயலிகள் மற்றும் ஒளிப்பதிவுகளை திருத்தம்(edit) செய்வதற்கான வலைத்தளங்களை உருவாக்கினர். இச்செயலியானது இன்ஸ்டாகிராம், பேஸ்புக் என்பவற்றிற்கு மாற்றீடாக உபயோகிக்கப்படுகிறது. இச்செயலியின் பெயர் 'க்வாய்-kwai' ஆகும்.[4]
இந்தோனேசியா, பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளில் [5]'ஸ்னாக் வீடியோ - snack video' என்னும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இச்செயலி சீனாவில் ஆரம்பத்தில் 'gif kuishou' என அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் 'Gifs' என்னும் ஆசை படங்களை உருவாக்கவும் பகிரவும் கூடியதாயிருந்தது. அதனை தொடர்ந்து 2012 இல் நிகழ்துண்டுபடம் 'short video' தயாரிக்கும் முறை பதிவுசெய்ய கூடியதாயிருந்தது.
வளர்ச்சியும் வீழ்ச்சியும்
[தொகு]2017 ஆம் ஆண்டு 350 அமெரிக்க டாலர்களை முதலீடாக பெற்றுக்கொண்டது. [6]இதில் 'டென்சென்ட் - tencent' என்னும் நிறுவனம் இட்டதே அதிகப்படியாக காணப்பட்டது. 2018 ஆம் ஆண்டில் 'போர்ப்ஸ் - Forbes' இன் கணக்கின் படி இதன் மதிப்பு 18 பில்லியன் அமெ. டாலர்கள்.

2019 ஆம் ஆண்டு தரவுகளின் அடிப்படையில்[7] 200 மில்லியன் பாவனையாளர்களை கொண்டுகாணப்பட்டது. கூகுள் பிலே மற்றும் ஆப்பிள் ஆஃப்ஸ்டோர் போன்றவற்றில் அதிகம் தரவிறக்கப்பட்ட வரிசையில் முக்கிய இடத்தைப்பெற்றது. இது 8 நோட்டுகளில் அறிமுகப்படுத்த பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு பிரேசிலில் இது அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் போட்டியாளராக[8] 'டூயின் - Douyin' என்னும் செயலி உள்ளது. இது சீனாவிட்கு வெளியில் 'டிக்ட்டோக் - Tiktok' என்னும் பெயரிலுள்ளது.
[9]இதன் வெளிநாட்டு நடவடிக்கைகள் '99 டாக்ஸி - 99 taxi' என்னும் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் ஆல் கண்காணிக்கப்படுகிறது. இந்நிறுவனத்திற்கு சீன சைபர் நிர்வாகத்தில் 'கோல்டன் ஷேர் - Golden Share' என்னும் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
2019 இல் குவைசோயு நிறுவனம் '' பீப்பிள்ஸ் டெய்லி - People's Daily'' என்னும் பத்திரிகையுடன் கூட்டு சேர்ந்தது. இப்பத்திரிகை சீன கம்யூனிஷ கட்சிக்கு உரித்துடையது. இதனால் குவைசோயு நிறுவனத்திற்கு AI-தொழில்நுட்பத்தை சோதிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது.
[10]2018 ஆம் ஆண்டில் இந்த நிறுவனத்திற்கு எதிராக 'சீன தேசிய தொலைக்காட்சி - China Central Television' பின்வரும் முறையீட்டை மேர்ட்கொண்டது. ''குவைசோயு நிறுவனம் பதின்மவயது பெண்களின் காணொளிகளை இத்தளத்தில் பிரசித்தப்படுத்துகின்றனர்,'' என்று இதனால் குறிப்பிட்ட காலத்திற்கு இந்நிறுவனம் தடைசெய்யப்பட்டிருந்தது.
2020 இல் ஆனி மாதம் சீன இந்தியா மோதல் காரணமாக; [11]இந்திய அரசால் தடைசெய்யப்பட்ட 58 செயலிகளில் இதுவும் உள்ளடங்கும். உபசெயலிகளை வெளியிட முயற்சித்தபோதும் அது பயனளிக்கவில்லை.
