குழந்தை உள்ளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குழந்தை உள்ளம்
தயாரிப்புசாவித்திரி
சாவித்திரி புரொடக்ஷன்ஸ்
இசைஎஸ். பி. கோதண்டபாணி
நடிப்புஜெமினி கணேசன்
வாணிஸ்ரீ
வெளியீடுசனவரி 14, 1969
நீளம்4528 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

குழந்தை உள்ளம் (Kuzhandai Ullam) என்பது 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சாவித்திரியின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

நடிகை சாவித்திரியின் தெலுங்குத் திரைப்படமான சின்னாரி பப்பலு (1969) ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்றது. திரைப்படம் விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது.[1] இத்திரைப்படம் அவரை தமிழில் குழந்தை உள்ளம் என்ற பெயரில் மறுஆக்கம் செய்ய தூண்டியது. சாவித்ரி திரைக்கதையை எழுதி இயக்கியதுடன், ஸ்ரீ சாவித்ரி புரொடக்சன்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் திரைப்படத்தைத் தயாரித்தார். எம். லட்சுமணன் வசனங்களை எழுதினார். சிங் மற்றும் சேகர் இருமொழி திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர்களாக இருந்தனர். படத்தொகுப்பை எம். எஸ். என் மூர்த்தி மேற்கொண்டார்.[2]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு எஸ். பி. கோதண்டபாணி இசையமைத்திருந்தார். பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[3]

# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "அங்கும் இங்கே ஒன்றே"  பி. சுசீலா, ரேணுகா  
2. "முத்து சிப்பிக்குள்ளே"  பி. சுசீலா, எஸ். பி. பாலசுப்பிரமணியம்  
3. "பூமரத்து நிழலுமுண்டு"  பி. சுசீலா, எஸ். ஜானகி  
4. "குடகு நாடு பொன்னி"  பி. சுசீலா, சீர்காழி கோவிந்தராஜன்  

மேற்கோள்கள்[தொகு]

  1. "Chinnari Paapalu (1968) - Rayalaseema - The Hindu". 2019-03-01 இம் மூலத்தில் இருந்து 2019-03-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190301175757/https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/chinnari-paapalu-1968/article26086871.ece. 
  2. "குழந்தை உள்ளம்". கல்கி. 12 January 1969. p. 92. https://web.archive.org/web/20210920050716/https://kalkionline.com/imagegallery/archiveimages/kalki/1969/jan/12-01-1969/p92.jpg from the original on 20 September 2021. Retrieved 20 September 2021. {{cite magazine}}: |archive-url= missing title (help)
  3. "Kuzhanthai Ullam" இம் மூலத்தில் இருந்து 21 July 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210721050233/http://tamilsongslyrics123.com/listlyrics/256. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குழந்தை_உள்ளம்&oldid=3753721" இருந்து மீள்விக்கப்பட்டது