உள்ளடக்கத்துக்குச் செல்

குளோரின் முப்புளோரைடு ஆக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குளோரின் முப்புளோரைடு ஆக்சைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டிரைபுளோரோ(ஆக்சோ)-λ5-குளோரேன்
வேறு பெயர்கள்
குளோரோசில் முப்புளோரைடு
இனங்காட்டிகள்
30708-80-6[1]
InChI
  • InChI=1S/ClF3O/c2-1(3,4)5
    Key: QPKQQPNQDSQNHS-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 15388485
  • O=Cl(F)(F)F
பண்புகள்
ClOF3
வாய்ப்பாட்டு எடை 108.44 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 1.865 கி/செ.மீ3
உருகுநிலை −42 °C (−44 °F; 231 K)
கொதிநிலை 29 °C (84 °F; 302 K)
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றைச்சரிவச்சு
புறவெளித் தொகுதி C2/m
Lattice constant a = 9.826, b = 12.295, c = 4.901
படிகக்கூடு மாறிலி
தீங்குகள்
GHS குறியீடு:
விளக்கப்படங்கள்
GHS03: OxidizingThe corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.

குளோரின் முப்புளோரைடு ஆக்சைடு (Chlorine trifluoride oxide) என்பது ClOF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். குளோரின் ஆக்சைடு முப்புளோரைடு என்ற பெயராலும் இது அடையாளப்படுத்தப்படுகிறது. அரிக்கும் தன்மையுடைய, நிறமற்ற ஒரு திரவ மூலக்கூறு சேர்மமாகும். இது இராக்கெட்டு எரிபொருளுக்கான ஆக்சிசனேற்றியாக இரகசியமாக உருவாக்கப்பட்டது.

தயாரிப்பு

[தொகு]

குளோரின் ஆக்சைடு முப்புளோரைடு முதலில் இராக்கெட்டைன் நிறுவனம் [2] இருகுளோரின் ஓராக்சைடை புளோரினுடன் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் தயாரிக்கப்பட்டது. இதை உருவாக்க புளோரினுடன் வினைபுரியக்கூடிய பிற பொருட்களில் சோடியம் குளோரைட்டும் (NaClO2) குளோரின் நைட்ரேட்டும் (Cl−O−NO2) அடங்கும். முதன்முதலில் வெளியிடப்பட்ட உற்பத்தி முறை, இருகுளோரின் மோனாக்சைடை ஆக்சிசன் டைபுளோரைடு (OF2) உடன் வினைபுரியச் செய்வதாகும். இன்னும் பிற உற்பத்தி முறைகள் ClO2F அல்லது ClO3F மற்றும் குளோரின் புளோரைடுகளுக்கு இடையேயான வினைகளாகும். குளோரின் நைட்ரேட்டை புளோரினுடன் பயன்படுத்துவது ஒரு பாதுகாப்பான அணுகுமுறையாகும்.

வினைகள்

[தொகு]

ஓர் இலூயிசு காரமாகச் செயல்பட்டு, இது இலூயிசு அமிலங்களுக்கு ஒரு புளோரைடு அயனியை வழங்கி, [ClOF2]+ என்ற இருபுளோரோ ஆக்சோகுளோரோனியம்(V) நேர்மின் அயனியை உருவாக்குகிறது.[3] இவ்வயனியைக் கொண்ட சேர்மங்கள் பின்வருமாறு: [ClOF2]+[BF4], [ClOF2]+[PF6], [ClOF2]+[AsF6], [ClOF2]+[SbF6], [ClOF2]+[BiF6], [ClOF2]+[VF6], [ClOF2]+[NbF6], [ClOF2]+[TaF6], [ClOF2]+[UF6], ([ClOF2]+)2[SiF6]2−, [ClOF2]+[MoOF5], [ClOF2]+[Mo2O4F9],[4] [ClOF2]+[PtF6].[5]

ஓர் இலூயிசு அமிலமாகச் செயல்பட்டு, ஒரு வலிமையான காரத்திலிருந்து ஒரு புளோரைடு அயனியைப் பெற்று, ஒரு டெட்ராபுப்ளோரோ ஆக்சோகுளோரேட்டு(V) எதிர் அயனியை உருவாக்குகிறது (ClOF4) இவற்றுள் K+[ClOF4] (பொட்டாசியம் டெட்ராபுளோரோ ஆக்சோகுளோரேட்டு(V)), Rb+[ClOF4] (ருபீடியம் டெட்ராபுளோ ஆக்சோகுளோரேட்டு(V)) மற்றும் Cs+[ClOF4] (சீசியம் டெட்ராபுளோ ஆக்சோகுளோரேட்டு(V)) ஆகியவை அடங்கும். இம்மூன்று உப்புகளும் வெண்மை நிறப் படிகத் திண்மங்களாகும்.[4][6]

இம்முறையானது ClOF3 சேர்மத்தை சுத்திகரிக்க உதவுகிறது. ஏனெனில், அறை வெப்பநிலையில் ஒரு திண்மச் சேர்மம் உருவாகிறது. ஆனால் இது 50 முதல் 70 °செல்சியசு வெப்பநிலைக்கு இடைப்பட்ட நிலையில் சிதைவடைந்துவிடுகிறது. இதில் இருக்கக்கூடிய பிற சாத்தியமான மாசுக்கள், கார புளோரைடுகளுடன் வினைபுரியாது. அல்லது அவ்வாறு வினைபுரிந்தாலும், அவை எளிதில் சிதைவடையாது.

குளோரின் முப்புளோரைடு ஆக்சைடு, குளோரின் மோனாக்சைடு, குளோரின், கண்ணாடி அல்லது குவார்ட்சு போன்ற பல்வேறு பொருட்களை புளோரைடாக்கம் செய்கிறது.

