உள்ளடக்கத்துக்குச் செல்

குழந்தை இராமர் (திருவுருவச்சிலை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இளவரசர் போல உடை மற்றும் கிரீடம் அணிந்து, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட 5 வயது குழந்தை இராமரின் உருவச் சிலை..இது ஒரே கருங்கலால் செதுக்கப்பட்டுள்ளது மற்றும் 51 அங்குலம் உயரம் கொண்டது. பால இராமர் ஒரு  கையில் வில் மற்றும் அம்பை ஆயுதமாக ஏந்தியுள்ளது. .
இராம ஜென்ம பூமியில் உள்ள அயோத்தி இராமர் கோயிலின் மூலவரான குழந்தை இராமரின் திருவுருவச் சிலை
வேறு பெயர்கள்இராம் லல்லா விராஜமான்
தேவநாகரிबालकराम
சமசுகிருதம்Bālakarāma
வகைவிஷ்ணு/இராமரின் வடிவம்
இடம்அயோத்தி
ஆயுதம்கோதண்டம் எனும் வில் மற்றும் அம்பு[1][2]

குழந்தை இராமர் உருவச் சிலை அல்லது பால ராமர் உருவச் சிலை[3] ' என்பது இராமரின் குழந்தை வடிவமாகும். இது இந்து சமயக் கடவுளான விஷ்ணுவின் ஏழாவது அவதாரமாகும். இது உலகின் மூன்றாவது பெரிய கோயிலான அயோத்தி இராமர் கோயிலின் மூலவர் குழந்தை இராமர் ஆவார்.[4][5] குழந்தை இராமர் சிலை 22 சனவரி 2024 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் பிராணப் பிரதிட்டை செய்யப்பட்டது.[6][7]இக்கோயிலின் மூலவரான 5 வயது குழந்தை இராமரின் உருவச் சிலை,.இளவரசர் போல உடை மற்றும் கிரீடம் அணிந்து, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டது. இச்சிலை இது ஒரே கருங்கலால் செதுக்கப்பட்டுள்ளது மற்றும் 51 அங்குலம் உயரம் கொண்டது. பால இராமர் ஒரு கையில் கோதண்டம் எனும் வில் மற்றும் அம்பை ஆயுதமாக ஏந்தியுள்ளது.

குழந்தை இராமரின் சிலை மைசூரைச் சேர்ந்த சிற்பக் கலைஞரான அருண் யோகிராஜ் என்பவர் தலைமையில் கருங்கல்லால் நிறுவப்பட்டது. இராம நவமி அன்று குழந்தை இராமர் சிலையின் நெற்றியில் சூரியக் கதிர்கள் படும் வண்ணம் கட்டிடக்கலை நிறுவப்பட்டுள்ளது.[8][9]

இராமர் இந்து சமயத்தின் முக்கிய தெய்வங்களில் ஒருவர். பாரம்பரியமாக இந்துக்கள் விஷ்ணுவின் ஏழாவது அவதாரமாக இராமர் கருதப்படுகிறார். இந்தக் கோயில் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் அயோத்தியில் உள்ள இராம ஜென்ம பூமியில் அமைந்துள்ளது, மேலும் அயோத்தியில் இராமரின் பிறப்பை நினைவுகூரும் வகையில் நாகரா பாணியில் மீண்டும் கட்டப்பட்டுள்ளது.[10][11]நவீன நகரமான அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தின் சரியான இடம் சில வரலாற்று நிகழ்வுகள் காரணமாக பல சர்ச்சைகளுக்கு உட்பட்டது மற்றும் இந்தியாவில் அரசியல் விவாதத்தின் குறிப்பிடத்தக்க தலைப்பு ஆகும். கோயில் திறப்பு விழாவிற்கு முன்பு, இராமரின் குழந்தைப் பருவப் பெயரான ராம் லல்லா விராஜ்மான் என்று அழைக்கப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ M.K.V. Narayan (2007). Flipside of Hindu Symbolism. Fultus Corporation. p. 35. ISBN 978-1-59682-117-0.
  2. ↑ "Ramabana, Rāmabāṇa: 7 definitions". Wisdom Library. 12 May 2018. Retrieved 2024-01-25.
  3. ↑ "Ayodhya mandir's new Ram Lalla deity will now be called by this name". Hindustan Times. 23 January 2024. https://www.hindustantimes.com/india-news/ayodhyas-new-ram-lalla-idol-will-now-be-called-balak-ram-101706003525225.html.
  4. ↑ Wattas, Rajnish (23 January 2024). "Ram Mandir and Hindu temple architecture". Tribune India. https://www.tribuneindia.com/news/comment/ram-mandir-and-hindu-temple-architecture-583811.
  5. ↑ "What Happens To Old Ram Idol Which "Appeared" Inside Babri Masjid In 1949". NDTV.com. Retrieved 2024-05-28.
  6. ↑ "India's Modi leads consecration of Ram temple in Ayodhya". Reuters (in அமெரிக்க ஆங்கிலம்). 22 January 2024. Retrieved 1 March 2024. Indian Prime Minister Narendra Modi led the consecration on Monday of a grand temple to the Hindu god Lord Ram on a site believed to be his birthplace
  7. ↑ "Explained: From 1528 To 2024, A 500-Year Timeline Of Ayodhya Ram Temple". NDTV.com. Retrieved 2024-05-28.
  8. ↑ "Ayodhya Temple On Ram Navami, ‘Surya Tilak’ shines on Ram Lalla". Indian Express. 18 April 2024. https://indianexpress.com/article/cities/lucknow/ayodhya-temple-on-ram-navami-surya-tilak-shines-on-ram-lalla-9276650/.
  9. ↑ "The Science Behind 'Surya Tilak' Ceremony At Ayodhya's Ram Temple". NDTV. 17 April 2024. https://www.ndtv.com/india-news/the-science-behind-surya-tilak-ceremony-at-ayodhyas-ram-temple-5460250.
  10. ↑ "Ram Lalla gave me the order, I just followed it' Arun Yogiraj on making the deity". India Today. 25 January 2024. https://www.indiatoday.in/india/story/ram-lalla-idol-ram-mandir-arun-yogiraj-ayodhya-2493046-2024-01-24.
  11. ↑ "Why is Ayodhya Ram Mandir built in Nagara style of architecture". Times of India. 31 January 2024. https://timesofindia.indiatimes.com/etimes/trending/ayodhya-ram-mandir-nagara-style-of-architecture/articleshow/107271908.cms.