உள்ளடக்கத்துக்குச் செல்

குவாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குவளையில் குவாசு
1990களில் குவாசு விற்பனை செய்யும் சிறுவிற்பனைக்கூடம் , இடம்: கலினின்கிராட், உருசியா

குவாசு (கிரந்தம்:குவாஸ்; உருசியம்:Квас; ஆங்கிலம்:Kvass) என்பது கருப்பு அல்லது கம்பு ரொட்டியில் (இலங்கை வழக்கு:பாண்) இருந்து நொதித்தல் மூலம் உருவாக்கப்படும் சிலாவியர்களின் மரபார்ந்த பானம் ஆகும். [1] [2] ரொட்டியின் நிறம் எவ்வாறு இருக்கின்றதோ அவ்வாறே நொதித்தல் மூலம் கிடைக்கும் பானத்தின் நிறமும் அமையும். இதில் அல்ககோல் அளவு 1.2%க்கும் குறைவாகவே உள்ளது, இதனால் உருசிய தரத்தின் படி குவாசு மதுபான வகைகளுக்குள் அடக்கப்படுவதில்லை.[1] ஒட்டுமொத்தமாக நோக்கின் அல்ககோல் அளவு மிகவும் குறைவானது.(0.05% - 1.0%).[3] வழமையாக இது பழங்கள், மூலிகைகள் போன்றன சேர்க்கப்பட்டும் உருவாக்கப்படுகின்றது. [4] சிலாவிய நாடுகளான உருசியா, பெலாருஸ், உக்ரெய்ன், லிதுவேனியா, லாட்வியா போன்ற நாடுகளிலும் மற்றும் சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து சென்ற ஏனைய நாடுகளிலும் இது மிகவும் பிரசித்தி பெற்றது. கோடை காலத்தில் ஒவ்வொரு தெருக்களின் ஓரத்தில் குவாசு விற்பனை செய்யும் சிறுவிற்பனைக்கூடத்தைக் கண்ணுறலாம்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 [1] Федеральное агентство по техническому регулированию и метрологии. ГОСТ Р 52409-2005 (полный текст)
  2. Kvass (Russian Fermented Rye Bread Drink) Recipe
  3. Ian Spencer Hornsey. A history of beer and brewing, page 8. Royal Society of Chemistry, 2003. "A similar, low alcohol drink (0.05% - 1.0%), kvass .. may be a "fossil beer"
  4. Katz, Sandor (2003). Wild Fermentation. White River Junction, VA: Chelsea Green Publishing Company. pp. 121. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-931498-23-7.
  5. Michael Jackson's Beer Hunter - Porter and kvass in St. Petersburg
"https://ta.wikipedia.org/w/index.php?title=குவாசு&oldid=3747673" இலிருந்து மீள்விக்கப்பட்டது