குழிப்பாடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குழிப்பாடம்அறுவடை செய்து வாட விடப்பட்ட செடிகளை 3 மீ விட்டமும் 3.6மீ ஆழமும் கொண்ட சிமெண்ட் பூசப்பட்ட குழிகளில் நிரப்பி காற்று வெளியேறுமாறு அடுக்கி மென்மையாக மிதிக்க வேண்டும். குழிகள் முழுவதும் செடிகளை இட்டு நிரப்பியவுடன் மேற்பரப்பை சாக்குத்துணியால் மூடி மண்ணால் பூசி விட வேண்டும்.[1] 2 வாரங்களுக்குப்பின் இச்செடியை குழியிலிருந்து வெளியே எடுக்க வேண்டும். பின்பு இலைகளை தண்டுடன் சேர்த்து உரிக்க வேண்டும். பின்பு 2-3 நாட்களுக்கு மூங்கில்களால் கட்டப்பட்ட சாரங்களில் தொங்கவிட்டு வெய்யிலில் காய வைக்க வேண்டும். காய்ந்த இலைகளை கொட்டகைகளில் அம்பாரமாக அடுக்கி 4-5நாட்கள் இடைவெளியில் திருப்புதல் வேண்டும். இவ்வாறு செய்யும்போது இலைகளின் மேல் வெண்படலங்கள் உண்டாகி பழவாசணையையும் அளிக்கிறது.


ஆதாரம்[தொகு]

  1. தமிழ்நாடு பாடநூல் வேளாண் செயல்முறைகள் கருத்தியல் நூலில் 116ம் பக்கத்தில் உள்ளது
"https://ta.wikipedia.org/w/index.php?title=குழிப்பாடம்&oldid=2339847" இருந்து மீள்விக்கப்பட்டது