குவாசா சென்ட்ரல் எம்ஆர்டி நிலையம்
KG05 குவாசா சென்ட்ரல் | ||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
நிலையத்தின் வெளிப்புறக் காட்சி. | ||||||||||||||||
| பொது தகவல்கள் | ||||||||||||||||
| வேறு பெயர்கள் | Kwasa Sentral MRT Station Stesen MRT Kwasa Sentral சீன மொழி: 桂莎中央 | |||||||||||||||
| அமைவிடம் | குவாசா டாமன்சாரா, செக்சன் U4 சா ஆலாம், சிலாங்கூர், மலேசியா | |||||||||||||||
| ஆள்கூறுகள் | 3°10′11.69″N 101°33′53.26″E / 3.1699139°N 101.5647944°E | |||||||||||||||
| உரிமம் | எம்ஆர்டி நிறுவனம் | |||||||||||||||
| இயக்குபவர் | ரேபிட் ரெயில் | |||||||||||||||
| தடங்கள் | 9 காஜாங் | |||||||||||||||
| நடைமேடை | 2 பக்க நடை மேடைகள் | |||||||||||||||
| இருப்புப் பாதைகள் | 2 | |||||||||||||||
| கட்டமைப்பு | ||||||||||||||||
| கட்டமைப்பு வகை | உயர்த்தப்பட்ட நிலை | |||||||||||||||
| நடைமேடை அளவுகள் | 3 | |||||||||||||||
| தரிப்பிடம் | ||||||||||||||||
| துவிச்சக்கர வண்டி வசதிகள் | ||||||||||||||||
| மாற்றுத்திறனாளி அணுகல் | ||||||||||||||||
| மற்ற தகவல்கள் | ||||||||||||||||
| நிலையக் குறியீடு | KG05 | |||||||||||||||
| வரலாறு | ||||||||||||||||
| திறக்கப்பட்டது | KG05 16 திசம்பர் 2016 | |||||||||||||||
| சேவைகள் | ||||||||||||||||
| ||||||||||||||||
| ||||||||||||||||
குவாசா சென்ட்ரல் எம்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Kwasa Sentra MRT Station; மலாய்: Stesen MRT Kwasa Sentra) என்பது மலேசியா, சிலாங்கூர், குவாசா டாமன்சாரா செக்சன் U4 நகர்ப் பகுதியில்; எம்ஆர்டி காஜாங் வழித்தடத்தில் அமைந்துள்ள ஒரு விரைவுப் போக்குவரத்து நிலையம் ஆகும்.[1]
இதற்கு முன்னர் காஜாங் வழித்தடம் என்பது சுங்கை பூலோ-காஜாங் எம்ஆர்டி வழித்தடம் என்று அழைக்கப்பட்டது. எம்ஆர்டி காஜாங் வழித்தடத்தின் முதல் கட்ட நடவடிக்கைகளின் கீழ், இந்த நிலையம் திசம்பர் 16, 2016 அன்று திறக்கப்பட்டது.[2]
நிலைய அம்சங்கள்
[தொகு]குவாசா சென்ட்ரல் நிலையம், எம்ஆர்டி காஜாங் வழித்தடத்தில் ஓர் உயர்த்தப்பட்ட நிலையமாகும். இந்த நிலையத்துடன் ஒரு பெரிய ஊட்டி பேருந்து முனையம் (Feeder Bus Terminal); மற்றும் வாகன நிறுத்துமிடம் போன்ற வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன.
நிலைய இருப்பிடம்
[தொகு]இந்த நிலையம், எதிர்காலத் திட்டத்தில் உள்ள குவாசா டாமன்சாரா மேம்பாட்டுத் திட்ட வளாகத்திற்குள் அமைந்துள்ளது. அந்த வளாகத்திற்குள் அமைந்து இருக்கும் இரண்டு நிலையங்களில் குவாசா சென்ட்ரல் நிலையமும் ஒன்றாகும்; மற்றொரு நிலையம் குவாசா டாமன்சாரா எம்ஆர்டி நிலையம் ஆகும். குவாசா சென்ட்ரல் நிலையத்திற்கு அருகில் வேறு கட்டிடங்கள் எதுவும் இல்லை.
இந்த நிலையம் சுங்கை பூலோ சாலையில் இருந்து சற்றே தொலைவில் அமைந்துள்ளது. இருப்பினும் புதிதாக கட்டப்பட்ட ஒரு புதிய சாலையின் வழியாக குவாசா சென்ட்ரல் நிலையத்தை அணுகலாம்.
நிலையக் கட்டுமானத்திற்குப் பின்னர், அதன் பெயரை உறுதி செய்வதற்கு முன்னர், இந்தக் குவாசா சென்ட்ரல் நிலையம்; தாமான் இண்டஸ்ட்ரி சுங்கை பூலோ என்ற செயல்பாட்டுப் பெயரால் அறியப்பட்டது.
