உள்ளடக்கத்துக்குச் செல்

குவகாத்தி தேயிலை ஏல மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குவகாத்தி தேயிலை ஏல மையம் (Guwahati Tea Auction Centre) இந்தியாவின் அசாம் மாநிலம், குவகாத்தி நகரில் அமைந்துள்ளது. உலகின் பரபரப்பான தேயிலை வர்த்தக வசதிகளில் ஒன்றாக இம்மையம் கருதப்படுகிறது. மையத்தின் முதன்மையான விற்பனைப் பொருள் அசாம் தேயிலை ஆகும்.[1]

1970 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25 ஆம் நாள் குவகாத்தி தேயிலை ஏல மையம் நிறுவப்பட்டது. உலகில் நொறுக்கி கிழித்து சுருட்டு முறையில் தயாரிக்கும் தேயிலை ஏலத்தின் மிகப்பெரிய விற்பனை குவகாத்தி தேயிலை ஏல மையம் கண்டுள்ளது.

தேயிலை வர்த்தகத்தின் நான்கு பிரிவுகளான விற்பனையாளர்கள், தரகர்கள், வாங்குபவர்கள் மற்றும் பண்டகசாலையினர் என நான்கு பிரிவினரும் தேயிலை ஏல மையத்தில் உறுப்பினர்களாகச் சேர்ந்து பின்னர் மாநில அரசின் கூட்டு முயற்சியுடன் இங்கு வணிகம் நடைபெறுகிறது.

குவகாத்தி தேயிலை ஏலக் குழு அதன் பல்வேறு துணைக்குழுக்களுடன் ஒருங்கிணைந்து தொடர்புடைய நான்கு பிரிவுகளின் செயல்பாடுகளையும் எளிதாக்குகிறது. விதிகள் எந்தவொரு பிரிவினாலும் மீறப்படவில்லை என்பதை குழு அமல்படுத்துகிறது. வாராந்திர ஏலங்கள் சீராக செயல்படுவதையும் இக்குழு உறுதிசெய்கிறது மற்றும் அரசாங்க நிறுவனங்களுடன் தொடர்பு கொள்ளும் நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "About Guwahati Tea Auction Centre". Archived from the original on 7 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 4 July 2007. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

புற இணைப்புகள்[தொகு]

.