குளோரைல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குளோரைல்
Structural formula
Space-filling model of crystal structure
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
Chloryl
முறையான ஐயூபிஏசி பெயர்
டையாக்சோ-λ5-குளோரானைலியம்
இனங்காட்டிகள்
25052-55-5
ChemSpider 19127824
InChI
  • InChI=1S/ClO2/c2-1-3/q+1
    Key: UVQYMEMTCMFUIN-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • O=[Cl+]=O
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

குளோரைல் (Chloryl) என்பது வேதியியலில் ஒரு மூவணு நேர்மின் அயனியை குறிக்கிறது. இதன் மூலக்கூற்று வாய்ப்பாடு ClO+2 ஆகும். குளோரைட்டு அயனியின் கட்டமைப்பே (ClO−2) இதற்கும் பொருந்துகிறது. ஆனால் எலக்ட்ரான் அமைப்பில் இது வேறுபடுகிறது. இங்கு குளோரின் +3 என்ற ஆக்சிசனேற்ற நிலைக்குப் பதிலாக +5 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் உள்ளது. ஆக்சி குளோரைடுகளில் நேர்மின் சுமை கொண்ட ஓர் அரிய வகைக்கு இது எடுத்துக்காட்டாகும். FClO2 மற்றும் [ClO2][RuF6] போன்ற குளோரைல் சேர்மங்கள் அதிக வினைத்திறன் கொண்டவையாக உள்ளன. தண்ணீர் மற்றும் கரிமச் சேர்மங்களுடன் மிகத்தீவிரமாக வினைபுரிகின்றன[1][2].

கட்டமைப்பு[தொகு]

ClO+2 நேர்மின் அயனி SO2 அயனியுடன் 120 பாகைக்கு நெருக்கமாக பிணைப்பு கோணம் கொண்ட ஒரு வளைந்த மூலக்கூறு ஒத்த எலக்ட்ரான் அமைப்பைக் கொண்டுள்ளது [3]. Cl–O பிணைப்பின் பிணைப்பு வேறுபாடு 1.5 ஆகும். ஓர் இரட்டைப் பிணைப்பும் டி ஆர்பிட்டாலை பயன்படுத்தாத ஒரு சகப்பிணைப்பும் Cl–O பிணைப்பின் இலூயிசு கட்டமைப்பில் உள்ளன [4].

ClO+2 அயனியின் சிவப்பு நிறம் எலக்ட்ரானின் பிணைப்பு எதிர் ஆர்பிட்டாலின் எலக்ட்ரான் மாற்றத்தால் விளைகிறது. இதனை ஒத்த SO2 அயனியில் இம்மாற்றம் கட்புலன் பகுதியில் தெரிவதில்லை. இதனால் அந்த அயனி நிறமற்று இருக்கிறது. எதிரயனியுடனான தொடர்புகளின் வலிமை இந்த எதிர்பிணைப்பு சுற்றுப்பாதையின் ஆற்றலை பாதிக்கிறது. இதனால் நிறமற்ற குளோரைல் சேர்மங்களில் பிணைப்பின் உயர் சகப்பிணைப்பு தன்மையை ஒத்த எதிரயனியுடனான வலுவான தொடர்புகள் ஆற்றல் மாற்றத்தால் கட்புலனாகும் நிறமாலையிலிருந்து இடப்பெயர்ச்சி செய்கின்றன [3].

சேர்மங்கள்[தொகு]

இரண்டு வகையான குளொரைல் சேர்மங்கள் காணப்படுகின்றன. நிறமற்று இருக்கும் குளோரைல் சேர்மங்கள் முதல்வகையாகும். குளோரைல் புளோரைடு (FClO2) உள்ளிட்ட சேர்மங்கள் இதற்கு எடுத்துக்காட்டாகும். இவை மிதமான வினைத்திறன் கொண்டவையாகும். அயனக் குளோரைல் சேர்மமென்று இது பெயரிடப்பட்டிருந்தாலும் குளோரைல் புளோரைடு அயனச் சேர்மத்தை விட புளோரைடு மற்றும் குளோரைல் நேர்மின் அயனிகளால் ஆக்கப்பட்ட அதிக அளவு சகப்பிணைப்புடன் காணப்படுகிறது. சிவப்பு நிறத்துடன் அதிக வினைத்திறன் மிக்க குளோரைல் சேர்மங்கள் இரண்டாவது வகையாகும். குளோரைல் புளோரோ சல்பேட்டு (ClO2SO3F) மற்றும் டைகுளோரைல் டிரைசல்பேட்டு (ClO2)2(S3O10) உள்ளிட்ட சேர்மங்கள் இவ்வகை குளோரைல் சேர்மங்களுக்கு எடுத்துக்காட்டாகும்.

