குவானிடின் நைட்ரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குவானிடின் நைட்ரேட்டு
Ball-and-stick models of the constituent ions
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
குவானிடியம் நைட்ரேட்டு
இனங்காட்டிகள்
506-93-4 Y
ChemSpider 10049 Y
EC number 208-060-1
InChI
  • InChI=1S/CH5N3.HNO3/c2*2-1(3)4/h(H5,2,3,4);(H,2,3,4) Y
    Key: CNUNWZZSUJPAHX-UHFFFAOYSA-N Y
  • InChI=1/CH5N3.HNO3/c2*2-1(3)4/h(H5,2,3,4);(H,2,3,4)
    Key: CNUNWZZSUJPAHX-UHFFFAOYAZ
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10481
SMILES
  • [O-][N+](=O)O.[N@H]=C(N)N
பண்புகள்
CH6N4O3
வாய்ப்பாட்டு எடை 122.1
தோற்றம் வெண் திண்மம்
அடர்த்தி 1.436 கிராம்/செ.மீ3
உருகுநிலை 213 °C (415 °F; 486 K)
கொதிநிலை கொதிநிலைக்கு முன்பே சிதைவடையும்
160 கிராம்/லிட்டர் 20 °செல்சியசு வெப்பநிலையில்
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் MSDS
ஈயூ வகைப்பாடு ஒக்சியேற்றி O
R-சொற்றொடர்கள் R20 R21 R22 R36 R38
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

குவானிடின் நைட்ரேட்டு (Guanidine nitrate) என்பது [C(NH2)3]NO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற உப்பான இச்சேர்மம் தண்ணீரில் கரையக்கூடியதாகும். வாயுநிலை மின்னாக்கியாகவும் ராக்கெட்டுகளில் பயன்படுத்தப்படும் திட உந்து எரிபொருள் பயன்பாடுகள் போன்ற உயர் ஆற்றல் எரிபொருளாக பேரளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. குவானிடியம் நைட்ரேட்டு என்பது அலுவல்முறையாக இருந்தாலும் குவானிடின் நைட்ரேட்டு என்ற பெயர் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தயாரிப்பும் பண்புகளும்[தொகு]

குவானிடின் சேர்மத்துடன் நைட்ரிக் அமிலத்தைச் சேர்த்து நடுநிலையாக்கம் செய்வதால் இது உருவாக்கப்பட்டாலும் தொழிற்சாலைகளில் டைசயன்டையமைடுடன் அல்லது ஒரு கால்சியம் உப்புடன் அமோனியம் நைட்ரேட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்தே பேரளவில் தயாரிக்கிறார்கள் [1]. மாதிரி விமானங்களுக்காகத் தயாரிக்கப்படும் யெட்டெக்சு இயந்திரங்களில் ஒற்றை உந்து எரிபொருளாக இது பயன்படுகிறது.

குறைவான தீப்பற்றும் வெப்பநிலையும் அதிக வாயு வெளியீடும் கொண்டிருப்பதால் இது அதிகமாக விரும்பப்படுகிறது. குவானிடின் நைட்ரேட்டின் ஒற்றை ஒப்பு உந்துவிசை எண் 177 நொடிகளாகும். (கிலோநியூட்டன்.வினாடி/கிலோகிராம்) [note 1] குவானிடின் நைட்ரேட்டின் வெடித்துச் சிதைவடையும் வினையை பின்வரும் சமன்பாடு விளக்குகிறது.

H6N4CO3 (தி) → 3 H2O (வா) + 2 N2 (வா) + C (தி)

ஒரு ஆக்சிசனேற்றியாக இருப்பதால் இச்சேர்மம் வெடிக்கும் தன்மை கொண்டதாகவும் தீங்கிழைக்கும் சேர்மமாகவும் கருதப்படுகிறது. கண்கள், தோல் மற்றும் மூச்சுப்பாதை போன்றவை இச்சேர்மத்தால் பாதிக்கப்படுகின்றன[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1000 lbf/in2 (700 kPa) chamber pressure, 14.7 lbf/in2 (101 kPa) exit pressure, shifting equilibrium theoretical performance.
  1. 1.0 1.1 Thomas Güthner, Bernd Mertschenk and Bernd Schulz "Guanidine and Derivatives" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 2006, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a12_545.pub2

புற இனைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குவானிடின்_நைட்ரேட்டு&oldid=3345751" இலிருந்து மீள்விக்கப்பட்டது