குழாய்த்தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொழிலக குழாய்த்தொகுதி

குழாய்த்தொகுதி (Manifold) என்பது அகலமான (அ) பெரிய குழாய் அல்லது கால்வாய் போன்ற தோற்றமைப்பு ஆகும். இதனுள்ளே சிறிய குழாய்கள் அல்லது கால்வாய் பொருத்தப்படும்.[1]

இது திரவ/வாயுக்களின் ஓட்டத்தினை கட்டுப்படுத்தவும், திரவம் மற்றும் வாயுக்கள் பாயும் திசையை மாற்றிவிடவும் பயன்படுகிறது.

பொறியியல் துறையில் குழாய்தொகுதியின் வகைகள்:

  • வெளியேற்றும் குழாய்த்தொகுதி (Exhaust manifold) என்பது வாகன இயந்திரத்திலுள்ள பல்வேறு கலனிலிருந்து (Cylinder) வெளியேறும் வாயுக்களை ஒரே குழாய் வழியே அனுப்பும் பகுதி ஆகும்.
  • நீரழுத்த குழாய்த்தொகுதி (Hydraulic manifold) என்பது நீரழுத்த இயந்திரத்தின் உள்ளே செல்லும் திரவங்களை கட்டுப்படுத்துகிறது. இது மேலும் இயக்கிக்கும் (Actuator), எக்கிக்கும் (Pump) இடையே பாயும் சக்தியை கட்டுப்படுத்துகிறது.
  • இன்லெட் குழாய்த்தொகுதி (Inlet manifold) என்பது இயந்திரத்தில் கலனுக்குள்ளே செல்லும் காற்றினையும், எரிபொருளையும் கலக்கும் பகுதியாக உள்ளது.
  • குழாய்த்தொகுதி (ஸ்குபா) என்பது ஸ்குபா இயந்திரத்தில் இரண்டு மூன்று நீர்முழ்கி கலனை ஒன்றாக கலக்க பயன்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குழாய்த்தொகுதி&oldid=3890223" இலிருந்து மீள்விக்கப்பட்டது