குல்பூசண் ஜாதவ்
குல்பூசண் ஜாதவ் | |
---|---|
பிறப்பு | 16 ஏப்ரல் 1970[1] சாங்கலி, மகாராட்டிரா, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | கடற்படை அதிகாரி, (பாகிஸ்தானின் கூற்று) முன்னாள் கடற்படை அதிகாரி (இந்தியாவின் கூற்று) |
செயற்பாட்டுக் காலம் | 2003–2016 |
பெற்றோர் | சுதிர் ஜாதவ் (தந்தை)[2] அவந்தி ஜாதவ் (தாய்) |
வாழ்க்கைத் துணை | சேத்த்ன்குல் ஜாதவ் [3] |
இராணுவப் பணி | |
சேவை/ | இந்தியக் கடற்படை |
சேவைக்காலம் | 1987முதல் தற்போது வரை (பாகிஸ்தானின் கூற்ரு)[4] 1987–2001 (இந்தியாவின் கூற்று) |
தரம் | கமாண்டர் |
குல்பூசண் ஜாதவ் (Kulbhushan Sudhir Jadhav) (உசைன் முபாரக் படேல் என்று பாகிஸ்தானியர்களால் குற்றம் சாட்டப்பட்டவர்)[5][6][7] (பிறப்பு: 16 ஏப்ரல் 1970) இந்தியக் கடற்படையில் 1987–2001 காலத்தில் கமாண்டராக பணியாற்றிய முன்னாள் அதிகாரி ஆவார். இவர் பாகிஸ்தானின் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவிற்காக உளவு பார்த்ததாகக் பாகிஸ்தான் இராணுவத்தால் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார் என்று பாகிஸ்தான் அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. ஏப்ரல் 10, 2017 அன்று குல்பூசன் ஜாதவ் ஈரானிலிருந்து பாகிஸ்தானுக்கு கடத்திச் செல்லப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்தது.[8] குல்பூசண் யாதவ் இந்திய கடற்படையில் தளபதியாக இருந்ததாகவும், பாகிஸ்தானுக்குள் நாசகார நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், பலுசிஸ்தானில் உளவுத்துறைக்கு எதிரான நடவடிக்கையின் போது 3 மார்ச் 2016 அன்று கைது செய்யப்பட்டதாகவும் பாகிஸ்தான் அரசாங்கம் கூறியது.[9][10] ஆனால் இந்திய அரசு குல்பூசண் ஜாதவை முன்னாள் கடற்படை அதிகாரி என்றும், தற்போது இந்திய இராணுவத்துடன் அவரிடம் தொடர்புகள் ஏதும் இல்லை என்றும், ஈரானில் இருந்த அவரை பாகிஸ்தான் படைகள் பலுசிஸ்தானுக்கு கடத்திச் சென்றதாக இந்திய அரசு கூறுது.[11][12][13]
இந்திய அரசாங்கம் ஜாதவை ஒரு முன்னாள் கடற்படை அதிகாரியாக அங்கீகரித்தது, ஆனால் அவருடனான தற்போதைய தொடர்புகளை மறுத்தது மற்றும் அவர் முன்கூட்டிய ஓய்வு பெற்றதாகவும், ஈரானில் இருந்து கடத்தப்பட்டதாகவும் கூறியது
10 ஏப்ரல் 2017 அன்று பாகிஸ்தான் இராணுவ நீதிமன்றம் குல்பூசண் ஜாதவிற்கு மரண தண்டனை விதித்தது.[14][15] On 18 May 2017, the International Court of Justice stayed the execution pending the final judgement on the case.[16][17] குல்பூசண் ஜாதவின் தண்டனை எதிர்த்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக இந்தியாவின் வழக்கறிஞர்களை வைத்த்து வாதட அனுமதிக்கக் கோரும் இந்தியாவின் கோரிக்கையை பாகிஸ்தான் அரசு தள்ளுபடி செய்தது.[18] Pakistan granted consular access to India, once. However subsequent requests were blocked.[19] குல்பூசன் ஜாதவின் மரண தண்டனை வழக்கில் 18 மே 2017 அன்று அனைத்துலக நீதிமன்றம் இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு அளிக்கப்படும் வரை பாகிஸ்தான் அரசு மரணதண்டனையை நிறுத்தி வைக்குமாறு தீர்ப்பு வழங்கியது.[16]
இராஜதந்திர உறவுகள் மீதான வியன்னா மாநாடு தீர்மானத்தின் படி[20] மரண்டதண்டனை விதிக்கப்பட்ட குல்பூசண் ஜாதவ் தன் தரப்பு நியாத்தை நீதிமன்றத்தில் எடுத்துரைக்க வழக்கறிஞரை நியமிக்க இந்தியா கோரியதை அனைத்துலக நீதிமன்றம் 17 சூலை, 2019-இல் ஏற்றுக் கொண்டது. மேலும் குல்பூஷன் ஜாதவ் மீதான விசாரணை மற்றும் தண்டனையின் முழு செயல்முறையையும் பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் மற்றும் இந்தியாவுக்கு தூதரக அணுகலை வழங்க வேண்டும் என்று அது தீர்ப்பளித்தது.[21][22]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Neha Mahajan (25 March 2016). "India Says Ex-Naval Officer Arrested in Pak Is Not RAW Intel Agent". NDTV Convergence Limited. Archived from the original on 26 March 2016. பார்க்கப்பட்ட நாள் 26 March 2016.
