குவாதர் மாவட்டம்
குவாதர் மாவட்டம் | |
|---|---|
மாவட்டம் | |
குவாதர் மாவட்டத்தில் ஓர்மாரா நகரம் | |
பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் குவாதர் மாவட்டத்தின் அமைவிடம் | |
| நாடு | |
| மாகாணம் | |
| கோட்டம் | மக்ரான் |
| நிறுவிய ஆண்டு | 1 சூலை 1977 |
| தலைமையிடம் | குவாதர் |
| பரப்பளவு | |
| • மாவட்டம் | 12,637 km2 (4,879 sq mi) |
| மக்கள்தொகை (2023) | |
| • மாவட்டம் | 3,05,160 |
| • அடர்த்தி | 24/km2 (63/sq mi) |
| • நகர்ப்புறம் | 1,59,035 (52.11%) |
| • நாட்டுப்புறம் | 1,46,125 (47.89%) |
| மொழிகள் | |
| • முக்கிய மொழிகள் | பலூச்சி மொழி |
| எழுத்தறிவு | |
| • சராசரி எழுத்தறிவு | 50.30% |
| நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்) |
| வருவாய் வட்டங்கள் | 5 |
| இணையதளம் | https://gda.gov.pk/about-gwadar |
குவாதர் மாவட்டம் (Gwadar District), பாகிஸ்தான் நாட்டின் தென்மேற்கில் உள்ள பலூசிஸ்தான் மாகாணத்தின் 36 மாவட்டங்களில் ஒன்றாகும். தெற்கு பலூசிஸ்தானில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் குவாதர் நகரம். இம்மாவட்டம் மக்ரான் கோட்டத்தில் உள்ளது. அரபிக்கடல் கடற்கரையில் அமைந்த இம்மாவட்டத்தில் குவாதர் துறைமுகம் அமைந்துள்ளது. சீனாவையும், குவாதர் துறைமுகத்தையும் இணைக்கும் சீனா–பாக்கித்தான் பொருளாதார பாதை இம்மாவட்டம் வழியாகச் செல்கிறது.
அமைவிடம்
[தொகு]பலூசிஸ்தான் மாகாணத்தில் தெற்கில் அமைந்த குவாதர் மாவட்டத்தின் தெற்கில் அரபிக்கடல், வடக்கில் ஈரானின் சீசுத்தானும் பலுச்சிசுத்தானும் மாகாணம், கிழக்கில் லாஸ்பெலா மாவட்டம், மேற்கில் கெச் மாவட்டம் மற்றும் ஆவாரன் மாவட்டங்களும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம்
[தொகு]இம்மாவட்டம் குவாதர் வட்டம், ஜிவானி வட்டம், ஓர்மரா வட்டம், பஸ்னி வட்டம், சண்ட்சர் வட்டம் என 5 வருவாய் வட்டங்களும் மற்றும் 18 ஒன்றியக் குழுக்களையும் கொண்டுள்ளது.
புவியியல்
[தொகு].

அரபிக்கடல் ஓரத்தில் 620 கிலோமீட்டர் நீளத்தில் அமைந்த குவாதர் மாவட்டம், பலூசிஸ்தான் மாகாணத் தலைநகரான குவெட்டா நகரத்திற்கு தென்மேற்கில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் வடக்கு எல்லையாக ஈரானின் சீசுத்தானும் பலுச்சிசுத்தானும் மாகாணம் உள்ளது. ஓமான் நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்த குவாதர் மாவட்டப் பகுதிகளை 1958ஆம் ஆண்டில் பாகிஸ்தான் அரசு விலை கொடுத்து பாகிஸ்தானுடன் இணைத்துக் கொண்டது. இம்மாவட்டத்தின் தலைமையிட நகரமான குவாதர் கடற்கரையில் குவாதர் துறைமுகம் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2023 பாக்கித்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி குவாதர் மாவட்டததின் மொத்த மக்கள் தொகை 3,05, 160 ஆகும். பாலின விகிதம் 100 ஆண்களுக்கு 111 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 50.30% ஆகும். இம்மாவட்ட மக்கள் தொகையில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 29.32% ஆக உள்ளது. இம்மாவட்ட மக்கள் தொகையில் 52.12% பேர் நகர்புறங்களில் வாழ்கின்றனர்.
சமயங்கள்
[தொகு]குவாதர் மாவட்டத்தில் இசுலாமியர்கள் 99.15% மற்றும் இந்து, கிறித்தவம்,சீக்கியம், பிற சமயத்தினர் 0.85% உள்ளனர்.[2]
மொழிகள்
[தொகு]குவாதர் மாவட்டத்தில் பலூச்சி மொழி 97.66%, சிந்தி மொழி 0.45%, பஞ்சாபி மொழி 0.42%, உருது மொழி 0.4% மற்றும் பிற மொழிகள் 1.07% பேசுகின்றனர்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Literacy rate, enrolments, and out-of-school population by sex and rural/urban, CENSUS-2023" (PDF).
- ↑ "7th Population and Housing Census - Detailed Results: Table 9" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ "Population by Mother Tongue, Sex and Rural/Urban, Census-2023" (PDF). Pakistan Bureau of Statistics.
வெளி இணைப்புகள்
[தொகு]- Gwadar District at www.balochistan.gov.pk
- District Gwadar பரணிடப்பட்டது 2018-02-01 at the வந்தவழி இயந்திரம் at www.balochistanpolice.gov.pk பரணிடப்பட்டது 6 நவம்பர் 2018 at the வந்தவழி இயந்திரம்
- Gwadar Development Authority
