குழந்தை நோய்கள்

From விக்கிப்பீடியா
Jump to navigation Jump to search

குழந்தை நோய்கள்

குழந்தைகள் பராமரிப்பு என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. ஒரு குறிப்பிட்ட வயது வரை குழந்தைகளின் நோயெதிப்பு சக்தி குறைவாக இருப்பதால் அவர்களை எளிதாக நோய்கள் தாக்க வாய்ப்புள்ளது. அந்தவகையில் கீழ்க்கண்ட நோய்கள் குழந்தைகளை எளிதாக தாக்குகின்றன.

காய்ச்சல்

இருமல்

வயிற்று போக்கு

காது வலி

அம்மைநோய்

உணவு அழற்சி

காய்ச்சல்

வாந்தி

காய்ச்சல்

குழந்தைகளுக்கு காய்ச்சல் [1]ஏற்பட்டால் சதா அழுது கொண்டே இருப்பார்கள். உடல் வெப்ப நிலை அதிகமாக இருக்கும். 98 டிகிரி பாரன்ஹீட்டை விட அதிகமாக இருக்கும்.

இருமல்

குழந்தைகளுக்கு சளி பிடித்த சமயங்களில் இருமல் ஏற்படுகிறது. சுவாச பாதையில் ஏற்படும் தொற்றால் இது ஏற்படுகிறது.

வயிற்று போக்கு, வாந்தி

பொதுவாக பிறந்த குழந்தைகளுக்கு வயிற்று போக்கு, வாந்தி அடிக்கடி ஏற்படும். கொடுக்கப்படும் உணவுப் பொருட்கள் சரியாக சீரணிக்காமல் இருந்தால் இந்த மாதிரியான பிரச்சனைகள் ஏற்படுகிறது.

உணவு அழற்சி

குழந்தைகளுக்கு [2]கொடுக்கப்படும் சில உணவுப் பொருட்களான முட்டை, பால், கோதுமை, நட்ஸ், மீன்கள் போன்றவை அழற்சியை ஏற்படுத்தலாம்.

கவனிக்க வேண்டியவை

மேற்கண்ட நோய்களின் அறிகுறிகள் தென்பட்டால்  உடனே குழந்தைகள் நல மருத்துவரை அணுகுவது நல்லது.

வயிற்று போக்கு ஏற்படும் சமயங்களில் குழந்தையின் உடம்பில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

அழற்சி ஏற்படும் உணவுகளை தவிர்ப்பது நல்லது.

  1. "சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் — விகாஸ்பீடியா".
  2. Australia, Healthdirect (2019-09-30). "Food allergies in children" (en-AU).