- ↑ Naveed Ahmad (29 March 2016). "Analysis: Kulbhushan Yadav's RAW move". The Express Tribune. Archived from the original on 7 April 2016. பார்க்கப்பட்ட நாள் 7 April 2016.
- ↑ "Kulbhushan Jadhav Was Under Stress; Wife And Mother Had To Change For Meeting: India". பார்க்கப்பட்ட நாள் 17 July 2019.
- ↑ Syed, Baqir Sajjad (6 February 2018). "Jadhav now facing trial on terrorism, sabotage charges". Dawn. https://www.dawn.com/news/1387502/jadhav-now-facing-trial-on-terrorism-sabotage-charges.
- ↑ "Jadhav's death sentence is 'premeditated murder', says India in demarche to Pakistan". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 10 April 2017 இம் மூலத்தில் இருந்து 10 April 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170410131532/http://timesofindia.indiatimes.com/india/jadhavs-death-sentence-is-premeditated-murder-says-government-in-demarche-to-pakistan/articleshow/58110508.cms.
- ↑ "RAW agent reveals, more spies present to destabilise Pakistan". geo.tv. Archived from the original on 29 March 2016. பார்க்கப்பட்ட நாள் 27 March 2016.
- ↑ "Pakistan Claims Arrest of 'RAW Agent' in Balochistan. What Happens Next". The Wire. Archived from the original on 4 September 2016. பார்க்கப்பட்ட நாள் 27 March 2016.
- ↑ "Kulbhushan Jadhav Kidnapped From Iran, No Evidence Against Him, Says India". NDTV.com.
- ↑ Mateen Haider, Shakeel Qarar (25 March 2016). "India accepts 'spy' as former navy officer, denies having links". DAWN. Archived from the original on 26 March 2016. பார்க்கப்பட்ட நாள் 26 March 2016.
- ↑ "Delhi denies arrest of 'Indian spy' in Pakistan". BBC. 30 March 2016. Archived from the original on 31 March 2016. பார்க்கப்பட்ட நாள் 30 March 2016.
- ↑ "Press statement on video released by Pakistani authorities". Archived from the original on 24 April 2016. பார்க்கப்பட்ட நாள் 22 January 2018.
- ↑ "Rijiju Slams Pakistan for Releasing Doctored Video on Arrested Man". The New Indian Express. Press Trust of India. 30 March 2016 இம் மூலத்தில் இருந்து 3 April 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160403141720/http://www.newindianexpress.com/nation/Rijiju-Slams-Pakistan-for-Releasing-Doctored-Video-on-Arrested-Man/2016/03/30/article3354578.ece.
- ↑ Revealed: 'Spy' Kulbhushan Yadav not caught but abducted by extremist Sunni group Jaishul Adil பரணிடப்பட்டது 9 மே 2016 at the வந்தவழி இயந்திரம், India Today, 30 March 2016.
- ↑ "Pakistan sentences Indian spy Kulbhushan Jadhav to death". Dawn. 11 April 2017 இம் மூலத்தில் இருந்து 11 April 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170411042136/https://www.dawn.com/news/1326109/pakistan-sentences-indian-spy-kulbhushan-jadhav-to-death.
- ↑ "Former Naval Officer Kulbhushan Jadhav Sentenced To Hang in Pak". என்டிடிவி. 10 April 2017. http://www.ndtv.com/india-news/indian-naval-officer-kulbhushan-jadhav-arrested-in-pakistan-on-spying-charge-sentenced-to-death-1679524.
- ↑ 16.0 16.1 "Pakistan Is Ordered to Suspend Execution of Indian Convicted of Espionage". The New York Times. 18 May 2017 இம் மூலத்தில் இருந்து 22 January 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180122102812/https://www.nytimes.com/2017/05/18/world/asia/kulbhushan-sudhir-jadhav-pakistan-india-execution.html?_r=0.
- ↑ "ICJ Provincial measures" (PDF). Archived (PDF) from the original on 15 July 2017.
- ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
- ↑ "No second consular access planned for Jadhav: Pakistan" (in en-IN). The Hindu. 2019-09-12. https://www.thehindu.com/news/national/no-second-consular-access-planned-for-jadhav-pakistan/article29401584.ece.
- ↑ Vienna Convention on Diplomatic Relations
- ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
- ↑ JADHAV CASE JUDGMENT OF 17 JULY 2019 by International Court of Justice (PDF) (Report).