இந்த குளோரைல் சேர்மங்கள் புளோரோகந்தக அமிலத்தில் கரைந்து சிவப்பு கரைசல்களை உருவாக்குகின்றன, மேலும் அவை சிவப்பு நிற ClO+2 நேர்மின் அயனிகளைக் கொண்டுள்ளன. இந்த நேர்மின் அயனிகள் கரைசலில் பிரிகையடைந்துள்ளன. எதிர்க்கும் அயனிகளுடன் திண்மநிலையில் இவ்வயனிகள் தீவிரமாக இடைவினை புரிகின்றன என்று ராமன் மற்றும் அகச்சிவப்பு நிறமாலையியல் முடிவுகள் தெரிவிக்கின்றன [3][1]

திண்ம நிலையில் உள்ள அனைத்து குளோரைல் சேர்மங்களும் அவசியமாக அயனச் சேர்மங்களாக இருப்பதில்லை. FClO2 உடன் BF3 மற்றும் PF5 இன் வினைவிளை பொருட்கள் உண்மையான உப்புகளை விட மூலக்கூறு சேர்க்கைப் பொருட்களாக கருதப்படுகின்றன[3][5].

டைகுளோரின் எக்சாக்சைடு ஒரு முக்கியமான குளோரைல் சேர்மமாகும். இது அயனச் சேர்மமாகக் காணப்படுகிறது. குளோரைல் பெர்குளோரேட்டு [ClO2]+[ClO4]−என இது துல்லியமாக வரையறுக்கப்படுகிறது[6]. திட்ட நிபந்தனைகளில் சிவப்பு நிற புகையும் நீர்மமாக இது காணப்படுகிறது.

FClO2 சேர்மத்துடன் வலிமையான லூயிசு அமிலத்தை சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் குளோரைல் சேர்மங்களை தயாரிப்பது ஒரு சிறந்த வழிமுறையாகும். உதாரணமாக:

FClO
2
+ AsF
5
→ [ClO2][AsF6]

பிற தயாரிப்பு முறைகளிலும் குளோரைல் சேர்மங்கள் தயாரிக்கப்படுகின்றன:[5]

5 ClO
2
+ 3 AsF
5
→ 2 [ClO2][AsF6] + AsF
3
O
+ 4 Cl
2

Cl
2
O
6
+ 2 SbF
5
→ [ClO2][SbF6] + SbF
3
O
+ FClO
3
வலிமையான லூயிசு காரங்களுடன் பிணைப்பு பரிமாற்ற வினைகள் மேற்கொள்ள முடியும். எக்சாபுளோரோபிளாட்டினேட்டு உப்புடன் நைட்ரைல் புளோரைடு வினையில் ஈடுபட்டு நைட்ரோனியம் உப்பு உருவாதலை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்:[5]

[ClO2][PtF6] + FNO
2
→ [NO2][PtF6] + FClO
2

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Christe, K. O.; Schack, C. J.; Pilipovich, D.; Sawodny, W. (1969). "Chloryl cation, ClO+
    2
    ". Inorganic Chemistry 8 (11): 2489–2494. doi:10.1021/ic50081a050.
     
  2. Bougon, R.; Cicha, W. V.; Lance, M.; Meublat, L.; Nierlich, M.; Vigner, J. (1991). "Preparation characterization and crystal structure of chloryl hexafluororuthenate(1-). Crystal structure of [ClF
    2
    ]+
    [RuF
    6
    ]
    ". Inorganic Chemistry 30 (1): 102–109. doi:10.1021/ic00001a019.
     
  3. 3.0 3.1 3.2 3.3 Carter, H. A.; Johnson, W. M.; Aubke, F. (15 December 1969). "Chloryl compounds. Part II. Chloryl hexafluoroarsenate and chloryl fluoride". Canadian Journal of Chemistry 47 (24): 4619–4625. doi:10.1139/v69-763. https://archive.org/details/sim_canadian-journal-of-chemistry_1969-12-15_47_24/page/4619. 
  4. David L. Cooper (2001). "Spin-coupled description of the chemical bonding to hypercoordinate chlorine". Theoretical Chemistry Accounts 105 (4-5): 323–327. doi:10.1007/PL00013292. 
  5. 5.0 5.1 5.2 K. O. Christe; C. J. Schack (1976). Harry Julius Emeléus, A. G. Sharpe. ed. Chlorine Oxyfluorides. Advances in inorganic chemistry and radiochemistry, Volume 18. Academic Press. பக். 356–358. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-12-023618-4. https://books.google.com/books?hl=en&lr=&id=EWlBFTxYth4C&oi=fnd&pg=PA319&dq=chloryl+cation&ots=-jlVcXkz7a&sig=k5zbfE5SYGnLnSO1TXz40f7MJ1U#v=onepage&q=chloryl%20cation&f=false. 
  6. Tobias, K. M.; Jansen, M. (1986). "Crystal Structure of Cl
    2
    O
    6
    ". Angewandte Chemie International Edition in English 25 (11): 993–994. doi:10.1002/anie.198609931.
     
"https://ta.wikipedia.org/w/index.php?title=குளோரைல்&oldid=3521059" இலிருந்து மீள்விக்கப்பட்டது