குல்சன்-இ-இக்பால் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குல்சன்-இ-இக்பால் பூங்கா, லாகூர்

குல்சன்-இ-இக்பால் பூங்கா (Gulshan-e-Iqbal Park, உருது: گلشن-اقبال پارک) பாக்கித்தானின் இலாகூரில் அமைந்துள்ள பூங்காவும் மனமகிழ் மையமுமாகும். 67 ஏக்கர்கள் (270,000 m2)க்கும் கூடுதலான பரப்பில் அமைந்துள்ள இந்தப் பூங்கா நகரின் பெரிய பூங்காக்களில் ஒன்றாகும். இது புறநகர் பகுதியான அல்லாமா இக்பால் டவுனில் உள்ளது. குல்சன்-இ-இக்பால் என்பதற்கான பொருள் "இக்பாலின் பூங்கா" எனவாகும்; பாக்கித்தானின் தேசியக் கவி இக்பாலின் நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இப்பூங்காவில் சிறுவர் விளையாடி மகிழும் வண்ணம் பல ஊஞ்சல்களும் விளையாட்டுந்துகளும் அமைக்கப்பட்டுள்ளன; செயற்கை ஏரி ஒன்றும் சிறிய விலங்கியல் பூங்காவும் உள்ளன. இதனால் குடும்பச் சுற்றுலாவிற்கு ஏற்றவிடமாக இது உள்ளது. விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் பொழுதுபோக்க இலாகூர் மக்கள் கூடுமிடமாக விளங்குகின்றது.

இந்தப் பூங்காவை பராமரிக்கும் உள்ளாட்ச மன்றம் அண்மையில் விளையாட்டுப் பகுதியை புதுப்பித்தும் மேலும் விளையாட்டுச் சாதனங்களை பொருத்தியும் மேம்படுத்தியுள்ளது.

நிகழ்வுகள்[தொகு]

மார்ச் 27, 2016 அன்று குல்சன்-இ=பூங்காவின் வாயிலுக்குச் சற்றே வெளியேயும் சிறுவர்களின் ஊஞ்சல்கள் உள்ள பகுதிக்கு சில அடிகளே வெளியேயும் தானுந்து நிறுத்தப் பகுதியில் தற்கொலைப்படையாளி குண்டு வெடித்ததில் 69 பேர் உயிரிழந்தனர்; 300க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.[1]. ஜமாத்-உல்-அரார் என்ற தலிபான் குழு இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. [2]

மேற்சான்றுகள்[தொகு]