குளோரியா சுவான்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குளோரியா மே ஜோஸ்பின் சுவான்சன் (Gloria May Josephine Swanson மார்ச் 27, 1899- ஏப்ரல் 4, 1983) அமெரிக்க நடிகை மற்றும் தயாரிப்பாளர் ஆவார். 1950 ஆம் ஆண்டில் வெளியான சன்செட் பவுல்வர்டு எனும் பேசும்படத்தில் நார்மா தேஸ்மண்ட் எனும் கதாப்பத்திரத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படுகிறார். இந்தப் படத்தில் இவரின் நடிப்பிற்காக இவர் பாராட்டப்பெற்றார். மேலும் அகாதமி விருது மற்றும் கோல்டன் குளோப் விருது போன்ற விருதுகளையும் பெற்றார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

குளோரியா மே ஜோஸ்பின் சுவான்சன்[1] 1899 இல் சிகாகோவில் பிறந்தார். இவரின் தந்தை ஓசப் தியோடர் சுவான்சன் ஒரு ரானுவ வீரர் ஆவார். இவர் ஹாத்ரோன் ஸ்கால்ஸ்டிக் அகாதமியில் பயிப்ன்றார். இவரின் தந்தை சுவீடன்- அமெரிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர். தாய் ஜெர்மன்,பிரஞ்சு வழிமரபினைச் சேர்ந்தவர் ஆவார்.[2][3]

தொழில் வாழ்க்கை[தொகு]

1914 ஆம் ஆண்டில் தனது முதல் படத்தில் தோன்றினார். 1916 ஆம் ஆண்டில் இவர் கலிபோர்னியா சென்று மக் சென்னட்டின் கீஸ்டோன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் நகைச்சுவைகளில் பாபி வெர்னானுடன் இணைந்து நடித்தார். இந்த இணையின் நடிப்பு பாராட்டப்பெற்றது. பின் வெர்னானுடன் இணைந்து பல படங்களில் நடித்தார்.[4] குறிப்பாக தெ டேஞ்சர் கேர்ள் (1916), தெ சுல்தான்ஸ் ஒய்ஃப் (1917), டெட்டி அட் தெ த்ராட்டில் (1917)

சான்றுகள்[தொகு]

  1. Cornell Sarvady, Andrea; Miller, Frank; Haskell, Molly; Osborne, Robert (2006). Leading Ladies: The 50 Most Unforgettable Actresses of the Studio Era. Chronicle Books. பக். 185. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8118-5248-2. 
  2. Quirk, Lawrence J. (1984). The Films of Gloria Swanson. Citadel Press. பக். 256. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8065-0874-4. 
  3. Harzig, Christiane (1996). Peasant Maids, City Women. Cornell University Press. பக். 283. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8014-8395-6. 
  4. Shearer, Stephen Michael (August 27, 2013). Gloria Swanson: The Ultimate Star. United States: Thomas Dunne Books. பக். 30. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1250001552. https://books.google.com/books?id=Uc4TAAAAQBAJ&lpg=PA29&pg=PA30#v=onepage&q=bobby%20vernon. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குளோரியா_சுவான்சன்&oldid=2717034" இருந்து மீள்விக்கப்பட்டது