குழிப்பந்தாட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(குழிப்பந்து விளையாட்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குழிப்பந்தாட்டம்
Golfer swing.jpg
குழிப்பந்தை அடித்த பிறகு நிறைவு நிலையில் ஒரு வீரர்
முதலில் விளையாடியது 15 ஆம் நூற்றாண்டு, இசுக்காட்லாந்து
விளையாட்டைப் பற்றிய குறிப்புகள்
தொடர்பு இல்லை
பகுப்பு/வகை திறந்த வெளி ஆட்டம்
கருவிகள் கால்ஃப் கிளபின், கோல்ஃ ​​பந்து
தற்போதைய நிலை
ஒலிம்பிக் 1900, 1904, 2016,[1] 2020 [2]
Armedforces jeffery tee shot.jpg

குழிப்பந்தாட்டம் அல்லது கோல்ஃப் (Golf) விளையாட்டு சுமார் 500 வருடங்களுக்கு முன் இசுக்காட்லாந்திலிருந்து தொடங்கியது. கோல்ஃப் மட்டை 'க்ளப்' (Club) எனப்படும், இந்த அடிகோல் (கிளப்) கொண்டு வெண்பந்தை மைதானத்திலுள்ள இடர்களில் மாட்டிக் கொள்ளாமல் சிறிய குழிக்குள் தள்ளுவதே ஆட்டம். பொதுவாக நன்கு பராமரிக்கப்படும், கவனத்துடன் உருவாக்கப்பட்ட 9 அல்லது 18 குழிகள் கொண்டது ஒரு ஆட்டமைதானம் (கோர்சு). இந்தக் குழிகளில் ஒவ்வொன்றாக மிகக் குறைந்த எண்ணிக்கையிலான தட்டுகள் அல்லது அடிகள் (Stroke) மூலம் பந்தை விழச் செய்பவரே வெற்றி பெற்றவர். ஒவ்வொரு குழிக்கும் ஒரு பார் அல்லது சமம் மதிப்பு உண்டு. இது 3 இலிருந்து 5 வரை இருக்கும். 18 குழிகளுள்ள ஒரு ஆட்டமைதானத்திற்கு 72 அடிகள் சமம் ஆகும். இந்த எண்ணிக்கையில் ஆடுபவருக்கு குறை (ஹண்டிகேப்) 0 ஆகும். ஒருவர் 75 அடிகளில் அனைத்துக்குழிகளிலும் பந்தை இட்டால் அவரது குறை 3 ஆகும்.

அமெரிக்காவின் புளோரிடா கடற்கரையில் அமைந்துள்ள சாகிராசு கோல்ப் மைதானத்தின் புகழ்பெற்ற 17வது குழி

கோல்ஃப் மைதானங்கள் மிகப் பெரியவையாக இருப்பதால், வீரர்கள் சில சமயம் சிறு மின்கல ஊர்திகளில் குழிகளுக்கிடையே பயணம் செய்வதும் உண்டு. இது வணிக உலகில் மிக மதிப்பு பெற்ற விளையாட்டாக இருப்பதால், இப்போட்டிகளில் பரிசுத் தொகையும், புகழும் அதிகம்.

  • இந்த விளையாட்டில், தொடக்கக் காலங்களில் பெண்கள் விளையாட அனுமதிக்கப்படவில்லை...இந்த விடயத்தைத் தெரிவிக்கும் ஆங்கிலச் சொற்றொடரான Gentlemen Only, Ladies Forbidden என்பதிலுள்ள சொற்களின் முதலெழுத்தைக்கொண்டே இந்த விளையாட்டிற்கு GOLF எனப் பெயரிடப்பட்டது...தற்காலத்தில் பெண்களும் ஆட அனுமதிக்கப்படுகின்றனர்.

மட்டைகள்[தொகு]

ஒரு கோல்ஃ ​​பந்தை விரைந்து இயக்க தயாராக நிலைப்படுத்தப்பட்ட ஒரு மர புட்டர் வகை மட்டை

புட்டர் (Putter) என்று மூன்று வகை மட்டைகள் உபயோகப்படுத்தப்படும். இவற்றிலும் மட்டை நுனியின் தடிமன் மற்றும் கணம் பல வேறுபாடுகள் உண்டு. ஆட்டவீரர்கள் ஓர் ஆட்டத்தில் 14 மட்டைகள் வரை பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்படுவர்.

