குழந்தை நரம்பியல் அறுவை சிகிச்சை
குழந்தை நரம்பியல் அறுவை சிகிச்சை (Pediatric neurosurgery) என்பது நரம்பியல் அறுவை சிகிச்சையின் ஒரு துணைப்பிரிவாகும். நரம்பு மண்டலம், மூளை மற்றும் தண்டுவடத்துடன் தொடர்புடைய அறுவை சிகிச்சை முறைகள் இப்பிரிவில் அடங்கும். நரம்பியல் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யக்கூடிய நிலைமைகளில் இப்பிரிவு சிகிச்சையளிக்கிறது.
வரலாறு
[தொகு]பாசுட்டன் குழந்தைகள் மருத்துவமனை, குழந்தை நரம்பியல் அறுவை சிகிச்சை சேவையுடன் கூடிய அமெரிக்காவின் முதல் மருத்துவமனையாகும். 1929 ஆம் ஆண்டு ஆர்வி குசிங்கு மற்றும் பிராங்க் இங்க்ராகாம் ஆகியோரால் இம்மருத்துவமனை நிறுவப்பட்டது.[1][2]
2009 ஆம் ஆண்டு நிலவரப்படி, அமெரிக்காவில் 200 எண்ணிக்கைக்கும் குறைவான குழந்தை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் இருந்தனர். அவர்களில் தோராயமாக 80% பேர் ஆண்களாவர்.[3] கடந்த 25 ஆண்டுகளில், 391 மருத்துவர்கள் குழந்தை நரம்பியல் அறுவை சிகிச்சை திட்டத்தில் பட்டம் பெற்றுள்ளனர். அவர்களில் 70% பேர் மட்டுமே தற்போது வயது வந்தோருக்கான நரம்பியல் அறுவை சிகிச்சையை விட முதன்மையாக குழந்தை மருத்துவத்தைப் பயிற்சி செய்கிறார்கள். அவர்களில் தோராயமாக 70% பேர் கல்வி மருத்துவத்தில் உள்ளனர்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Youmans and Winn Neurological Surgery (7 ed.). Elsevier. 2017. pp. 1472–1475.
- ↑ "Neuroscience Center". Boston's Children Hospital. Retrieved 25 September 2020.
- ↑ Shipman, Scott A.; Lane, Jessica R.; Durham, Susan R. (1 January 2009). "The pediatric neurosurgical workforce: defining the current supply: Clinical article". Journal of Neurosurgery: Pediatrics 3 (1): 1–10. doi:10.3171/2008.10.PEDS08255. பன்னாட்டுத் தர தொடர் எண்:1933-0715. பப்மெட்:19119896. https://thejns.org/pediatrics/view/journals/j-neurosurg-pediatr/3/1/article-p1.xml. பார்த்த நாள்: 2 April 2019.
- ↑ Maher, Cormac O.; Durham, Susan R.; Scott, R. Michael; Nadel, Jeffrey L. (4 January 2019). "Recent trends in North American pediatric neurosurgical fellowship training". Journal of Neurosurgery: Pediatrics -1 (aop): 517–522. doi:10.3171/2018.10.PEDS18106. பன்னாட்டுத் தர தொடர் எண்:1933-0715. பப்மெட்:30611157. https://thejns.org/pediatrics/view/journals/j-neurosurg-pediatr/aop/article-10.3171-2018.10.PEDS18106.xml. பார்த்த நாள்: 2 April 2019.