குவகாத்தி மத்திய சிறை

ஆள்கூறுகள்: 26°06′29″N 91°45′23″E / 26.108032°N 91.756340°E / 26.108032; 91.756340
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குவகாத்தி மத்திய சிறை
Guwahati Central Jail
குவகாத்தி மத்திய சிறை is located in அசாம்
குவகாத்தி மத்திய சிறை
அசாமில் அமைவிடம்
குவகாத்தி மத்திய சிறை is located in இந்தியா
குவகாத்தி மத்திய சிறை
குவகாத்தி மத்திய சிறை (இந்தியா)
இடம்குவகாத்தி, அசாம்
அமைவு26°06′29″N 91°45′23″E / 26.108032°N 91.756340°E / 26.108032; 91.756340
நிலைஇயங்குகிறது
பாதுகாப்பு வரையறைஅதிகம்
கொள்ளளவு1000
கைதிகள் எண்ணிக்கை15 மே 2018 இன் படி 1284
திறக்கப்பட்ட ஆண்டு1881[1]
முந்தைய பெயர்{{{former_name}}}
நிருவாகம்அசாம் சிறைத் துறை

குவகாத்தி மத்திய சிறை (Guwahati Central Jail) இந்தியாவின் அசாம் மாநிலத்திலுள்ள குவகாத்தி நகரின் மையத்தில் அமைந்துள்ளது.[2] அசாம் மாநிலத்தில் அமைந்துள்ள 31 சிறைகளில் இதுவும் ஒன்றாகும். உண்மையான சிறைச்சாலையின் 11 ஏக்கர் பரப்பளவு உட்பட சிறைச்சாலையின் மொத்த பரப்பளவு 28 ஏக்கர்களாகும். இங்கு 900 ஆண் கைதிகள் மற்றும் 100 பெண் கைதிகள் என மொத்தம் 1000 கைதிகளை சிறை வைக்க திட்டமிட்டு கட்டப்பட்டுள்ளது.

வரலாறு[தொகு]

குவகாத்தியில் முதல் சிறைச்சாலை 1881 ஆம் ஆண்டில் 500 கைதிகள் கொள்ளளவு கொண்ட பேன்சி பசார் என்ற பகுதியில் அமைக்கப்பட்டது. பின்னர் இது 2010 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 10 அன்று தேசிய நெடுஞ்சாலை எண் 37 இல் அமைந்துள்ள சருசயாய் பகுதிக்கு மாற்றப்பட்டது, தற்போது 1000 கைதிகள் சிறை வைக்கப்படும் அளவுக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் புதிய சிறை திறக்கப்பட்டபோது 805 கைதிகள் அங்கு மாற்றப்பட்டனர். இப்புதிய சிறை குவகாத்தி நகரின் மையத்தில் அமைந்துள்ளது.[1]

வேலை நிறுத்தம்[தொகு]

2020 ஆம் ஆண்டு சூன் மாதம் 29 அன்று கிருசக் முக்தி சங்கிராம் சமிதி அமைப்பின் நிறுவனர் விவசாய தலைவர் அகில் கோகோய் 200 நாட்கள் சிறைத்தண்டனை நிறைவு செய்தபோது, மத்திய சிறையில் 1200 கைதிகள் உண்ணாவிரதத்தை அறிவித்தனர். கோகோயை விடுவிக்கவும் கோவிட் -19 தொடர்பான கோரிக்கைகளை . தொடர்புடைய அதிகாரிகளுக்கு தெரிவிக்கவும் கைதிகள் இந்த உண்ணாவிரப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.[3]

முக்கியமான கைதிகள்[தொகு]

  1. மணிப்பூரை தளமாகக் கொண்ட ஐக்கிய தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் ராச்குமார் மேகன் அசாம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு குவகாத்தி மத்திய சிறையில் வைக்கப்பட்டார். இவர் முதலில் செப்டம்பர் 29, 2010 அன்று வங்கதேச முகவர்களால் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது, அதன்பிறகு அசாம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தேசிய புலனாய்வு அமைப்பால் குற்றம் சாட்டப்பட்டார். . சிறைச்சாலைக்கு இவர் அளித்த பங்களிப்புகளான இசைப் பள்ளி, கைதிகளுக்கான நூலகம், குவகாத்தி மத்திய சிறை வளாகத்திற்குள் ஒரு பாறைச் சிற்பத் தோட்டம் அமைத்தல் போன்ற காரணங்களால் இவரது 10 ஆண்டு சிறைத் தண்டனை குறைக்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு நவம்பர் 9 அன்று விடுவிக்கப்பட்டார்.[4]
  2. இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டப் போராட்ட செயற்பாட்டாளர் சார்யீல் இமாம், 2020 ஆம் ஆண்டு சனவரி 28 அன்று தில்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இச்சிறையில் அட்டைக்கப்பட்டார். இவரது பேச்சு சாமியா மில்லியா இசுலாமியா பல்கலைக்கழகத்தில் கலவரங்களுக்கு வழிவகுத்து மக்களிடையே பகைமையை வளர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "The captive humans: Life in Central Jail, Guwahati". Guwahati Plus. 1 August 2016. பார்க்கப்பட்ட நாள் 1 ஆகத்து 2020.
  2. "Central Jail". Wikimapia. Guwahati. பார்க்கப்பட்ட நாள் 1 August 2020.
  3. "Assam: Prisoners Go on Hunger Strike Demanding Akhil Gogoi's Release". The Wire. 30 June 2020. https://m.thewire.in/article/rights/assam-akhil-gogoi-prison-covid-19-hunger-strike. 
  4. Choudhury, Ratnadip (10 November 2019). "Top Manipur Rebel Leader Released From Jail Ahead Of Naga Peace Deal". என்டிடிவி. https://www.ndtv.com/india-news/rajkumar-meghen-top-manipur-rebel-leader-released-from-jail-ahead-of-naga-peace-deal-2130336. 
  5. Saha, Abhishek (22 July 2020). "Student activist Sharjeel Imam tests positive for Covid-19 in Guwahati jail". இந்தியன் எக்சுபிரசு. https://indianexpress.com/article/india/student-activist-sharjeel-imam-tests-positive-for-covid-19-in-guwahati-jail/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குவகாத்தி_மத்திய_சிறை&oldid=3316058" இலிருந்து மீள்விக்கப்பட்டது