உள்ளடக்கத்துக்குச் செல்

குள்ளச்சித்தன் சரித்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குள்ளச்சித்தன் சரித்திரம்
நூல் பெயர்:குள்ளச்சித்தன் சரித்திரம்
ஆசிரியர்(கள்):யுவன் சந்திரசேகர்
வகை:புதினம்
மொழி:தமிழ்
பதிப்பகர்:தமிழினி பதிப்பகம்
பதிப்பு:2003

குள்ளச்சித்தன் சரித்திரம் யுவன் சந்திரசேகர் எழுதிய தமிழ்ப் புதினம். 2003ல் தமிழினி பதிப்பகம் இதை வெளியிட்டது.

கதை

[தொகு]

இப்புதினம் பின் நவீனத்துவ பாணியில் எழுதப்பட்டது. மையமற்ற கதை ஓட்டம் கொண்டது. பல்வேறு தனித்தனிக் கதைகள் வழியாக ஒரு விஷயத்தை பல்வேறு கோணங்களில் சொல்லக்கூடிய அமைப்பு உடையது.

குள்ளச்சித்தன் என்று பெயருடைய ஒரு சித்தபுருஷரை வெவ்வேறு மனிதர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கிறார்கள். சிலருக்கு அவர் வாழ்க்கையின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கிறார். சிலருக்கு அவர் மெய்ஞானம் அளிக்கிறார். அவர் ஒரே சமயம் பல இடங்களிலும் காட்சியளிக்கிறார்.

ராக கண்ணப்பன், சிவப்பி என்ற செட்டியார் ஜாதி தம்பதிகளின் பிள்ளையில்லாக்குறையை சித்தர் தீர்க்கிறார். ஹாலாஸ்யம் என்பவருக்கு மெய்ஞானம் அளிக்கிறர். இவ்வாறு பல்வேறு சாதி, இடம் சார்ந்த கதைகளைச் சொல்லும் போது அவற்றுக்கான வட்டாரவழக்குகள் அனைத்தையும் யுவன் சந்திரசேகர் சிறப்பாக பயன்படுத்துகிறார். யுவன் சந்திரசேகர் மாற்றுமெய்மை என்பதில் நம்பிக்கை கொண்டவர் மாற்றுமெய்மை என்பது இந்த உலகில் நம் புலன்களால் அறியப்படும் மெய்மைக்கு அடியில் இருக்கும் அறியமுடியாத இன்னொரு மெய்மையாகும். இந்நாவலும் மாற்றுமெய்மையை பேசுவதே.

விமர்சனம்

[தொகு]

ஜெயமோகன், ’யுவன் சந்திரசேகர் எழுதிய குள்ளச் சித்தன் சரித்திரத்தை மீபொருண்மை மாய யதார்த்த படைப்பு என வகைப்படுத்தலாம் என்கிறார். இந்த வகைக் கதைகளுக்கு தமிழில் அதிக உதாரணங்கள் இல்லை. புதுமைப்பித்தனின் ‘பிரம்ம ராட்சஸ்’ போன்ற கதைகளுக்குப் பின் இவ்வடிவத்தை இதுசார்ந்த பிரக்ஞையுடன் எழுதி நோக்கியவர் பிரமிள். அவரது ‘ஆயி’ இவ்வகையில் குறிப்பிடத்தக்க ஆக்கம் என்கிறார்.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

.