உள்ளடக்கத்துக்குச் செல்

குவாசா டாமன்சாரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குவாசா டாமன்சாரா
Kwasa Damansara

Logo
Map
குவாசா டாமன்சாரா is located in மலேசியா
குவாசா டாமன்சாரா
      குவாசா டாமன்சாரா
ஆள்கூறுகள்: 3°10′N 101°34′E / 3.167°N 101.567°E / 3.167; 101.567
நாடு மலேசியா
மாநிலம் சிலாங்கூர்
மாவட்டம்பெட்டாலிங் மாவட்டம்
அமைவு2012
பரப்பளவு
 • மொத்தம்9.39 km2 (3.63 sq mi)
நேர வலயம்மலேசிய நேரம் 08:00
அஞ்சல் குறியீடு
40160
தொலைபேசி+603-6151
இணையதளம்kwasadamansara.com.my
Kwasa Land Sdn Bhd
வகைதனியார் நிறுவனம்
நிறுவுகை2010; 16 ஆண்டுகளுக்கு முன்னர் (2010)
தலைமையகம்சுங்கை பூலோ, மலேசியா
முதன்மை நபர்கள்
  • டத்தோஸ்ரீ மைக்கேல் கே சி யாம் (தலைவர்)
  • முகமது அபீஸ் காசிம் (மேலாண்மை இயக்குநர்)
தொழில்துறைசொத்து மேம்பாடு
தாய் நிறுவனம்மலேசிய ஊழியர் சேமநிதி வாரியம்
இணையத்தளம்www.kwasadamansara.com.my

குவாசா டாமன்சாரா (மலாய்; ஆங்கிலம்: Kwasa Damansara); சீனம்: 桂莎白沙罗) என்பது மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டம், சுங்கை பூலோ மக்களவைத் தொகுதியில் அமைந்துள்ள ஒரு புதிய புறநகர்ப் பகுதி ஆகும்.[1]

கோலாலம்பூரின் மத்திய வணிக மாவட்டத்திலிருந்து வடமேற்கே 14 கி.மீ தொலைவில் இந்த நகர்ப்பகுதி அமைந்துள்ளது. இந்த நகர்ப்பகுதி அதன் தெற்கே கோத்தா டாமன்சாராவையும் வடக்கே சுங்கை பூலோவையும் எல்லையாகக் கொண்டுள்ளது.

2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட குவாசா டாமன்சாரா மேம்பாட்டுத் திட்டம் 2035-ஆம் ஆண்டு வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தத் திட்டம், 2010-இல் அறிவிக்கப்பட்ட 10-ஆவது மலேசியா திட்டத்தின் பெரும் கோலாலம்பூர் உத்திசார் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் (Greater Kuala Lumpur Strategic Development Project) ஒரு பகுதியாகும்.[2]

பின்னணி

[தொகு]

குவாசா டாமன்சாரா மேம்பாட்டுத் திட்டம் சுங்கை பூலோவில் உள்ள மலேசிய ரப்பர் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (RRIM) சொந்தமான 2330 ஏக்கர் (939-எக்டேர்) இடத்தில் அமைந்துள்ளது. 2010-ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் நஜீப் ரசாக், அந்த நிலம் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்படுவதாக அறிவித்தார்.

2012-ஆம் ஆண்டில், மலேசிய ஊழியர் சேமநிதி வாரியத்தின் துணை நிறுவனமான குவாசா லேண்ட் நிறுவனம், இந்த நிலத்தை RM 2.3 பில்லியனுக்கு வாங்கியது; மற்றும் முன்மொழியப்பட்ட நகர்ப்புற்த்திற்கான முதன்மை மேம்பாட்டாளராகவும் பணி அமர்த்தப்பட்டது.

அம்சங்கள்

[தொகு]

இந்த நகர்ப்புறம் சுங்கை பூலோ-சுபாங் ஜெயா சாலையில், சுங்கை பூலோவிற்கும் சுல்தான் அப்துல் அசீஸ் சா வானூர்தி நிலையத்திற்கும் இடையில் அமைந்துள்ளது. மேலும் அந்த வளாகம் குடியிருப்பு, வணிக, கல்வி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்தப் பகுதியில் இரண்டு விரைவுப் போக்குவரத்து நிலையங்கள் உள்ளன. மேலும் அப்பகுதியில் 150,000 பேர் குடியேறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.[3][4]

இந்த நகர்ப்புறத்தின் வடக்குப் பகுதி சா ஆலாம் நகர எல்லைக்குள் அமைந்துள்ளது. மற்றும் அதன் தெற்குப் பகுதி பெட்டாலிங் ஜெயாவில் உள்ளது.

போக்குவரத்து

[தொகு]

எம்ஆர்டி

[தொகு]

இந்த நகர்ப்புறம்  KG04   PY01  குவாசா டாமன்சாரா எம்ஆர்டி நிலையம்; மற்றும்  KG05  குவாசா சென்ட்ரல் எம்ஆர்டி நிலையம் ஆகிய இரு நிலையங்களால் சேவை செய்யப்படுகிறது.

ஊர்தி

[தொகு]

சுபாங் வானூர்தி நிலைய நெடுஞ்சாலை எனும் கூட்டரசு சாலை இந்த நகரத்திற்குள் செல்லும் முக்கிய சாலையாகும்.

வானூர்தி

[தொகு]

குவாசா டாமன்சாரா நகர்ப்பகுதி; சுபாங் வானூர்தி நிலையத்திலிருந்து (IATA: SZB) வடகிழக்கே 5.5 கிமீ தொலைவில் உள்ளது.

பேருந்து

[தொகு]

ரேபிட் கேஎல் பேருந்து T804 , குவாசா சென்ட்ரல் எம்ஆர்டி நிலையத்தையும்; சுபாங் வானூர்தி நிலைய முனையக் கட்டிடத்தையும் இணைக்கிறது.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Spanning close to 2,300 acres in size, this mixed development dares to be different, aspiring to merge the dynamism of a modern township with strong elements of nature". Kwasa Damansara. Retrieved 29 August 2025.
  2. ↑ "Kwasa Land to reap RM65mil income from Project R3-2 in Kwasa Damansara". The Star. 2015-03-04. http://www.thestar.com.my/Business/Business-News/2015/03/04/Kwasa-Land-to-reap-RM65mil-income-from-Project-R3-2-in-Kwasa-Damansara/?style=biz.
  3. ↑ "Kwasa deal builds hope, but EPF has to tread carefully". Free Malaysia Today. Retrieved 16 October 2021.
  4. ↑ "Weighing options for EPF's PJ land". The Edge Markets. Retrieved 16 October 2021.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குவாசா_டாமன்சாரா&oldid=4339902" இலிருந்து மீள்விக்கப்பட்டது