குளோரோ(டெட்ரா ஐதரோதயோபீன்)தங்கம்(I)
| இனங்காட்டிகள் | |
|---|---|
| 39929-21-0 | |
| ChemSpider | 9956880 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 11782199 |
| |
| பண்புகள் | |
| C4H8AuClS | |
| வாய்ப்பாட்டு எடை | 320.58 g·mol−1 |
| தோற்றம் | வெண்மை முதல் அரை வெண்மை தூள் |
| கட்டமைப்பு | |
| படிக அமைப்பு | செஞ்சாய்சதுரம் |
| புறவெளித் தொகுதி | Pmc21, No. 26 |
| Lattice constant | a = 6.540(1) Å, b = 8.192(1) Å, c = 12.794(3) Å |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
குளோரோ(டெட்ரா ஐதரோதயோபீன்)தங்கம்(I) (Chloro(tetrahydrothiophene)gold(I)) என்பது C4H8AuClS என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் அணைவுச் சேர்மமாகும்.]] சுருக்கமாக (tht)AuCl என்ற வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படுகிறது. இது தங்கத்தின் ஒரு ஒருங்கிணைப்பு சேர்மமாகும். டைமெத்தில் சல்பைடு ஒப்புமை போலவே, இந்த சேர்மமும் தங்க வேதியியலுக்கான நுழைவுப் புள்ளியாகப் பயன்படுத்தப்படுகிறது. டெட்ரா ஐதரோதயோபீன் ஈந்தணைவி நிலையற்றதாகவும் பிற வலுவான ஈந்தணைவிகளுடன் உடனடியாக பதிலீடு செய்யப்படக்கூடியதாகவும் உள்ளது.
தயாரிப்பு
[தொகு]டெட்ராகுளோரோ ஆரிக் அமிலத்தை டெட்ரா ஐதரோதயோபீனுடன் சேர்த்து ஒடுக்கம் செய்வதன் மூலம் குளோரோ(டெட்ரா ஐதரோதயோபீன்)தங்கம்(I) சேர்மத்தை தயாரிக்கலாம்:[1]
- HAuCl4 + 2 SC4H8 + H2O -> AuCl(SC4H8) + OSC4H8 + 3 HCl
பல தங்கம்(I) சேர்மங்களுக்கு இயல்பாக அமைவது போலவே, இச்சேர்மமும் ஒரு நேர்கோட்டு ஒருங்கிணைப்பு வடிவவியலைக் கொண்டுள்ளது. Pmc21 என்ற இடக்குழுவில் செஞ்சாய்சதுரப் அமைப்பில் படிகமாகிறது; இதன் அலகுக்கூட்டு அளவுகள் a = 6.540(1) Å, b = 8.192(1) Å, c = 12.794(3) Å என்றும், ஓர் அலகுக்கூட்டிற்குள் Z = 4 என்ற எண்ணிக்கையில் வாய்ப்பாட்டு அலகுகள் அமைந்தும் உள்ளன. இதன் புரோமைடு இனச்சேர்மமும் இதே போன்ற படிக அமைப்பையே கொண்டுள்ளது.[2]
(Me2S)AuCl- சேர்மத்துடன் ஒப்பிடுகையில் இது வெப்பத்தால் சிதைவடையும் தன்மை சற்று குறைவாகக் கொண்டது; இருப்பினும், இச்சேர்மம் வெப்பநிலை மற்றும் ஒளிக்கு உணர்திறன் உடையதாகவே உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Uson, R.; Laguna, A.; Laguna, M. (2007). "(Tetrahydrothiophene)Gold(I) or Gold(III) Complexes". Inorganic Syntheses. Vol. 26. pp. 85–91. doi:10.1002/9780470132579.ch17. ISBN 9780470132579.
- ↑ Ahrland, Sten; Dreisch, Klaus; Norén, Bertil; Oskarsson, Ake (1993). "Metal-metal interactions in chain compounds of gold(I): syntheses and crystal structures of chlorotetrahydrothiophenegold(I), bromotetrahydrothiophenegold(I) and iodotetrahydroselenophenegold(I)". Materials Chemistry and Physics 35 (3–4): 281–289. doi:10.1016/0254-0584(93)90144-B.