குளோரோபீனால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2-குளோரோபீனால்

குளோரோபீனால் (Chlorophenol) என்பது C6H5ClO என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சகப்பிணைப்பு குளோரின் அணுக்களைக் கொண்டிருக்கும் பீனாலின் கரிமகுளோரைடு எதுவாக இருந்தாலும் அது குளோரோபீனால் எனப்படும். 5 அடிப்படை வகை குளோரோபீனால்களும் 19 வேறுபட்ட வகை குளோரோபீனால்களும் அறியப்படுகின்றன, பீனாலுடன் குளோரின் சேரும் எலக்ட்ரான் கவர் ஆலசனேற்ற வினையின் மூலம் குளோரோபீனால்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பெரும்பாலான குளோரோபீனால்கள் பல்வேறு எண்ணிக்கையிலான வெவ்வேறு மாற்றியன்களைப் பெற்றுள்ளன. பீனால் மூலக்கூறின் வளைய அமைப்பின் மூவிடங்களிலும் ஒரு குளோரின் அணு இணைந்து கொள்வதற்கு வாய்ப்பு இருப்பதால் ஒருகுளோரோபீனால்கள் மூன்று மாற்றியன்களைப் பெற்றுள்ளன. உதாரணமாக பீனாலின் வளையத்தின் ஆர்த்தோ நிலையில் குளோரின் அணு இணைந்திருப்பது 2-குளோரோபீனால் என்ற மாற்றியனாகும். மாறாக பென்டாகுளோரோபீனால் ஒரேயொரு மாற்றியனையே பெற்றுள்ளது. ஏனெனில் பென்டாகுளோரோபீனாலில் இணைவதற்கு வாய்ப்புள்ள பீனால் வளையத்தின் ஐந்து அமைவிடங்களிலும் குளோரின் அணுக்களே குளோரினேற்றம் அடைந்துள்ளன.

அறை வெப்பநிலையில் பெரும்பாலான குளோரோபீனால்கள் திண்மநிலையில் காணப்படுகின்றன. அவை வலிமையான மருந்து வகை மணமும் சுவையும் கொண்டுள்ளன. பெரும்பாலான குளோரோபீனால்கள் பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள், மற்றும் கிருமிநாசினிகள் ஆகப்பயன்படுகின்றன.[1]

மேற்கோள்கள்[தொகு]

இவற்றையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குளோரோபீனால்&oldid=2222662" இருந்து மீள்விக்கப்பட்டது