உள்ளடக்கத்துக்குச் செல்

குளக் கொக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குளக் கொக்கு
இந்திய குளத்துக் கொக்கு, ஆர்டியோலா கிரேயேயீ
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
ஆர்டியோலா
மாதிரி இனம்
ஆர்டியோலா ராலோயிடசு
சிற்றினம்

உரையினை காண்க

குளக் கொக்கு (Pond heron)(ஆர்டியோலா) பேரினத்தினைச் சார்ந்த ஹெரான்கள் ஆகும். இவை பொதுவாக 40–50 cm (16–20 அங்) இறக்கை நீளத்துடன் 80–100 cm (30–40 அங்) வரையிலானவை. பெரும்பாலானவை வெப்பமண்டல பழைய உலகில் இனப்பெருக்கம் செய்கின்றன. ஆனால் வலசை போகும் சுகுவாக்கோ ஹெரான் தெற்கு ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவில் குளிர்காலத்தில் இனப்பெருக்கம் செய்கின்றன. இவற்றின் விலங்கியல் பெயர் இலத்தீன் சொல்லான ஆர்டியோலா சிறிய ஹெரான் (ஆர்டியா) எனபொருள்படும் சொல்லிலிருந்துந்து வந்தது.

இந்த குளம் ஹெரான்கள் குட்டையான கழுத்து, குட்டையான தடிமனான அலகு, பொதுவாகக் குஞ்சம் அல்லது பழுப்பு நிற முதுகுடன், வண்ண அல்லது கோடுடைய முன் கழுத்து மற்றும் மார்பகத்துடன் கூடியது. கோடையில், முதிர்ச்சியடைந்த கொக்கிற்கு நீண்ட கழுத்து இறகுகள் காணப்படலாம். வெள்ளை இறகுகள் காரணமாக ஆர்டியோலா ஹெரான்கள் பறக்கும் போது மிகவும் வெண்மையாக இருக்கும்.

இவற்றின் இனப்பெருக்கம் செய்யுமிடங்களாக சதுப்புநிலங்கள் உள்ளன. இங்கு இவை சிறிய குழுவாகக் கூடு கட்டுகின்றன. பெரும்பாலும் மற்ற அலைந்து திரியும் பறவைகளுடன், பொதுவாக மரங்கள் அல்லது புதர்களில் உள்ள குச்சிகளின் தளங்களில் இவை அமைக்கப்படுகின்றன. இரண்டு முதல் ஐந்து முட்டைகள் வரை இடுகின்றன.

இந்த ஹெரான்கள் பூச்சிகள், மீன்கள் மற்றும் நீர்நில வாழ்வனவற்றை உண்கின்றன. இவை பெரும்பாலும் சிறிய குளங்களில் காணப்படுகின்றன. இவை குளங்களில் காணப்படுவதால் பெரும்பாலான சிற்றினங்கள் பொதுப்பெயரில் குளம் என்ற சொல் இடம்பெற்றுள்ளது.

சிற்றினங்கள்[தொகு]

படம் விலங்கியல் பெயர் பொது பெயர் பரவல்
ஆர்டியோலா கிரேயேயீ இந்திய குளத்துக் கொக்கு[1] தெற்கு ஈரான் மற்றும் கிழக்கு பாக்கித்தான், இந்தியா, மியாப்மர், வங்களாதேசம், இலங்கை
ஆர்டியோலா ராலோயிடசு சுகுவாக்கோ கொக்கு[2] தெற்கு ஐரோப்பா மற்றும் கிரேட்டர் மத்திய கிழக்கு.
ஆர்டியோலா பேச்சுசசு சீன குளக் கொக்கு[3] சீனா மற்றும் அதை ஒட்டிய மிதவெப்ப மற்றும் துணை வெப்பமண்டல கிழக்கு ஆசியா.
ஆர்டியோலா இசுபிசியோசா சாவகம் குளக் கொக்கு[4] தென்கிழக்கு ஆசியா.
ஆர்டியோலா இடே மலகாசி குளக் கொக்கு[5] கென்யா, தன்சானியா, உகாண்டா, உருவாண்டா மற்றும் சாம்பியா
ஆர்டியோலா ரூபிவெண்ட்ரிக்கசு செவ்வயிற்று கொக்கு[6] அங்கோலா, போட்சுவானா, புருண்டி, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, கென்யா, லெசோத்தோ, மலாவி, மாலி, மொசாம்பிக், நமீபியா, உருவாண்டா, தென்னாப்பிரிக்கா, எசுவாத்தினி, தன்சானியா, உகாண்டா, சாம்பியா மற்றும் சிம்பாப்வே.

மேற்கோள்கள்[தொகு]

  1. Faheem, Mahmood Syed. "Indian pond heron". பார்க்கப்பட்ட நாள் 2022-06-18.
  2. Snow, David William; Perrins, Christopher, eds. (1997). The Birds of the Western Palearctic [Abridged]. OUP. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-854099-X.
  3. BirdLife International (2016). "Ardeola bacchus". IUCN Red List of Threatened Species 2016: e.T22697133A93600684. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22697133A93600684.en. https://www.iucnredlist.org/species/22697133/93600684. பார்த்த நாள்: 12 November 2021. 
  4. BirdLife International (2016). "Ardeola speciosa". IUCN Red List of Threatened Species 2016: e.T22697138A93601050. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22697138A93601050.en. https://www.iucnredlist.org/species/22697138/93601050. பார்த்த நாள்: 12 November 2021. 
  5. Kushlan, James; Hafner, Heinz, eds. (2000). Heron conservation. San Diego: Academic Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-430130-6.
  6. Sinclair, I. & Ryan P.(2003), A Comprehensive Illustrated Field Guide Birds of Africa South of the Sahara, Struik, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1 86872 857 9
"https://ta.wikipedia.org/w/index.php?title=குளக்_கொக்கு&oldid=3581678" இலிருந்து மீள்விக்கப்பட்டது