குவலய மங்கலடைதல்
குவலய மங்கலடைதல் (Global dimming) என்பது பூகோள மேற்பரப்பில் விழுகின்ற நேரடி ஒளிக்கதிரின் அளவில் ஏற்படும் குறைவுபடலாகும். இது 1950 களில் முதன்முதலாக முறைப்படி அளவிடப்பட்டது. இதன் தாக்கம் இடத்திற்கு இடம் மாறுபடுமாயினும், கடந்த மூன்று பதின்மங்களில், அதாவது 1960 முதல் 1990 வரை உலகளாவிய இதன் குறைவுபடல் 4% ஆகக் காணப்படுகின்றது. எவ்வாறாயினும் 1991 இல் பின்னாறுபோ எரிமலையின் வெளிக்கிளம்பலுக்குப் பின் இந்த சதவீதத்தில் மாற்றம் ஏற்பட்டது.[1]
மனித நடவடிக்கைகளால் வளிமண்டலத்தில் சேரும் சல்பேட் தூசிப்படலம் முதலான துகள்களின் அதிகரிப்பினால் குவலய மங்கலடைதல் ஏற்படுவதாகக் கருதப்படுகின்றது. இது ஆவியாதலைக் குறைப்பதனால் நீரியல் வட்டம் பாதிப்புக்குள்ளவதுடன் மழை வீழ்ச்சியும் குறைகின்றது. குவலய மங்கலடைதல் பூகோள குளிர்ச்சியை ஏற்படுத்துகின்றது, இது பசுங்குடில் வாயு விளைவுகளுக்கு மறுதலையான விளைவுகளைத் தரக் கூடியது.
காரணங்களும் பாதிப்புகளும்
[தொகு]மனித நடவடிக்கைகள் காரணமாக வளிமண்டலத்தில் சேரும் தூசிப்படலம் மற்றும் துகள்களின் அதிகரிப்பினால் குவலய மங்கலடைதல் ஏற்படுவதாக நம்பப்படுகின்றது.[2] தூசிப்படலம் மற்றும் ஏனைய துகள்கள் சூரிய சக்தியை அகத்துறுஞ்சி வான்வெளிக்கு மீண்டும் தெறிப்படையச் செய்கின்றது. இந்த மாசாக்கிகள் முகில் நுண்துளிகளில் முகில் ஒடுக்கமுற்ற கருவாக அமைகின்றது. முகில்களில் உள்ள நீர்த்துளிகள் இத்துகள்களுடம் பிணைவு விசையல் இணைகின்றன.[3] இவ்வாறு மாசாக்கம் அதிகரிக்கும் போது அதிகளவு துகள்கள் ஏற்படுவதால் அதிக எண்ணிக்கையான துளிகளாக மாறுகின்றது (அதாவது ஒரே அளவு நீர் அதிக துளிகளில் பரவிக் கணப்படுதல்). இந்த துளிகள் அதிகளவு சூரிய ஒளியைத் தெறிப்படையச் செய்வதால் புவியை வந்தடையும் ஒளியின் அளவு குறைவடைகின்றது. அதன் தாக்கம் காரணமாக சூரியக் கதிர்வீச்சும் கீழ் வளிமணடலத்தில் பிடிக்கப்படுகின்றது. மாதிரிகளில் இத்தகைய சிறு துளிகள் மூலம் கிடைக்கும் மழைவீழ்ச்சியும் குறைவாகும்.[4]
முகில்கள் சூரியனிலிருந்து புவிக்கு வெப்பம் வன்தடைவதை தடுக்கும் அதே வேளை புவியிலிருந்து வெப்பம் கதிர்ப்பு மூலம் வெளியேறுவதையும் தடுக்கின்றது. இதன் தாக்கம் சிக்கலானதாகவும் நேரம், இடம், உயரம் என்பவற்றைப் பொறுத்து மாறுபடுவதாகவும் இருக்கும். பகல் நேரத்தில் சூரிய ஒளியைத் தடுத்து குளிர்ச்சியைத் தரும், இரவில் மீளக் கதிர்ப்படைந்து வெப்பம் வெளியேறுவதைத் தடுப்பதால் வெப்ப அதிகரிப்பு காரணமாக ஏற்படும் காற்றுச் சுழற்சி அதிக மழையால் வெள்ளம் ஏற்பட ஏதுவாகின்றது.
