குல்செக்ரா ஹோஜா
குல்செக்ரா ஹோஜா | |
---|---|
![]() | |
பிறப்பு | 1973 உருமுச்சி, சின்சியாங், சீன மக்கள் குடியரசு |
குடியுரிமை | அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
கல்வி | உய்குர் மொழியிலும், இலக்கியத்திலும் இளங்கலைப் பட்டம் |
அறியப்படுவது | ரேடியோ பிரீ ஆசியாவின் ஊடகவியலாளர் |
குல்செக்ரா குலி ஏ. ஹோஜா ( Gulchehra "Guli" A. Hoja ) (பிறப்பு 1973) ஒரு உய்குர்-அமெரிக்க பத்திரிகையாளர் ஆவார். இவர் 2001 ஆம் ஆண்டு முதல் ரேடியோ ஃப்ரீ ஏசியாவில் பணியாற்றி வருகிறார்.[1][2][3] நவம்பர் 2019 இல், சின்சியாங்கில் நடந்து வரும் மனித உரிமைகள் நெருக்கடியைப் பற்றி அறிக்கை செய்ததற்காக மேக்னிட்ஸ்கி மனித உரிமைகள் விருதைப் பெற்றார்.[4] மேலும் 2020 இல், சர்வதேச பெண்கள் ஊடக அறக்கட்டளையின் [5] தைரியமான பத்திரிகையாளருக்கான விருதைப் பெற்றார் . மேலும் 2020 ஆம் ஆண்டில், "மிகவும் செல்வாக்கு மிக்க 500 முஸ்லிம்கள்" பட்டியலில் இடம்பெற்றார்.[6]
ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]
குல்செக்ரா, 1973 ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசின் சின்சியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியின் தலைநகரான உருமுச்சியில் பிறந்தார். [3] இவரது தந்தை சின்சியாங் பிராந்திய அருங்காட்சியகத்தின் தொல்லியல் துறையின் தலைவராக பணியாற்றிய ஒரு புகழ்பெற்ற எழுத்தாளரும் தொல்லியல் ஆராய்ச்சியாளரும் ஆவார்.[3][7] இவரது எழுத்து உய்குர் மொழியிலும் வரலாற்றிலும் கவனம் செலுத்தியது. இவரது தொல்பொருள் பணிகளில் தாரிம் படுகையில் காணப்படும் மம்மிகள் பற்றிய களப்பணிகளும் அடங்கும். [3][7] இவரது தாயார் மருந்தியல் பேராசிரியராகவும் மருந்தாளுநராகவும் பணியாற்றினார். [3] இவருக்கு இளைய சகோதரர் இருக்கிறார். [3] இவரது தாத்தா பாரம்பரிய உய்குர் இசையின் பரவலாக அறியப்பட்ட இசையமைப்பாளர் ஆவார். [3] [7]
வளர்ந்து வரும் போது, இன உய்குர்களால் நடத்தப்படும் உய்குர் மொழிப் பள்ளிகளில் பயின்றார். [3] சின்சியாங் நார்மல் பல்கலைக்கழகத்தில் உய்குர் மொழியிலும் இலக்கியத்திலும் இளங்கலைப் பட்டம் பெற்றார். [1]
சீன அரசு ஊடகம்[தொகு]
கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு, சீனாவில் முதல் உய்குர் மொழி குழந்தைகள் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளராக ஆனார். இவரது பாத்திரத்தின் விளைவாக சின்சியாங் முழுவதும் நன்கு அறியப்பட்டார். [7] சின்சியாங் தொலைக்காட்சி [8] [9] மற்றும் சீனா மத்திய தொலைக்காட்சி . [3] போன்ற சீன அரசு ஊடகங்களில் பணிபுரிந்தார். [10]
சீனாவை விட்டு வெளியேறுதல்[தொகு]
முதலில் சீன அரசு ஊடகங்களுடனான தனது பணியிலும் அரசு உய்குர் மக்களை நடத்துவதில் சங்கடத்தை உணர்ந்தார். உய்குர் குழந்தைகளை அவர்களின் வீடு மற்றும் கிராமங்களில் இருந்து "பிரதான" சீனாவில் வளர்க்க அழைத்துச் செல்லப்பட்டதைப் பற்றிச் சென்று அறிக்கை செய்தார்.[11]
