குல்தாபாத்
குல்தாபாத் | |
---|---|
இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலத்தில் குல்தாபாத் நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 20°00′34″N 75°11′20″E / 20.009524°N 75.188799°E | |
நாடு | ![]() |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | சத்திரபதி சம்பாஜிநகர் மாவட்டம் |
ஏற்றம் | 857 m (2,812 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 15,749 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | மராத்தி |
• பிற மொழிகள் | உருது, இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 431101 |
வாகனப் பதிவு | MH-20 |


குல்தாபாத் (Khuldabad), இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலத்தின் சத்திரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் அமைந்த குல்தாபாத் தாலுகாவின் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இங்கு முகலாயப் பேரரசன் ஔரங்கசீப் கல்லறை[1] மற்றும் படைத்தலைவர் மாலிக் ஆம்பரின் கல்லறைகள் உள்ளது. இந்நகரம் மாவட்டத் தலைமையிடமான சம்பாஜி நகருக்கு வடகிழக்கே 27 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
புவியியல் & சுற்றுலா
[தொகு]குல்தாபாத் கடல் மட்டத்திலிருந்து 500 அடி (152.4 மீட்டர்) உயரத்தில் அமைந்துள்ளது. எல்லோரா குடைவரைகள் குல்தாபாத்திற்கு 4 மைல் தொலைவிலும், அஜந்தா குகைகள் 87 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. குல்தாபாத்தில் பயணியர்கள் விடுதிகள் உள்ளது..[2]
மக்கள் தொகை வகைப்பாடு
[தொகு]2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 17 வார்டுகளும் , 2,861 குடியிருப்புகளும் கொண்ட குல்தாபாத் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 15,749 ஆகும். அதில் 8,112 ஆண்கள் மற்றும் 7,637 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 941 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 81.97 % ஆக உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 7.64 % மற்றும் 3.24 % ஆக உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 41.14%, இசுலாமியர் 58.08% மற்றும் பிற சமயத்தினர் 0.74% ஆக உள்ளனர். [3]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- [1] Archaeological Survey of India link.
- Google Books (Eternal Garden - Carl Ernst)
- Sufi Dargah in Khuladabad பரணிடப்பட்டது 3 மார்ச் 2016 at the வந்தவழி இயந்திரம்