உள்ளடக்கத்துக்குச் செல்

குல்பதன் பேகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குல்பதன் பேகம்
Gulbadan Begum
ஷா (பட்டம்) of the முகலாயப் பேரரசு
இளவரசி குல்பதன் பேகம்
பிறப்புஅண். 1523
காபுல், ஆப்கானித்தான்
இறப்பு7 பெப்ரவரி 1603(1603-02-07) (அகவை 79–80)
ஆக்ரா, இந்தியா
புதைத்த இடம்
துணைவர்
கிசர் கவாஜா கான்
(தி. 1540)
குழந்தைகளின்
பெயர்கள்
சாதத் யார் கான்
மரபுதைமூர்
அரசமரபுதைமூர் வம்சம்
தந்தைபாபுர்
தாய்தில்தார் பேகம் (உயிரியல்)
மகம் பேகம் (தத்தெடுப்பு)
மதம்சுன்னி இசுலாம்

குல்பதன் பேகம் (Gulbadan Begum) (1523-7 பிப்ரவரி 1603) ஒரு முகலாய இளவரசியும் மற்றும் முகலாயப் பேரரசை நிறுவிய பேரரசர் பாபுரின் மகளும் ஆவார்.[1]

தனது ஒன்றுவிட்ட சகோதரரும் பாபுரின் வாரிசுமான பேரரசர் நசிருதீன் உமாயூனின் வாழ்க்கைக் குறிப்பான உமாயூன்-நாமா என்ற புத்தகத்தின் ஆசிரியராக இவர் நன்கு அறியப்படுகிறார். இது உமாயூனின் மகனும் பேரரசராகிய அக்பரின் வேண்டுகோளின் பேரில் எழுதப்பட்டது.[2]

வாழ்க்கை

[தொகு]

குல்பதன் பேகத்தின் எட்டாவது வயதில் (1530) இவரது தந்தை பாபுர் இறந்துபோனார். இவரை இவரது மூத்த ஒன்றுவிட்ட சகோதரர் உமாயூன் வளர்த்தார்.[3] மொகுலிசுதானிலிருந்த துர்பன் கானேட்டைச் சேர்ந்த கிசர் கவாஜா கானை தனது பதினேழாவது வயதில் திருமணம் செய்து கொண்டார்.[4]

இவர் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை காபுலில் கழித்தார். 1557 ஆம் ஆண்டில், ஆக்ராவிலுள்ள ஏகாதிபத்திய குடும்பத்தில் சேர அக்பரால் அழைக்கப்பட்டார். குர்பதன் ஏகாதிபத்திய குடும்பத்தில் பெரும் செல்வாக்கையும் மரியாதையையும் கொண்டிருந்தார். மேலும் அக்பராலும் அவரது தாயார் அமீதா பானு பேகத்தாலும் மிகவும் நேசிக்கப்பட்டார். அபுல் ஃபசல் தனது அக்பர்நாமா எனும் நூல் முழுவதிலும் குல்பதன் பேகம் பற்றி குறிப்பிட்டுள்ளார். இப்படைப்பில் இவரது வாழ்க்கை வரலாற்று விவரங்களை அறிந்துகொள்ள முடிகிறது.

குல்பதன் பேகம் பல அரச பெண்களுடன் சேர்ந்து மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை மேற்கொண்டார். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு 1582 இல் வீடு திரும்பினார். குல்பதன் பேகம் 1603 இல் இறந்தார்.

பெயர் காரணம்

[தொகு]

குல்பதன் பேகம் என்ற பெயருக்கு பாரம்பரிய பாரசீக மொழியில் "பூ போன்ற உடல்" அல்லது "ரோஜா உடல்" என்று பொருள்.[5]

உமாயூன் நாமா எழுதுதல்

[தொகு]

இவரது கதைசொல்லும் திறன்களை அறிந்திருந்த அக்பர் தனது தந்தை உமாயூனின் கதையை விவரிக்க குல்பதன் பேகத்தைக் கேட்டுக்கொண்டார். முகலாயர்கள் தங்கள் சொந்த ஆட்சியை ஆவணப்படுத்த எழுத்தாளர்களை ஈடுபடுத்துவது வழக்கமாக இருந்தது. குல்பதன் பேகம் இப்பணியை ஏற்றுக்கொண்டு உமாயூன் நாமாவைத் தயாரித்தார்.

நன்கு அறியப்பட்ட எழுத்தாளர்கள் பயன்படுத்தும் அறிவாற்றல் மொழி இல்லாமல், குல்பாதன் எளிய பாரசீக மொழியில் எழுதினார். இவரது தந்தை பாபர் அதே பாணியில் பாபர்-நாமாவை எழுதியிருந்தார். மேலும் இவர் தனது நினைவுகளிலிருந்து குறிப்புகளை எடுத்து எழுதினார். தனது சமகால எழுத்தாளர்கள் சிலரைப் போலல்லாமல், குல்பதன் அலங்காரம் ஏதுமில்ல்லாமல் எழுதினார். இந்த ஆவணம் உமாயூனின் ஆட்சியின் சோதனைகள் மற்றும் இன்னல்களை விவரிப்பது மட்டுமல்லாமல், முகலாயப் பெண்களின் அந்தப்புர வாழ்க்கையின் ஒரு பார்வையையும் நமக்குத் தருகிறது. 16 ஆம் நூற்றாண்டில் முகலாய அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் எழுதிய ஒரே எழுத்து இதுதான்.