தட்டு ஆவியாதல் தரவு
[தொகு]கடந்த 50 ஆண்டுகளாக தட்டு ஆவியாதல் அவதானிக்கப்பட்டது. பல பதிம ஆண்டுகளாக தட்டு ஆவியாதல் அளவீடுகள் பற்றி யாரும் கருத்திலெடுக்கவில்லை.[சான்று தேவை]. ஆனால்1990களில் ஐரோப்பா, இஸ்ரேல் மற்றும் வட அமெரிக்காவில் அறிவியலாளர்கள் பெரியதொரு மாற்றத்தைச் சுட்டிக் காட்டினர். அதாவது ஆவியாதல் வீதம் பூகோள வேப்பமடைதலுடன் அதிகரிப்பது எதிர்பார்க்கப்பட்ட அதே வேளை அதில் வீழ்ச்சி காணப்பட்டது.[5] இதே காலப் பகுதியில் ஒத்த போக்குகள் சீனாவிலும் அவதானிக்கப்பட்டது. சூரிய கதிர்வீச்சு குறைவுபட்டமை ஒரு செலுத்து விசையாகக் காட்டப்பட்டது. ஆயினும் உலகின் மாற்றப் பகுதிகளைப் போலல்லாது சீனாவின் குறைந்த ஒளிவீச்சு முகில்களின் மூடல் அதிகரிப்புடனோ மழைவீச்சியுடனோ தொடர்பு படவில்லை. இதனால் வளிமண்டல தூசு சீனாவில் சூரிய ஒளியை குறைவுபடச் செய்வதில் முக்கிய ஏதுவாகப் பார்க்கப்பட்டது.[6]பிபிசி கொறைசன் நிகழ்ச்சி தயாரிப்பாளர் டேவிட் சிங்டன் பல்வேறு கால நிலை மாற்றம் சார் அறிவியலாளார்கள் குவலய மங்கலடைதலில் தட்டு ஆவியாதல் தரவு ஒரு முக்கிய ஆதாரமாக நம்புகிறார். [7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Hegerl, G. C.; Zwiers, F. W.; Braconnot, P.; Gillett, N.P.; Luo, Y.; Marengo Orsini, J.A.; Nicholls, N.; Penner, J.E.; Stott, P.A. (2007). "Chapter 9, Understanding and Attributing Climate Change – Section 9.2.2 Spatial and Temporal Patterns of the Response to Different Forcings and their Uncertainties" (PDF). In Solomon, S.; Qin, D.; Manning, M.; Chen, Z.; Marquis, M.; Averyt, K.B.; Tignor, M.; Miller, H.L. (eds.). Climate Change 2007: The Physical Science Basis. Contribution of Working Group I to the Fourth Assessment Report of the Intergovernmental Panel on Climate Change. Intergovernmental Panel on Climate Change. Cambridge, United Kingdom and New York, NY, USA.: கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். பார்க்கப்பட்ட நாள் 2008-04-13.
See 9.2.2.
{{cite book}}
: Unknown parameter|displayauthors=
ignored (help) - ↑ Keneth L. Denman; Guy Brasseur; et al. (2007). "Couplings between changes in Climate System and the Biogeochemistry, 7.5.3" (PDF). IPCC. Archived from the original (PDF) on 2011-03-15. பார்க்கப்பட்ட நாள் 2008-04-09.
- ↑ "The Physical Basis for Seeding Clouds". Atmospherics Inc. 1996. Archived from the original on 2008-04-08. பார்க்கப்பட்ட நாள் 2008-04-03.
- ↑ Yun Qian; Daoyi Gong; et al. (2009). "The Sky Is Not Falling: Pollution in eastern China cuts light, useful rainfall". Pacific Northwest National Laboratory. பார்க்கப்பட்ட நாள் 2009-08-16.
- ↑ Roderick, Michael L.; Farquhar, Graham D. (2002). "The Cause of Decreased Pan Evaporation over the Past 50 Years". Science 298 (5597): 1410–1411. doi:10.1126/science.1075390. பப்மெட்:12434057. Bibcode: 2002Sci...298.1407D. http://www.sciencemag.org/cgi/content/abstract/298/5597/1410.
- ↑ Liu B.; Xu M.; Henderson M.; Gong W. (2004). "A spatial analysis of pan evaporation trends in China, 1955-2000". Journal of Geophysical Research 109 (D15): D15102. doi:10.1029/2004JD004511. Bibcode: 2004JGRD..10915102L. http://www.agu.org/pubs/crossref/2004/2004JD004511.shtml. பார்த்த நாள்: 2018-04-18.
- ↑ Sington, David (January 15, 2005). "TV&Radio follow-up". பிபிசி - Science & Nature - Horizon. http://www.bbc.co.uk/sn/tvradio/programmes/horizon/dimming_qa.shtml.