2001 இல், ஆஸ்திரியாவில் விடுமுறையில் இருந்தபோது, முதன்முறையாக இணையத்தை அணுகி, சீனாவிற்கு வெளியே உய்குர் ஆர்வலர்களின் செயல்பாடுகளைப் பற்றி அறிந்து கொண்டார். [7] ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் இருந்தபோது, சீன அரசு ஊடகத்திற்கான தனது பணிக்காக வெட்கப்பட்ட சீனாவுக்குத் திரும்ப வேண்டாம் என்று முடிவு செய்தார். [7] [3] அந்த ஆண்டு அக்டோபரில், அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து ரேடியோ ஃப்ரீ ஏசியாவில் பணியாற்றத் தொடங்கினார். அதில் சீன அரசாங்கத்தால் உய்குர் மக்கள் மீதான அடக்குமுறையைப் பற்றி அறிக்கை செய்தார். [3]


2017 ஆம் ஆண்டில், ஹோஜா சீன அரசாங்கத்தால் பயங்கரவாதி என்று குற்றம் சாட்டப்பட்டு தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டார். இவரது அறிக்கையின் காரணமாக இவரது சகோதரரும் இந்த நேரத்தில் கைது செய்யப்பட்டு சின்சியாங் தடுப்பு முகாம் ஒன்றில் வைக்கப்பட்டார். [11]
ஜனவரி 28, 2018 அன்று, அவர் சின்சியாங்கில் உள்ள தனது பெற்றோரைப் பார்க்கச் சென்றபோது "பயங்கரவாத நடவடிக்கைகள்" என்று கைது செய்யப்பட்ட ஓமுர்பெக் எலியின் நேர்காணலை வெளியிட்டார். எலி சின்சியாங் தடுப்பு முகாம் ஒன்றில் வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். [12] மூன்று நாட்களுக்குப் பிறகு ஜனவரி 31 அன்று, ஹோஜாவின் குடும்பத்தைச் சேர்ந்த இருபத்தைந்து உறுப்பினர்கள் சின்சியாங்கில் உள்ள உள்ளூர் காவல் நிலையங்களுக்கு வரவழைக்கப்பட்டு அவர்களும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர். [11]
ஏப்ரல் 2021 இல், இவரது தாய் மற்றும் சகோதரரின் காணொள்கள் வெளியிடப்பட்டன. அதில் அவர்கள் சாதாரண வாழ்க்கையை நடத்துவதாகக் கூறி, இவரது அறிக்கையை விமர்சித்தனர். [13]
மார்ச் 27, 2019 அன்று, சின்சியாங் தடுப்பு முகாம்களில் உள்ள குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட நபர்களின் பிரதிநிதியாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக்கேல் பாம்பியோவை ஹோஜா சந்தித்தார். [14] [15]
பாராட்டுக்கள்[தொகு]
நவம்பர் 2019 இல், சின்சியாங்கில் நடந்து வரும் மனித உரிமைகள் நெருக்கடி குறித்து அறிக்கை செய்ததற்காக ஹோஜா மேக்னிட்ஸ்கி மனித உரிமைகள் விருதைப் பெற்றார். [4] 2020 ஆம் ஆண்டில், மிகவும் செல்வாக்கு மிக்க 500 முஸ்லிம்களில் ஹோஜா பட்டியலிடப்பட்டார். [6]
2020 இல், ஹோஜா சர்வதேச மகளிர் ஊடக அறக்கட்டளையின் தைரியமான பத்திரிகையாளருக்கான விருதைப் பெற்றார். [5]
சொந்த வாழ்க்கை[தொகு]
ஹோஜா தனது கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் வர்ஜீனியாவின் உட்பிரிட்ஜில் வசித்து வருகிறார். [1]
சான்றுகள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 "Gulchehra A. Hoja Biography". https://docs.house.gov/meetings/FA/FA16/20190516/109482/HHRG-116-FA16-Bio-HojaG-20190516.pdf. பார்த்த நாள்: 2019-12-11.
- ↑ Srinivas Mazumdaru (March 5, 2018). "Uighur journalist Gulchehra Hoja: 'I have my own sad story to tell'" இம் மூலத்தில் இருந்து June 14, 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200614154623/https://www.dw.com/en/uighur-journalist-gulchehra-hoja-i-have-my-own-sad-story-to-tell/a-42835267. பார்த்த நாள்: October 13, 2020.