மரம் - இவ்வகை மட்டைகளைப் பயன்படுத்தி முதல் சில த்ட்டுகளை அல்லது அடிகளை ஆடுவார்கள். இது பந்தை நீண்ட தொலைவு அடிக்க பயன்படுத்தப்படும். சாதாரணமாக 220 மீட்டர் முதல் 180 மீட்டர் வரை பந்தை செலுத்த இதனைப் பயன்படுத்தலாம்.

இரும்பு - இது 1 முதல் 10 வரை எண் கொண்ட வேறுபட்ட எடை கொண்டது. 175 மீட்டர் தூரம் முதல் குழி உள்ள பசுந்தரை (Putting Green) வரை பந்தைச் செலுத்த இரும்பு அடிகோல்களைப் (கிளப்-களை) பயன்படுத்தலாம்.

புட்டர் - குழி அமைந்துள்ள பசுந்தரையை (Putting Green) அடைந்த பின்னர் இவ்வகை மட்டையைக் கொண்டு பந்தின் மிக அருகில் நின்று மெதுவாக தட்டி பந்தை குழியை நோக்கி உருட்டுவார்கள்.

கோல்ஃப் மட்டை வீச்சு (Swing)[தொகு]

பந்தை நீண்ட தொலைவு செல்லுமாறு அடிப்பதற்கு, அருமையான மட்டை வீச்சு முறையை பயில்வது மிக முக்கியம். பந்தை முதலில் அடிக்கும் போது டீ (Tee) எனும் ஒரு சிறிய ஆணியைத் தரையில் பொருத்தி அதன் மீது பந்தை வைத்து அடிக்க வேண்டும். அப்பொழுது அதன் பின்னரும் நமது வீச்சின் முழு வேகமும் பந்தை செலுத்த, அந்த வீச்சு தரையிலோ அல்லது ஆணியிலோ படாமல் பந்தின் மீது மட்டும் பட வேண்டும். சிறந்த வீரர்கள் அருமையான வீச்சு உடையவர்களாக இருப்பார்கள்.

விளையாட்டில் பயன்படுத்தப்படும் சொற்கள்[தொகு]

  • பார் (par)- காட்டாக 4 அடிக்குள் பந்தை குழிக்குள் தள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பெற்று இருந்தால், விளையாடுபவர் 4 அடிகள் மட்டுமே எடுத்துக்கொண்டால் அதற்கு பார் என்று பெயர்.
  • பேர்டி (birdie) - விளையாடுபவர் 3 அடிகள் எடுத்துக்கொண்டால் அதற்கு பேர்டி என்று பெயர். அதாவது பார் என்பதற்கு ஓர் அடி குறைவாக தேவைப்படுமாறு அடித்தால்.
  • ஈகிள் (eagle) - விளையாடுபவர் 2 தட்டுகள் அல்லது அடிகள் எடுத்துக்கொண்டால் அதற்கு ஈகிள் என்று பெயர். அதாவது பார் என்பதற்கு இரண்டு அடிகள் குறைவாக எடுத்தல். பார்-உக்கு மூன்று அடி குறைவாக எடுத்துக்கொண்டால் அதை இரட்டை ஈகிள் (double eagle) என்பர்.
  • போகி (boggy)- விளையாடுபவர் 5 அடிகள் எடுத்துக்கொண்டால் அதற்கு போகி என்று பெயர். அதாவது பார்-உக்கு அதிகமாக ஓர் அடி எடுத்தால். பார்-உக்கு அதிகமாக இரண்டு அடிகள் எடுத்தால் அதை இரட்டை போகி (double boggy) என்பர்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Olympic sports of the past". Olympic Movement. பார்த்த நாள் 29 March 2009.
  2. Associated Press file (9 October 2009). "Golf, rugby make Olympic roster for 2016, 2020". cleveland.com. பார்த்த நாள் 23 September 2010.


"https://ta.wikipedia.org/w/index.php?title=குழிப்பந்தாட்டம்&oldid=2137689" இருந்து மீள்விக்கப்பட்டது