குல்பக்ஜி
குல்பக்ஜி தீர்த்தம் | |
---|---|
குல்பக்ஜி | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | கோலானுபகா,அலேர் நகரம், யதாத்ரி, தெலங்காணா, இந்தியா |
புவியியல் ஆள்கூறுகள் | 17°41′55″N 79°02′14″E / 17.698611°N 79.037222°E |
சமயம் | சைனம் |
குல்பக்ஜி (Kulpakji) கோலானுபகா கோயில் எனவும் அழைக்கப்படும் இது 2,000 ஆண்டுகள் பழமையான சமணக் கோயிலாகும். [1] [2] [3] இது இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தில், யாதத்ரி மாவட்டம், அலேர் நகரில் உள்ள கோலானுபகா கிராமத்தில் உள்ளது.[4][5] இந்த கோவிலில் மூன்று சிலைகள் உள்ளன: ரிசபநாதர், நேமிநாதர், மகாவீரர் . பச்சைக் கல்லால் செதுக்கப்பட்ட சபநாதரின் உருவம் வரலாற்று ரீதியாக "மாணிக்கசுவாமி" என்று பிரபலமானது. [6] ஐதராபாத்து-வாரங்கல் தேசிய நெடுஞ்சாலை எண் 163 இல் ஐதராபாத்திலிருந்து சுமார் 80 கி.மீ தூரத்தில் உள்ள இந்த கோயில் ஜீவிட்சுவாமி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது
வரலாறு
[தொகு]கோலானுபகா கோயில் 2,000 ஆண்டுகளுக்கும் மேலானது.[7][8] குல்பக்ஜியில் ஏராளமான சமண தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சன்ப்கராகனாவின் (9 ஆம் நூற்றாண்டு) ஆட்சியின் போது ஒரு பசாடிக்கு ஒரு பரிசைக் குறிப்பிடும் மானியம் அகுனூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[9] கோலணபாகா ராஷ்டிரகூட காலத்தில் சமண மையமாக வளர்ந்தது.[10]
குல்பக்கில் 20 க்கும் மேற்பட்ட சமண கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[9] முலா சங்கத்தின் கிரானூர் கானாவின் முக்கிய மையமாக குல்பக்ஜி இருந்தது என்று கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. கி.பி 1125 கல்வெட்டுடன் ஒரு தூபி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோயிலில் காணப்படும் 12 ஆம் நூற்றாண்டின் கல்வெட்டில் சல்லேகனையை பின்பற்றிய மேகச்சத்ர சித்தாந்ததேவனைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
சில புராணங்களின் படி பிரதான கோயில் பாரத் சக்ரவர்த்தியால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. 4 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் ஆந்திராவில் சமண மதம் பரவலாக இருந்தது, ஆரம்ப காலத்திலிருந்தே சமண மதத்தின் முக்கிய மையங்களில் கோலானுபகாவும் ஒன்று.[11] இந்த கோயில், சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது [12] ராஜஸ்தான் மற்றும் குசராத்திலிருந்து 150 க்கும் மேற்பட்ட கைவினைஞர்களை இப்பணிக்கு அழைத்து வரப்பட்டனர்.[13]
புதுப்பித்தல்
[தொகு]சோம்புராக்களின் மேற்பார்வையில் ராஜஸ்தான் மற்றும் குசராத்தைச் சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட கைவினைஞர்களைப் பயன்படுத்தி இந்த கோயில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. பழைய கருவறை பாதுகாக்கப்பட்டு, தற்போதுள்ள கோபுரத்தை சுற்றி ஒரு முழுமையான புதிய கோயில் உருவாக்கப்பட்டது.[14]
புகைப்படங்கள்
[தொகு]-
மகாவீரர் சிலை
-
கோலானுபகா கோயில் (குல்பக்ஜி கோயில்) கோபுரம்
-
கோலானுபகா கோயில் (குல்பக்ஜி கோயில்) நுழைவாயில்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Shanker 2018.
- ↑ District Profile Telangana Government.
- ↑ Jain Temple at Kolanpak Warangal Police.
- ↑ "Kolanupaka temple to be re-opened". 1 December 2008 – via www.thehindu.com.
- ↑ "The Hindu : Andhra Pradesh / Hyderabad News : School toppers feted". Archived from the original on 2010-07-24. பார்க்கப்பட்ட நாள் 2021-04-20.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ Legacy of the Rashtrakutas Telangana Today.
- ↑ templesinindiainfo.com › Telangana Temples › Nalgonda Temples
- ↑ Telangana, Explore (29 July 2014). "Kolanupaka Jain Temple – 2000 years old Jain Temple of Telangana".
- ↑ 9.0 9.1 Jain Monuments of Andhra, G. Jawaharlal, Sharda Publishing House, Delhi, 2002, (Chap. 5, Kulpak -A Jain Tirth Kshetra, p. 94-100
- ↑ Spirituality sculpted ARUNA CHANDARAJU, The Hindu, 23 January 2014 http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/spirituality-sculpted/article5610052.ece
- ↑ BSL Hanumantha Rao, The Jain Relics of Kolanupak, Arhat vacana, October 1992, pp. 7–11
- ↑ History of Oswals, Jain Chanchalmal Lodha, Panchshil Publications, 2005 p. 228
- ↑ Kulpakji Jain Temple, 10 September 2012, http://www.herenow4u.net/index.php?id=88652
- ↑ Kulpak Temple, Hyderabad (Architects) http://www.cptrivedi.com/p_kulpak_temple_hyderabad.asp பரணிடப்பட்டது 1 பெப்பிரவரி 2014 at the வந்தவழி இயந்திரம்
ஆதாரங்கள்
[தொகு]- "District Profile". Telangana government. Archived from the original on 2020-07-20. பார்க்கப்பட்ட நாள் 2021-04-20.
- "Kulpakji temple".
- "Places of interest - Jain Temple at Kolanpak or Kolanupaka". Warangal Police. Archived from the original on 8 September 2015. பார்க்கப்பட்ட நாள் 13 September 2015.
- Shanker, C.R. Gowri (15 July 2018). "Nyaya Lingam is a role model for harmony". தி டெக்கன் குரோனிக்கள். https://www.deccanchronicle.com/nation/current-affairs/150718/nyaya-lingam-is-a-role-model-for-harmony.html.
- "Kolanupaka village: Ageless and amazing!". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 2 September 2017.
- Chatterjee, Saurabh (14 May 2017). "Legacy of the Rashtrakutas". தெலுங்கானா டுடே. Archived from the original on 20 ஏப்ரல் 2021. பார்க்கப்பட்ட நாள் 20 ஏப்ரல் 2021.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help)