குல்ச்சா (ரொட்டி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குல்ச்சா (ரொட்டி)
இந்தியாவிலிருந்து சோளேயுடன் குல்ச்சா.
வகைதட்டையான ரொட்டி
தொடங்கிய இடம்இந்திய துணைக்கண்டம்
பகுதிஜம்மு, காசுமீர், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தர பிரதேசம்
முக்கிய சேர்பொருட்கள்மைதா மாவு
சண்டிகரில் ஒரு இடத்தில் சோலேயுடன் அமிர்தசாரி ஆலு(உருளைக்கிழங்கு) குல்சா பரிமாறப்பட்டது.

குல்ச்சா (ரொட்டி) என்பது இந்திய துணைக்கண்டத்தில் தோன்றிய லேசான புளித்த தட்டையான ரொட்டி வகையாகும்.

செய்முறை[தொகு]

குல்ச்சா மைதா மாவு, தண்ணீர், ஒரு சிட்டிகை உப்பு மற்றும் புளிப்பேற்றியான (ஈசுட்டு அல்லது பழைய குல்ச்சா மாவு) ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது. கையால் ஒன்றாகப் பிசைந்து மிகவும் கெட்டியான மாவை திரட்டவும். ஈரமான துணியால் மூடப்பட்ட இந்த மாவை ஒரு மணி நேரம் வெதுவெதுப்பான இடத்தில் வைக்கவும். மாவில் சிறிது புளிப்பு ஏறும். ஆனால் அதிகமாக ஏறாது.. மாவை மீண்டும் கையால் பிசைந்து, திரட்டி சப்பாத்தி உருட்டுக் கட்டையில் வைத்து தட்டையாக, வட்ட வடிவில் உருட்டவும். இதனை ஒரு களிமண் அடுப்பில் (" தந்தூர் ") இட்டு வாட்டவும். வாட்டும்போது, அதில் வெண்ணெய் அல்லது நெய் தடவவும். நெய் அல்லது வெண்ணெய் தேவையில்லை என்றால் இந்திய கறியுடன் உண்ணலாம். குறிப்பாக, சோளே எனப்படும் காரமான வெள்ளை சன்னா கறி, குல்ச்சாவுடன் சாப்பிடுவதற்கு ஏற்ற உணவாகும்.[1]

வேறுபாடுகள்[தொகு]

முதல் மாறுபாட்டில், மாவை பிசைவதற்கு தண்ணீரைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, பால் அல்லது தயிர் பயன்படுத்தலாம்; இதன் விளைவாக மாவு மென்மையாகவும் மேலும் ரப்பர் நிறமாகவும் மாறும். இந்த வகை குல்ச்சா தூதியா குல்ச்சா (பால் குல்ச்சா) என்று அழைக்கப்படுகிறது. தயிர் பயன்படுத்தினால் புளிப்பு பெரும்பாலும் அதிகமாக இருக்கும்.

இந்த வகை குல்ச்சாக்கள் போதியப்படாமல் (Stuffing), வெறுமையாகவே காய்கறிகள், பருப்பு வகைகள் அல்லது இறைச்சி சேர்த்த துணைக் கறியுடன் சேர்த்து உண்ணலாம்.

இரண்டாவது வகை: முகலாயர்கள் மற்றும் நிஜாம்கள் காலத்தில் அவர்களது தர்பார்களில் பரிமாறப்பட்ட குல்சாக்கள் பொதியப்பட்டவை (Stuffed) ஆகும்.[2] எடுத்துக்காட்டாக, ஆவாத் பகுதியில், ஆவாதி குல்ச்சா (ஆங்கிலம்: Awadhi Kulcha), ஆட்டிறைச்சி சேர்த்த உணவான நஹாரியுடன் (ஆங்கிலம்: Nahari) பரிமாறப்படுகிறது.[3]

இப்போதெல்லாம், இவை உணவகம் மற்றும் கடைகளில் விற்கப்படுகின்றன. ஜம்முவின் காலடி குல்ச்சா (Kaladi Kulcha) பாரம்பரிய டோக்ரா சீஸ் (Dogra Cheese) அதாவது காலடி சீஸ் (Kaladi Cheese) ஜம்முவில் அதிகம் விரும்பப்படும் தெரு உணவுகளில் (Street foods) ஒன்றாகும்.[4] காலடி சீஸ் ஐ ஒரு கடாயில் எண்ணெயில், இருபுறமும் பழுப்பு நிறமாக வரும் வரை வதக்கி, வறுத்த குல்ச்சாக்களுக்கு இடையில் பொதியப்படுகிறது.[5]

Two dishes served in separate metal containers, as if ready for two people who will be sitting on opposite side of a narrow table
சோளேயுடன் அமிர்தசாரி குல்சா (கொண்டைக்கடலை கறி)

அமிர்தசாரி குல்ச்சா, அதாவது அமிர்தசாரி நான், என்பது ஒரு நவீன செய்முறையாகும். இது அமிர்தசரஸின் உள்ளூர் மக்களுக்கான விருப்பமான காலை உணவுகளில் ஒன்றாக மாறியுள்ளது.[6]

வட இந்தியா முழுவதிலும், பனீர் (பாலாடைக்கட்டி), உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் பிற காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் இந்த குல்சாக்களில் பொதிவதற்கு பயன்படுத்தப்படுகின்றன.

பாகிஸ்தானில், குல்ச்சா ரொட்டிகள் ஹசாரா மற்றும் வடக்கு பஞ்சாப் பகுதிகளின் சில பகுதிகளில் விரும்பி உண்ணப்படுகின்றன. அங்கு அவை நன்கு அறியப்பட்ட காலை சிற்றுண்டியாகும்.[7]

மேலும் பார்க்கவும்[தொகு]

  • இந்திய ரொட்டிகளின் பட்டியல்
  • பாகிஸ்தானிய ரொட்டிகளின் பட்டியல்

மேற்கோள்கள்[தொகு]

  1. suman, haldar (14 December 2021). "Amritsari Kulcha". one in abillion blog. பார்க்கப்பட்ட நாள் 15 December 2021.
  2. Sadaf (2017-08-19). "Hidden Secrets of Amritsari Kulcha". Food and Streets by Sadaf (in ஆங்கிலம்). Archived from the original on 2020-01-11. பார்க்கப்பட்ட நாள் 2019-10-05.
  3. Brien (2013-12-15). The Penguin Food Guide to India (in ஆங்கிலம்).
  4. Excelsior, Daily (2020-12-05). "Kaladi Experience". Jammu Kashmir Latest News | Tourism | Breaking News J&K (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-27.
  5. "How kulchas from India and Pakistan act as a great unifier". Mintlounge (in ஆங்கிலம்). 2021-03-10. பார்க்கப்பட்ட நாள் 2021-03-27.
  6. "Kulcha- the everlasting love of Amritsaris". Amritsar Online. April 8, 2019. Archived from the original on ஜனவரி 8, 2020. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 29, 2022. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  7. "Traditional foods: In Pindi, a place for Kashmiri bread lovers". Express Tribune. 2 November 2012. http://tribune.com.pk/story/459486/traditional-foods-in-pindi-a-place-for-kashmiri-bread-lovers/. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குல்ச்சா_(ரொட்டி)&oldid=3628151" இலிருந்து மீள்விக்கப்பட்டது