- ↑ 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 3.10 Nordlinger, Jay (May 4, 2021). "A Uyghur Daughter, and Journalist". National Review. https://www.nationalreview.com/2021/05/a-uyghur-daughter-and-journalist/.
- ↑ 4.0 4.1 "Radio Free Asia Uyghur journalist wins Magnitsky Human Rights Award". United States Agency for Global Media. November 15, 2019. https://www.usagm.gov/2019/11/15/radio-free-asia-uyghur-journalist-wins-magnitsky-human-rights-award/. பார்த்த நாள்: 2019-12-11.
- ↑ 5.0 5.1 "Gulchehra Hoja" இம் மூலத்தில் இருந்து August 6, 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200806065542/https://www.iwmf.org/community/gulchehra-hoja/. பார்த்த நாள்: October 13, 2020.
- ↑ 6.0 6.1 "Gulchehra Hoja" இம் மூலத்தில் இருந்து October 13, 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201013114312/https://www.themuslim500.com/profiles/gulchehra-hoja/. பார்த்த நாள்: October 13, 2020.
- ↑ 7.0 7.1 7.2 7.3 7.4 7.5 Greenberg, Ilan (June 23, 2021). "How China threatens prominent Uyghurs — in the US, in China and everywhere". Coda Story. https://www.codastory.com/disinformation/uyghur-journalist-retaliation/.
- ↑ "HANKEZI ZIKELI AUNT OF US-BASED UYGHUR JOURNALIST GULCHEHRA HOJA – CHINA AT RISK OF TORTURE". https://www.amnestyusa.org/hankezi-zikeli-aunt-of-us-based-uyghur-journalist-gulchehra-hoja-china-at-risk-of-torture/. "Gulchehra Hoja’s aunt, Hankezi Zikeli, is detained in a “transformation-through-education” centrer in Urumqi, Xinjiang, and is believed to have suffered a nervous breakdown. She is one of 25 relatives of Gulchehra Hoja who have been detained since January 2018."
- ↑ Andrew McCormick (March 1, 2019). "What It's Like to Report on Rights Abuses Against Your Own Family". https://www.theatlantic.com/international/archive/2019/03/radio-free-asia-uighur-service/583687/.
- ↑ "Gulchehra A. Hoja Biography". https://docs.house.gov/meetings/FA/FA16/20190516/109482/HHRG-116-FA16-Bio-HojaG-20190516.pdf.
- ↑ 11.0 11.1 11.2 Nordlinger, Jay (May 17, 2021). "'Be a Human': A Uyghur-American journalist, working for Radio Free Asia". National Review. https://www.nationalreview.com/magazine/2021/05/17/be-a-human/.
- ↑ Hoja, Gulchehra (January 30, 2018). "Interview: 'I Lost All Hope of Surviving'". https://www.rfa.org/english/news/uyghur/kazakh-01302018161655.html.
- ↑ "新疆维吾尔自治区在京第7场涉疆问题新闻发布会实录 视频震撼". https://zj.zjol.com.cn/news.html?id=1647631&from_channel=52e5f902cf81d754a434fb50&from_id=1647632.
- ↑ 罗伯特·帕拉迪诺 (March 28, 2019). "国务卿蓬佩奥与维吾尔族穆斯林的会见". U.S. Embassy & Consulates in China 美国驻中国大使馆及领事馆 இம் மூலத்தில் இருந்து 2019-07-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190713183713/https://china.usembassy-china.org.cn/zh/secretary-pompeos-meeting-with-uighur-muslims-impacted-by-human-rights-crisis-in-xinjiang/. பார்த்த நாள்: 2019-12-11.
- ↑ Fred Hiatt (December 1, 2019). "These journalists have confounded China's massive propaganda machine". https://www.washingtonpost.com/opinions/global-opinions/china-is-harassing-journalists-reporting-on-uighurs-they-cannot-be-stifled/2019/12/01/18ada52c-1148-11ea-b0fc-62cc38411ebb_story.html. பார்த்த நாள்: October 13, 2020.
வெளி இணைப்புகள்[தொகு]
- Gulchehra Hoja on Twitter
- Inside China’s Re-education Camps (interview with Foreign Policy, 2018)
- Gulchehra Hoja: "They’re destroying all my memory" (Women in the World, 2019)
- China’s Uighurs, With Gulchehra Hoja (interview with Council on Foreign Relations, 2020)