மீள்கட்டமைப்பு
[தொகு][12]2021 மாசி மாதத்தில் குவைசோயு ஹாங்காங் பங்கு சந்தையில் மீண்டும் காலடி எடுத்துவைக்கையில் 194% இற்கு பங்குவர்த்தகம் உயர்வடைந்தது. அதைத்தொடர்ந்து சீனா வலைப்பதிவு நிறுவனகளால் இடப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக இதன் பங்குகளில் 80% வீழ்ச்சி ஏற்பட்டது. 2021 மார்கழி மாதத்தில் இந்நிறுவனத்தை மீளக்கட்டமைக்கபோவதாக அறிவித்தது. இதன்போது 30% வேலையிழப்பு ஏற்பட்டது. [13]2022 ஐப்பசி மாதமளவில் பெய்ஜிங் தொலைத்தொடர்பு வலையமைப்பு - Beijing Radio and Television Station ஆனது சிறிதளவு பங்குகளை வாங்கியது. இது சீன கம்யூனிச கட்சிக்குட்பட்ட அமைப்பு ஆகும்.
2024 சித்திரை மாதம் [14]'பைனான்சியல் டைம்ஸ் - Finacial Times' இந்நிறுவனம் குறித்த ஒரு ஒரு கட்டுரை வெளியிட்டது. அதில் இந்நிறுவனம் ''லைம்ஸ்டோன் - Limestone'' என்னும் இரகசியத்திட்டத்தை மேற்கொள்வதாக அதில் கூறப்பட்டது. அதாவது ''30 வயது மற்றும் அதற்க்கு மேற்பட்டவர்களை வேலையிலிருந்து நீக்கும் திட்டமாகும்''.
2024 ஆனி மாதம் குவைசோயு நிறுவனம் மற்றும் சிச்சுவான் சர்வதேச தொலைதொடர்பாடல் நிலையம் இணைந்து சாவோ பவுலோ பிரேசிலில் ஒரு கிளையை தொடங்கியது. அதே நிறத்தில் குவைசோயு நிறுவனம் ''க்ளிங் - Kling'' என்னும் செயற்கை நுண்ணறிவு மென்பொருளை அறிமுகப்படுத்தியது. இதன் செயற்பாடானது: வசனமாக கொடுக்கப்பட்டவைகளை காணொளியாகவோ, புகைப்படமாகவோ மாற்றக்கூடியது. [15]இது 2 நிமிடங்களில் 1080P தரவகை காணொளிகளை உருவாக்கக்கூடியது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Synced (2019-08-12). "Tencent-backed Video App Kuaishou Is Turning Chinese Country Folk Into Hollywood Directors Synced". syncedreview.com. Archived from the original on 2019-09-02. Retrieved 2022-09-26.
- ↑ "Is short-video start-up Kuaishou too 'Zen' for China's internet culture?". South China Morning Post. 2019-06-20. Archived from the original on 2019-09-02. Retrieved 2022-09-26.
- ↑ "Su Hua". Archived from the original on 2019-09-02. Retrieved 2025-07-20.
{{cite web}}: CS1 maint: bot: original URL status unknown (link) - ↑ "covid 19".
- ↑ "Tencent". Archived from the original on 2019-09-03. Retrieved 2025-07-20.
- ↑ "Tencent".
- ↑ "South China Morning Post". Archived from the original on 2019-09-02. Retrieved 2025-07-20.
{{cite web}}: CS1 maint: bot: original URL status unknown (link) - ↑ "Douiyin". Archived from the original on 2019-09-02. Retrieved 2025-07-20.
{{cite web}}: CS1 maint: bot: original URL status unknown (link) - ↑ "Bloomberg.com". Archived from the original on 2021-07-22. Retrieved 2025-07-20.
{{cite web}}: CS1 maint: bot: original URL status unknown (link) - ↑ "The New York Times". Archived from the original on 2021-05-01. Retrieved 2025-07-20.
{{cite web}}: CS1 maint: bot: original URL status unknown (link) - ↑ "Apps Banned".
- ↑ "KrASIA". Archived from the original on 2022-01-13. Retrieved 2025-07-20.
{{cite web}}: CS1 maint: bot: original URL status unknown (link) - ↑ "South China Morning Post".
- ↑ "Kai, Waluszewski; Olcott, Eleanor".
- ↑ "VentureBeat".