உள்ளடக்கத்துக்குச் செல்

குவாட்ரில்லியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேற்கத்திய எண்முறையில் குவாட்ரில்லியன் என்பது ஓராயிரம் டிரில்லியன்களைக் (1000 X 1000 X 1000 X 1000 X 1000) குறிக்கும். ஒரு குவாட்ரில்லியன், 1,000,000,000,000,000 என எழுதப்படுகிறது. ஒன்றின் பின் 15 சுழிகள். அறிவியல் முறையில் எழுதும்போது, ஒரு டிரில்லியன், 1015 என எழுதப்படும்.

ஒரு குவாட்ரில்லியன் என்பது ஓராயிரம் நான்குமடி ஆயிரம் (1000 X 10004). இதே போல குவின்ட்டில்லியன் என்பது ஓராயிரம் ஐந்துமடி ஆயிரம் (1000 X 10005). இவ்வெண் முறையில் எண்களின் பெயர்கள் இவ்வாறு ஆயிரத்தின் பன்மடிகளாக அடுக்கப்பட்டு பெயர்சூட்டப்பட்டுள்ளன. முன்னொட்டுகளாகிய டிரி (tri), குவாட்(quard), குவின்ட் (quint) என்பன முறையே மூன்று, நான்கு, ஐந்து ஆகியவற்றைக் குறிக்கும் சொற்கள். எண்களைப்பற்றி, அனைத்துலக முறைப்படி வழங்கும் முன்னொட்டு சொற்களை அறிய SI முன்னொட்டுச் சொற்கள் என்னும் கட்டுரையைப் பார்க்கலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குவாட்ரில்லியன்&oldid=3777220" இலிருந்து மீள்விக்கப்பட்டது