குளிர் பாலைவன உயிர்க்கோள காப்பகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சார்ச்சு, ஜம்மு காஷ்மீர்

குளிர் பாலைவன உயிர்க்கோள காப்பகம் ( Cold Desert Biosphere Reserve) வட இந்தியாவில் உள்ள இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் பகுதியாக உள்ள மேற்கு இமயமலைப் பகுதிகளில் அமைந்துள்ள உயிர்க்கோள காப்பகம் ஆகும். உயிர்க்கோள காப்பகங்களானவை பல்வேறு நில மற்றும் நீர்ப்பரப்புகளில் வாழும் உயிர்களின் பாதுகாப்பினை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட உயிர்க்கோள சூழலியல் பாதுகாப்பகங்களாகும். இந்த உயிர்க்கோள காப்பகங்கள் பல்லுயிர் தன்மையைப் பாதுகாக்கவும் அதனால் கிடைக்கும் வளங்களை நீடித்துப் பயன்படுத்திக் கொள்ளவும் உருவாக்கப்பட்டவையாகும். உலகெங்கிலும் உள்ள 120 நாடுகளில் 669 உயிர்க்கோள காப்பகங்கள் உள்ளன.[1] இந்தியாவின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு நிலவியல் தோற்றங்களைப் பாதுகாக்கவும், உயிரியப் பன்முகத்தன்மை மற்றும் கலாச்சாரப் பெருமைகளைப் பேணவும் தேவையான நிதி உதவிகளை வழங்குகிறது.[2]


புவியியல்[தொகு]

குளிர் பாலைவனப் பகுதியானது 7770 சதுர கிலோமீட்டர்கள் (1,920,000 ஏக்கர்கள்) நிலப்பரப்பைக் கொண்டுள்ளது.

இந்த குளிர் பாலைவன உயிர்க்கோளமானது பின்வரும் பகுதிகளை உள்ளடக்கியுள்ளது:

அமைவிடம்[தொகு]

இந்தியாவின் குளிர் பாலைவனங்கள் இமயமலைத் தொடருக்குப் பக்கத்தில் அமைந்துள்ளன. இவை இமயமலையின் மழை மறைவுப் பிரதேசத்தில் அமைந்துள்ளதால், இந்திய பருவக்காற்றுகளால் பாதிக்கப்படாமல் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "biosphere reserves in india". general knowledge today.
  2. "biosphere reserves in india". general knowledge today.