குளோரோ அசிட்டோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குளோரோ அசிட்டோன்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1-குளோரோபுரோப்பேன்-2-ஒன்
வேறு பெயர்கள்
அசிட்டோனைல் குளோரைடு, குளோரோபுரோப்பனோன், 1-குளோரோ-2-புரோப்பனோன், ஒற்றை குளோரோஅசிட்டோன், 1-குளோரோ-2-கீட்டோபுரோப்பனோன், 1-குளோரோ-2-ஆக்சிபுரோப்பேன்
ஐ.நா 1695
இனங்காட்டிகள்
78-95-5 Y
Beilstein Reference
605369
ChEBI CHEBI:47220 Y
ChemSpider 6323 Y
EC number 201-161-1
InChI
  • InChI=1S/C3H5ClO/c1-3(5)2-4/h2H2,1H3 Y
    Key: BULLHNJGPPOUOX-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6571
வே.ந.வி.ப எண் UC0700000
SMILES
  • ClCC(=O)C
UNII 60ZTR74268 Y
பண்புகள்
C3H5ClO
வாய்ப்பாட்டு எடை 92.52 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம், அடர் மஞ்சளுக்கு ஆக்சிசனேற்றமடையும்
அடர்த்தி 1.123 கி/செ.மீ3
உருகுநிலை −44.5 °C (−48.1 °F; 228.7 K)
கொதிநிலை 119 °C (246 °F; 392 K)
10 கி/100 மி.லி 20 °செல்சியசில்
கரைதிறன் எத்தனால், டை எத்தில் ஈதர், குளோரோபாரம் ஆகியவற்றுடன் கலக்கும்
ஆவியமுக்கம் 1.5 கிலோ பாசுக்கல்
-50.9·10−6 செ.மீ3/மோல்
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 2.36
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 35 °C (95 °F; 308 K)
Autoignition
temperature
610 °C (1,130 °F; 883 K)
வெடிபொருள் வரம்புகள் 3.4% - ?[1]
Lethal dose or concentration (LD, LC):
100 மி.கி/கி.கி (எலிகள், வாய்வழி)[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

குளோரோ அசிட்டோன் (Chloroacetone) CH3COCH2Cl. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகிறது. திட்டவெப்ப அழுத்தத்தில் குளோரோ அசிட்டோன் நிறமற்ற நீர்மமாகவும் காரநெடியோடும் காணப்படுகிறது. [3] ஒளியில் வெளிப்படும்போது அடர் மஞ்சளும் பழுப்பும் கலந்த நிறத்திற்கு இது மாறுகிறது. [4] முதலாம் உலகப்போர் காலத்தில் குளோரோ அசிட்டோனை கண்ணீர் வரவழைக்கும் முகவராகப் பயன்படுத்தினார்கள். [5]

தயாரிப்பு[தொகு]

குளோரினுடன் இருகீட்டீன் வினை அல்லது அசிட்டோனின் குளோரினேற்ற வினை போன்ற நிகழ்வுகளில் குளோரோ அசிட்டோன் உருவாகிறது.

பயன்கள்[தொகு]

வண்ண புகைப்படங்களுக்கான சாயபிணைப்புகள் உருவாக்க குளோரோ அசிட்டோன் பயன்படுத்தப்படுகிறது. வேதிப் பொருட்களை பெருமளவு தயாரிக்கும் ஆலைகளில் ஓர் இடைநிலையாக பயன்படுகிறது. [2] பியூரான் தயாரிப்புக்கு உதவும் பிசுட்டு-பெனாரி தொகுப்பு வினையில் குளோரோ அசிட்டோன் பயன்படுத்தப்படுகிறது. [6] பீனாக்சைடுடன் குளோரோ அசிட்டோனைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் பீனாக்சி அசிட்டோன் கிடைக்கிறது. [7] பலதரப்பட்ட மருந்துகள் தயாரிப்பில் பீனாக்சி அசிட்டோன் பயன்படுத்தப்படுகிறது. பிங்கெல்சுடீன் வினையை நிகழ்த்த வினையூக்க அளவிலான பொட்டாசியம் அயோடைடு அவசியமாகிறது.

தூய்மையாக்கல்[தொகு]

வணிகமுறையில் விற்கப்படும் குளோரோ அசெட்டோனில் மெசிட்டைல் ஆக்சைடு உட்பட 5% அசுத்தங்கள் கலந்துள்ளன. வடிகட்டுதலால் இவற்றை அகற்ற இயலாது. மெசிடைல் ஆக்சைடை அமிலமாக்கப்பட்ட KMnO4 சேர்மத்தைப் பயன்படுத்தி ஆக்சிசனேற்றம் செய்து ஒரு டையோலை உருவாக்கலாம் தொடர்ந்து ஈதருடன் சேர்த்து பிரித்து அடுத்தடுத்த வடிகட்டுதலின் போது மாசுக்கள் அகற்றப்படும். [8]

பாதுகாப்பு[தொகு]

நிலைப்புத்தன்மை அற்ற குளோரோ அசிட்டோனை ஓர் இடத்திலிருந்து வோறோர் இடத்திற்கு கொண்டு செல்லப்படுவது அமெரிக்காவின் போக்குவரத்துத் துறையால் தடைசெய்யப்பட்டுள்ளது. நிலைப்புத்தன்மை கொண்ட குளோரோ அசிட்டோனும் சுவாசித்தால் தீங்கிழைக்கும் நச்சு எண் 6.1 நச்சு வகையாக அடையாளப்படுத்தப்படுகிறது. இதற்கான ஐக்கிய நாடுகள் எண் 1695 என வழங்கப்பட்டுள்ளது.

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ICSC:NENG0760 International Chemical Safety Cards (WHO/IPCS/ILO) CDC/NIOSH". Center for Disease Control. 2006-10-11. பார்க்கப்பட்ட நாள் 2009-04-17.
  2. 2.0 2.1 Hathaway, Gloria J.; Proctor, Nick H. (2004). Proctor and Hughes' Chemical Hazards of the Workplace (5 ). Wiley-Interscience. பக். 143–144. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-471-26883-3. https://books.google.com/books?id=y3-Ef3y53PkC&pg=PA143&dq=Chloroacetone. பார்த்த நாள்: 2009-04-16. 
  3. "Occupational Safety and Health Guideline for Chloroacetone". U.S. Department of Labor - Occupational Safety & Health Administration. Archived from the original on 2013-05-03. பார்க்கப்பட்ட நாள் 2008-06-06. {{cite web}}: External link in |publisher= (help)
  4. "CHLOROACETONE". International Programme on Chemical Safety. பார்க்கப்பட்ட நாள் 2008-06-06. {{cite web}}: External link in |publisher= (help)
  5. Haber, Ludwig Fritz (1986). The Poisonous Cloud: Chemical Warfare in the First World War. Oxford University press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-858142-4. 
  6. Li, Jie-Jack; Corey, E. J. (2004). Name Reactions in Heterocyclic Chemistry. Wiley-Interscience. பக். 160. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-471-30215-5. https://books.google.com/books?id=1N-MZVSesTcC&pg=PA160&dq=Chloroacetone. பார்த்த நாள்: 2009-04-16. 
  7. Hurd, Charles D.; Perletz, Percy (1946). "Aryloxyacetones1". Journal of the American Chemical Society 68 (1): 38–40. doi:10.1021/ja01205a012. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. 
  8. Phys. Chem. Chem. Phys., 2000,2, 237-245

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குளோரோ_அசிட்டோன்&oldid=3320059" இலிருந்து மீள்விக்கப்பட்டது