குல்பதன் உமாயூன்-நாமாவை பாரசீக மொழியில் எழுதாமல் தனது சொந்த மொழியான துருக்கிய மொழியில் எழுதியதாகவும், இன்று கிடைக்கும் புத்தகம் ஒரு மொழிபெயர்ப்பு என்றும் ஒரு கருத்து உள்ளது.[6] குல்பதன் பாரசீக மற்றும் துருக்கிய மொழிகளில் சரளமாக பேசும் கவிஞராகவும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இவரது கவிதைகள் எதுவும் தற்போது கிடைக்கப்பெறவிவில்லை. இருப்பினும், கடைசி முகலாயப் பேரரசர் பகதூர் சா சஃபார் தனது வசனத் தொகுப்பில் இவர் எழுதிய இரண்டு வசனங்களையும், ஒரு கசீதாவையும், மிர் தாகி மீரின் சில குறிப்புகளையும் குறிப்பிடுகிறார்.

வரலாற்றின் பெரும்பகுதிக்கு, குல்பதன் பேகமின் கையெழுத்துப் பிரதி தெளிவற்ற நிலையில் இருந்தது. சமகால இலக்கியங்களில் மற்ற முகலாய எழுத்தாளர்கள், குறிப்பாக அக்பரின் ஆட்சியை விவரித்த எழுத்தாளர்கள் பற்றி இது பற்றி அதிகம் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், குல்பதன் பேகத்தைப் பற்றிய அதிகம் அறியப்படாத விவரம் வரலாற்றாசிரியர்களுக்கு ஒரு முக்கியமான ஆவணமாகும். இது முகலாய அரண்மனை அந்தப்புரத்திற்குள் இருந்து ஒரு பெண்ணின் கண்ணோட்டத்தை வெளிப்படுத்துகிறது.

பிற்கால வாழ்க்கை

[தொகு]

இவருக்கு 70 வயதாக இருந்தபோது, இவரது பேரனான முகமது-யார் என்ற பெயருடன் இவரது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும் தனது கடைசி காலத்தில் அவமானத்துடன் அரசவையை விட்டு வெளியேறினார். உமாயூனின் மனைவி அமீதா பானு பேகத்துடன் சேர்ந்து நகைகளையும், பரிசுகளையும் அக்பரிடமிருந்து பெற்றார்.

இவரது தொண்டுப் பணிகள் பெரிய அளவில் இருந்தன. மேலும் ஏழைகளுக்கும் தேவைப்படுபவர்களுக்கும் உதவுவதன் மூலம் கடவுளைப் பிரியப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இறப்பு

[தொகு]

1603 பிப்ரவரியில், 80 வயதில் இறந்தார்.

பிரபலமான கலாச்சாரத்தில்

[தொகு]
  • சல்மான் ருஷ்டி எழுதிய தி என்சாண்ட்ரெஸ் ஆஃப் புளோரன்ஸ் (2008) என்ற புதினத்தில் குல்பதன் பேகம் ஒரு முக்கிய கதாபாத்திரமாக உள்ளார்.[7]
  • ஜோதா அக்பர் என்ற தொலைக்காட்சித் தொடரில் குல்பதன் பேகம் கதாபாத்திரத்தில் சிரத்தா சிங் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Aftab, Tahera (2008). Inscribing South Asian Muslim women : an annotated bibliography & research guide ([Online-Ausg.]. ed.). Leiden: Brill. p. 8. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789004158498.
  2. Faruqui, Munis D. (2012). Princes of the Mughal Empire, 1504-1719. Cambridge: Cambridge University Press. p. 251. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781107022171.
  3. Ruggles, D. Fairchild (2000). Women, patronage, and self-representation in Islamic societies. Albany, N.Y.: State University of New York Press. p. 121. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780791444696.
  4. Balabanlilar, Lisa (2015). Imperial Identity in the Mughal Empire: Memory and Dynastic Politics in Early Modern South and Central Asia (in ஆங்கிலம்). I.B.Tauris. p. 8. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780857732460.
  5. Ruggles, D. Fairchild (2000). Women, patronage, and self-representation in Islamic societies. Albany, N.Y.: State University of New York Press. p. 121. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780791444696.
  6. "2. The Culture and Politics of Persian in Precolonial Hindustan", Literary Cultures in History, University of California Press, pp. 131–198, 2019-12-31, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1525/9780520926738-007, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-92673-8, பார்க்கப்பட்ட நாள் 2021-06-11
  7. Rushdie, Salman (2008). Enchantress of Florence, The. London: Random House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1407016498.

நூற்பட்டியல்

[தொகு]
  • Begum, Gulbadan; (tr. by Annette S. Beveridge) (1902). Humayun-nama :The history of Humayun. Royal Asiatic Society.
  • Begam Gulbadam; Annette S. Beveridge (1902). The history of Humayun = Humayun-nama. Begam Gulbadam. pp. 249–. GGKEY:NDSD0TGDPA1.
  • Humayun-Nama : The History of Humayun by Gul-Badan Begam. Translated by Annette S. Beveridge. New Delhi, Goodword, 2001, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-87570-99-7.
  • Rebecca Ruth Gould "How Gulbadan Remembered: The Book of Humāyūn as an Act of Representation," Early Modern Women: An Interdisciplinary Journal, Vol. 6, pp. 121–127, 2011
  • Three Memoirs of Homayun. Volume One: Humáyunnáma and Tadhkiratu’l-wáqíát; Volume Two: Táríkh-i Humáyún, translated from the Persian by Wheeler Thackston. Bibliotheca Iranica/Intellectual Traditions Series, Hossein Ziai, Editor-in-Chief. Bilingual Edition, No. 11 (15 March 2009)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குல்பதன்_பேகம்&oldid=4170630" இலிருந்து மீள்விக்கப்பட்டது