நிலைய அமைப்பு
[தொகு]| L2 | நடைமேடை தளம் | பக்க நடைமேடை |
| நடைமேடை 1 9 காஜாங் (→) காஜாங் KG35 (→) | ||
| நடைமேடை 2 9 காஜாங் (←) குவாசா டாமன்சாரா KG04 (←) | ||
| பக்க நடைமேடை | ||
| L1 | இணைப்புவழி | கட்டணப் பகுதிக்கான நுழைவாயிகள், நடைமேடைகளுக்கான நகரும் படிக்கட்டுகள், கட்டண இயந்திரங்கள், வாடிக்கையாளர் சேவை அலுவலகம், நிலையக் கட்டுப்பாடு, கடைகள் |
| G | தரை தளம் | நுழைவாயில் A,பேருந்து முனையம், வாடகை கார்கள் நிறுத்துமிடம், பணியாளர்கள் வாகனங்கள் நிறுத்துமிடம் |
வெளியேறும் வழிகள் - நுழைவாயில்கள்
[தொகு]இந்த நிலையம் நுழைவாயில் A மற்றும் நுழைவாயில் B என இரண்டு நுழைவாயில்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது, நுழைவாயில் A மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.
இந்த நுழைவாயில் A; ஊட்டி பேருந்து நிறுத்தம், வாடகை கார்கள் நிறுத்துமிடம், பயணிகள் இறங்குமிடம் போன்ற வசதிகளுக்கு வழிவகுக்கிறது. நுழைவாயில் B தற்போது மூடப்பட்டுள்ளது; நிலையத்தின் கிழக்குப் பகுதி மேம்படுத்தப்பட்ட பின்னர் திறக்கப்படும்.
| காஜாங் வழித்தட நிலையம் | |||
| நுழைவாயில் | இடம் | இலக்கு | தோற்றம் |
|---|---|---|---|
| A | நிலையத்தின் மேற்குப் பகுதி | பேருந்து நிற்குமிடம், கட்டண வாகனம் மற்றும் தனியார் வாகன நிறுத்துமிடம் | |
| B | நிலையத்தின் கிழக்குப் பகுதி | தற்போது மூடப்பட்டுள்ளது | |
பேருந்து சேவைகள்
[தொகு]| பேருந்து | தொடக்கம் | இலக்கு | பயணவழி | இணைப்பு | காட்சி |
|---|---|---|---|---|---|
| KG05 குவாசா சென்ட்ரல் நிலையம் | செக்சன் 6, 7, 8, 9, கோத்தா டாமன்சாரா | பெர்சியாரான் சுங்கை பூலோ பெர்சியாரான் சூரியன் ஜாலான் நூரி 7 ஜாலான் பெர்காசா 8/1 பெர்சியாரான் ஜாத்தி |
|||
| KG05 குவாசா சென்ட்ரல் நிலையம் | சுபாங் பெஸ்தாரி சுபாங் சூரியா |
சுங்கை பூலோ சாலை பெர்சியாரான் அங்காசா பெர்சியாரான் சக்கரவாலா உத்தாரிட் சாலை U5/3 பெர்சியாரான் அத்மோஸ்பியரா |
|||
| KG05 குவாசா சென்ட்ரல் நிலையம் | சுபாங் சூரியா சுபாங் 2 |
||||
| KG05 குவாசா சென்ட்ரல் நிலையம் | சுபாங் பெர்டானா சுபாங் நகரம் சுபாங் இஸ்கைபார்க் (சுல்தான் அப்துல் அசீஸ் சா வானூர்தி நிலையம் & KS03 இஸ்கைபார் நிலையம்) |
சுங்கை பூலோ சாலை சுபாங் பெர்டானா சாலை சுபாங் வானூர்தி நிலைய பழைய சாலை |
|||
| KG05 குவாசா சென்ட்ரல் நிலையம் | புக்கிட் சுபாங் | சுபாங் வானூர்தி நிலையம் |
காட்சியகம்
[தொகு]குவாசா சென்ட்ரல் எம்ஆர்டி நிலையக் காட்சிப் படங்கள் (2016 - 2025):
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kwasa Sentral MRT Station | mrt.com.my". mrt.com.my. Retrieved 31 August 2025.
- ↑ "Kwasa Sentral MRT station within future Kwasa Damansara City Centre". klia2.info. 29 January 2019. Retrieved 31 August 2025.
- ↑ RapidKL Route T801
- ↑ "RapidKL Route T802". Archived from the original on 2021-05-11. Retrieved 2025-08-31.
- ↑ "RapidKL Route T803". Archived from the original on 2021-04-20. Retrieved 2025-08-31.
- ↑ RapidKL Route T804 [தொடர்பிழந்த இணைப்பு]
வெளி இணைப்புகள்
[தொகு]
பொதுவகத்தில் குவாசா சென்ட்ரல் எம்ஆர்டி நிலையம் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.- Kwasa Sentral MRT station | mrt.com.my பரணிடப்பட்டது 2017-09-22 at the வந்தவழி இயந்திரம்
- Klang Valley Mass Rapid Transit
