உள்ளடக்கத்துக்குச் செல்

குளப்புறக்கல் கருணாகரன் நாயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குளப்புறக்கல் கருணாகரன் நாயர் (Kulappurakkal Karunakaran Nair) இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1931 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் பிரதிநிதியாக கேரள மாநில சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1972 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை 34 ஆண்டுகள் பத்தனம்திட்டாவை பிரதிநிதித்துவப்படுத்திய இவர், பத்தனம்திட்டா மாவட்டம் உருவாவதில் முக்கியப் பங்கு வகித்தார்.[1]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

திருமணம் செய்து கொள்ளாமல் சாகும் வரை பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தார்.[2]

அரசியல்

[தொகு]

தனது அரசியல் வாழ்க்கையில், 1959 முதல் 1979 வரை இந்திய பொதுவுடைமைக் கட்சியுடன் (மார்க்சு) தொடர்புடையவராகவும், அதன் பிறகு இந்திய தேசிய காங்கிரசுடனும், 2009 ஆம் ஆண்டு இந்திய பொதுத் தேர்தலுக்காக பகுசன் சமாச் கட்சியுடனும் ஒரு குறுகிய கால தொடர்பு கொண்டிருந்தார்.

பத்தனம்திட்டா தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராகவும், மலநாடு தொழிற்சங்க காங்கிரசின் தலைவராகவும் இருந்தார்.[3]

பத்தனம்திட்டா தொகுதியின் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினராக எட்டு முறை பதவி வகித்த இவர், கேரள சட்டமன்றத்தின் 3ஆவது, 4ஆவது, 6ஆவது, 7ஆவது, 8ஆவது, 9ஆவது, 10ஆவது மற்றும் 11ஆவது அமர்வுகளில் பணியாற்றினார்.

பத்தனம்திட்டா மாவட்டம் உருவாக்கம்

[தொகு]

பத்தனம்திட்டா மாவட்டத்தின் பூர்வீகவாசிகள் தங்கள் கனவை நிறைவேற்றியதற்காக மாவட்டத்தின் தந்தை என்று நாயரை அன்புடன் நினைவுகூருகிறார்கள்.[4] தற்போதைய பத்தனம்திட்டாவின் பகுதிகள் இப்போது அண்டை மாவட்டங்களான கொல்லம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களின் பகுதிகளாக இருந்தன. இதனால் ஏற்பட்ட தொலைதூரத்தன்மை இப்பகுதி மக்களையும் அதன் வளர்ச்சியையும் பாதித்தது.

நீண்ட காலமாக பத்தனம்திட்டாவை பிரதிநிதித்துவப்படுத்திய நாயர், அப்போதைய கேரள முதல்வர் கே. கருணாகரனை சந்தித்து, இரண்டாவது கருணாகரன் அமைச்சரவைக்கு ஆதரவளிப்பதற்கு ஈடாக ஒரு புதிய மாவட்டத்தை உருவாக்குவது குறித்து ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டார். தனது கனவை நிறைவேற்ற நாயர் தனது பதவியை விட்டு விலகல் செய்ய வேண்டும் என்று கருணாகரன் நாயரிடம் கூறினார். இதனால் நாயர் பதவி விலகினார். 1 நவம்பர் 1982 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1 ஆம் தேதியன்று பத்தனம்திட்டா மாவட்டம் உருவாக்கப்பட்டது. பின்னர், இடைத்தேர்தல்கள் மூலம் இவர் சட்டமன்ற உறுப்பினராகத் திரும்பினார்.

புதிய ஆட்சியர் அலுவலகக் கட்டிடம், மாவட்ட புற்றுநோய் மையம் கோழஞ்சேரி, பத்தனம்திட்டா சுற்றுவட்டச் சாலை , சுட்டிப்பாரா செவிலியர் கல்லூரி, திருவல்லா மற்றும் கோழஞ்சேரிக்கு மாவட்ட அலுவலகங்களை பரவலாக்குதல் போன்றவற்றிலும் இவர் முக்கியப் பங்கு வகித்தார்.[2]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "K K Nair passes away" New Indian Express- Express News Service – 8 February 2013 link
  2. 2.0 2.1 Service, Express News (2013-02-08). "K K Nair passes away". The New Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2024-05-31.
  3. Official biography link
  4. "Pathanamthitta Collectorate opens its walls of art for remembering K.K. Nair the Father of Pathanamthitta District". தி இந்து. http://www.thehindu.com/news/national/kerala/collectorate-opens-its-walls-for-art/article7691415.ece. 

வெளி இணைப்புகள்

[தொகு]