ClOF3 + Cl2O → 2 ClF + ClO2F
2 ClOF3 + 2 Cl2 → 6 ClF + O2 200 ° செல்சியசு வெப்பநிலையில்..

குளோரின் முப்புளோரைடு ஆக்சைடு, குளோரின் புளோரோசல்பேட்டுடன் இணைகிறது.

ClOF3 + 2 ClOSO2F → S2O5F2 + FClO2 + 2 ClF

இந்த வினை SO2F2-சேர்மத்தையும் உருவாக்குகிறது.

குளோரின் முப்புளோரைடு ஆக்சைடு ஒரே வினையில் புளோரின் மற்றும் ஆக்சிசன் ஆகிய இரண்டையும் சேர்க்கும் திறன் கொண்டது. இது மாலிப்டினம் பெண்டாபுளோரைடு, சிலிக்கான் டெட்ராபுளோரைடு, டெட்ரா புளோரோ ஐதரசீன் (100 °செல்சியசு-வெப்ப நிலைக்கு மேல்), HNF2 மற்றும் F2NCOF ஆகியவற்றுடன் வினைபுரிகிறது. HNF2-உடனான வினையின் முக்கிய விளைபொருள் NF3O ஆகும். MoF5-உடனான வினையின் விளைபொருட்கள் MoF6 மற்றும் MoOF4 ஆகியனவாகும்.

இது ஐதரோகார்பன்களுடன் வெடிப்புத்தன்மையுடன் வினைபுரிகிறது. குறைந்த அளவு நீருடன், HF உடன் சேர்த்து ClO2F உருவாகிறது.

280 °செல்சியசு -வெப்பநிலைக்கு மேல், ClOF3 ஆனது ஆக்சிசன் மற்றும் குளோரின் முப்புளோரைடாகச் சிதைவடைகிறது.

இயற்பியல் பண்புகள்

[தொகு]

குளோரின் முப்புளோரைடு ஆக்சைடின் கொதிநிலை 29 °செல்சியசு ஆகும்.[7]

மூலக்கூறின் வடிவம் ஒரு முக்கோண இருபட்டைக்கூம்பு ஆகும். இதன் மேல் மற்றும் கீழ் (உச்சி) பகுதிகளில் இரண்டு புளோரின் அணுக்களும் (Fa), நடுப்பகுதியில் ஆக்சிசன் மற்றும் புளோரின் (Fe) என்ற ஓர் எலக்ட்ரான் இணையும் உள்ளன.[8] Cl=O பிணைப்பு நீளம் 1.405 Å, Cl-Fe 1.603 Å, மற்ற Cl-Fa 1.713 Å, ∠FeClO=109° ∠FaClO=95°, ∠FaClFe=88°. மூலக்கூறு முனைவாக்கம் செய்யப்பட்டுள்ளது. Cl +1.76 மின்னூட்டத்தையும், O −0.53 மின்னூட்டத்தையும், நடுப்பகுதி F −0.31 மின்னூட்டத்தையும் மற்றும் உச்சி F −0.46 மின்னூட்டத்தையும் கொண்டுள்ளன. இச்சேர்மத்தின் மொத்த இருமுனைத் திருப்புத்திறன் 1.74 டி ஆகும்.[9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Urben, Peter (2017). Bretherick's Handbook of Reactive Chemical Hazards (in ஆங்கிலம்). Elsevier. p. 784. ISBN 9780081010594.
  2. Advances in Inorganic Chemistry and Radiochemistry (in ஆங்கிலம்). Academic Press. 1976. pp. 331–333. ISBN 9780080578675.
  3. Christe, Karl O.; Curtis, E. C.; Schack, Carl J. (September 1972). "Chlorine trifluoride oxide. VII. Difluorooxychloronium(V) cation, ClF2O+. Vibrational spectrum and force constants". Inorganic Chemistry 11 (9): 2212–2215. doi:10.1021/ic50115a046.
  4. 1 2 Holloway, John H.; Laycock, David (1983). Advances in Inorganic Chemistry (in ஆங்கிலம்). Academic Press. pp. 178–179. ISBN 9780080578767.
  5. Schack, Carl J.; Lindahl, C. B.; Pilipovich, Donald.; Christe, Karl O. (September 1972). "Chlorine trifluoride oxide. IV. Reaction chemistry". Inorganic Chemistry 11 (9): 2201–2205. doi:10.1021/ic50115a043.
  6. Christe, Karl O.; Schack, Carl J.; Pilipovich, Donald.; Christe, Karl O. (September 1972). "Chlorine trifluoride oxide. V. Complex formation with Lewis acids and bases". Inorganic Chemistry 11 (9): 2205–2208. doi:10.1021/ic50115a044.
  7. Pilipovich, Donald.; Lindahl, C. B.; Schack, Carl J.; Wilson, R. D.; Christe, Karl O. (September 1972). "Chlorine trifluoride oxide. I. Preparation and properties". Inorganic Chemistry 11 (9): 2189–2192. doi:10.1021/ic50115a040.
  8. Christe, K.O.; Schack, C.J. (1976). Chlorine Oxyfluorides. Advances in Inorganic Chemistry and Radiochemistry. Vol. 18. pp. 319–398. doi:10.1016/S0065-2792(08)60033-3. ISBN 9780120236183.
  9. Oberhammer, Heinz.; Christe, Karl O. (January 1982). "Gas-phase structure of chlorine trifluoride oxide, ClF3O". Inorganic Chemistry 21 (1): 273–275. doi:10.1021/ic00131a050.