குளுகுரோனைடு

குளுகுரோனைடு (Glucuronide) என்பது குளுகுரோனிக் அமிலம் மற்றொரு பொருளுடன் கிளைக்கோசைடு பிணைப்பால் இணைந்து உருவாகும் எந்தவொரு பொருளையும் குறிக்கும். [1] குளுக்குரோனோசைடு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. குளுகுரோனைடுகள் கிளைக்கோசைடுகளுடன் தொடர்பு கொண்டவையாகக் கருதப்படுகின்றன.
குளுகுரோனிடேற்றம் என்பது இரசாயன சேர்மங்களை குளுகுரோனைடுகளாக மாற்றுவதாகும். நச்சு பொருட்கள், மருந்துகள் அல்லது ஆற்றல் மூலமாக பயன்படுத்த முடியாத பிற பொருட்களை வெளியேற்றுவதற்காக விலங்குகள் இம்முறையைப் பயன்படுத்துகின்றன. குளுகுரோனிக் அமிலம் கிளைக்கோசைடு பிணைப்பு வழியாக இணைக்கப்பட்டுள்ளது என்ற காரணத்தால் அசல் பொருளை விட குளுகுரோனைடு அதிக நீர் கரைதிறனைக் கொண்டதாக உள்ளது. இறுதியில் சிறுநீரகங்களால் இது வெளியேற்றப்படுகிறது. [2]
குளுகுரோனைடிலிலுள்ள கிளைகோசைடு பிணைப்பை பிளவுபடுத்தும் நொதிகள் குளுகுரோனிடேசுகள் என்று அழைக்கப்படுகின்றன.