உள்ளடக்கத்துக்குச் செல்

குல்னார் மம்மதோவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குல்னார் மம்மதோவா
Gulnar Mammadova
முழுப் பெயர்குல்னார் மர்ஃபட் கிசி மம்மதோவா
நாடு அசர்பைஜான்
பிறப்புமே 11, 1991 (1991-05-11) (அகவை 33)
சிர்வான், அசர்பைசான் சோவியத் சோசலிச குடியரசு, சோவியத் ஒன்றியம்
பட்டம்ஐ.எம் (2017)
பெண் கிராண்டுமாசுட்டர் (2012)
பிடே தரவுகோள்2395 (செப்டம்பர் 2021)
உச்சத் தரவுகோள்2401 (சனவரி 2017)

குல்னார் மர்ஃபட் கிசி மம்மதோவா (Gulnar Marfat qizi Mammadova) அசர்பைசான் நாட்டைச் சேற்ந்த ஒரு சதுரங்க வீராங்கனையாவார். அசர்பைசான் நாட்டிலுள்ள சிர்வான் நகரில் இவர் 1991 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் தேதியன்று பிறந்தார். பன்னாட்டு சதுரங்க மாசுட்டர், பெண் கிராண்டு மாசுட்டர் பட்டங்களையும் குல்னார் வென்றுள்ளார்.

2021 ஆம் ஆண்டு அசர்பைசானில் நடைபெற்ற சதுரங்க வெற்றியாளர் போட்டியை குல்னார் வென்றார்.

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் சதுரங்க ஒலிம்பியாடு போட்டியில் 3-ஆவது பலகையில் சிறந்த தனிநபர் செயல்திறனுக்காக மம்மதோவா தங்கப் பதக்கத்தை வென்றார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Азербайджанская шахматистка стала лучшей на третьей доске по итогам бакинской Олимпиады". Echo.az. 2016-09-16. Archived from the original on 2016-09-15. பார்க்கப்பட்ட நாள் 2017-01-26.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குல்னார்_மம்மதோவா&oldid=3857260" இலிருந்து மீள்விக்கப்பட்டது