குலைப்புவகைப் புத்தாக்கம்
புத்தாக்க வகைகள்[1] |
---|
|
வணிகக் கோட்பாட்டின்படி, குலைப்புவழிப் புத்தாக்கம் (disruptive innovation) என்பது பழைய சந்தையையும் விழுமிய வலையையும் குலைத்துவிட்டு புதிய சந்தையையும் புதிய விழுமிய வலையையும் உருவாக்கும் புத்தாக்கம் ஆகும். இது நிலவும் நிலையான சந்தை நடாத்தும் நிறுமங்களையும் சந்தைப்பொருள்களையும் நிலவும் பல்வேறு கூட்டுறவுகளையும் பதிலீடு செய்துவிடுகிறது.[2]> இந்தச் சொல் முதலில் அமெரிக்க அறிஞராகிய கிளேட்டன் எம். கிறித்தென்சென்னாலும் அவரது கூட்டிணைவாளர்களாலும் 1995 ஆண்டு தொடக்கத்தில் வரையறுக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டது.[3] இது 21 ஆம் நூற்றாண்டின் தோற்றக் காலத்தில் வணிகத் தாக்கம் மிகுந்த எண்ணக்கருவாகியது.[4]
புரட்சிகரமாக இருந்தாலும் கூட, அனைத்துப் புத்தாக்கங்களும் குலைப்புவகையின அல்ல. எடுத்துகாட்டாக, 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய முதல் தானூர்திகள் குலைப்புவகைப் புத்தாக்கமன்று; ஏனெனில், தொடக்க காலத் தானூர்திகள் செலவு மிகுந்தன மட்டுமல்ல ஆடம்பரமானவை. எனவே அவை நிலவிய சந்தையைக் குலைக்கவில்லை; குதிரை பூட்டிய வண்டிகளுக்கு மாற்றாகவும் அமையவில்லை. போக்குவரத்துச் சந்தை, 1908 இல் மலிவு விலை டிவகைப் போர்டு சீருந்து உருவாகும் வரை நிலைகுலையாமலே இருந்தது.[5] இந்தத் பெருந்திரளாக வெளியிடப்பட்ட தானூர்திகள் குலைவுவகைப் புத்தாக்கமாக அமைந்தது. இது போக்குவரத்துச் சந்தையை முற்ரிலும் உருமாற்றிவிட்டது ஆனால், முந்திய முப்பது ஆண்டு தானூர்தி சந்தையைச் சற்றும் மாற்றவில்லை.
குலைப்புவகைப் புத்தாக்கம் வழக்கமாக புதிய தொழில்முனைவோராலும் வெளி ஆய்வாளராலும் உருவாக்கப்படுகிறதே தவிர இதில் சந்தைத் தலைமைகள் ஈடுபடுவதில்லை. சந்தை தலைமைகளின் வணிகச் சூழல் குலைப்புவகைப் புத்தாக்கங்கள் அவை சந்தைக்குள் முதலில் வரும்போதே அவற்றை நுழைய விடுவதில்லை. ஏனெனில் அவை போதுமான ஈட்டத்தைத் (இலாபத்தைத்) தருவதில்லை. மேலும் அவற்றின் வளர்ச்சி அரிதாக கிடைக்கும் நிதிவளங்களை நீடுதிறவகைப் புத்தாக்கத்தில் இருந்து வெளியேற்றிவிடும் இந்நிதிவளங்கள் நடப்புப் போட்டிக்கு ஈடுகொடுக்க தேவைப்படுகின்றன.[6] வழக்கமான அணுகுமுறையில் குலைப்புவகைப் புத்தாக்கம் வளர நெடுங்காலம் எடுத்துக் கொள்ளும். இதனுடன் அமையும் இடர் மற்ற படிப்படியாக படிமலர்ச்சி முறையில் அமையும் புத்தக்கங்களை விட கூடுதலானது; ஆனால், ஒருமுறை இது சந்தைக்குள் புகுந்துவிட்டால் இது மிக வேகமாக ஊடுருவி நிலவும் சந்தைகளின்பால் பெருந்தாக்கத்தை விளைவிக்கும்.[7]
வணிகம், பொருளியல் தவிர, குலைப்புவகைப் புத்தாக்கம் வணிகமும் பொருளியலும் இணைந்து செயல்படும் சிக்கலான அமைப்புகளையும் குலைக்கிறது.[8]
சொல்தொடரின் வரலாறும் பயன்பாடும்
[தொகு]குலைப்புவகைப் புத்தாக்கம் எனும் சொல்தொடரைக் கிளேட்டன் எம், கிறித்தென்சென் உருவாக்கி 1995 இல் குலைப்புவகைத் தொழில்நுட்பங்கள்: அலையைப் பின்தொடர்ந்து எனும் தன் கட்டுரையில் அறிமுகப்படுத்தினார்.[9]ஐக்கட்டுரையை இவர் யோசாப்பு போவருடன் இணைந்தெழுதினார். இக்கட்டுரை தங்கள் குழுமத்தில் நிதி ஒதுக்கும் ஆல்லது கொள்வினைகளில் முடிவெடுக்கும் மேலாண்மை செயலாளர்களுக்கானதாகும், ஆய்வாளர்களுக்காகவல்ல. இவர் இச்சொல் தொடரை புத்தாக்கியின் இணைமுரண் எனும் தன் நூலில் மேலும் விவரிக்கிறார்.[10] புத்தாக்கியின் இணைமுரண் எனும் கட்டுரை வட்டு இயக்கும் தொழில்துறையின் வகைகளை ஆய்வு செய்தது ( வணிக ஆய்வில் இதன் வேகமான தலைமுறைகளின் மாற்றம் என்பது மரபியல் ஆய்வில் பழ ஈக்களின் ஆய்வை ஒத்தது. இவ்வாறுதான் கிறித்தென்சென் 1990 களில் அறிவுறுத்தப்பட்டுள்ளார்[11]) இது மேலும் அகழாய்வுக் கருவித் தொழில்துறையை ஒத்ததும் ஆகும்( இத்துறையில் நீரியக்கச் செயல்பாடு பிறகு மின்வட இயக்கச் செயல்பாட்டல் பதிலீடு செய்யப்பட்டது). இவர் அடுத்து மைக்கெல் ஈ. இரேனாருடன் தொடர்ந்தெழுதிய, புத்தாக்கியின் தீர்வு,[12]எனும் கட்டுரையில் குலைப்புவகைத் தொழில்நுட்பம் என்ற சொல் தொடரை குலைப்புவகைப் புத்தாக்கம் என மாற்றிக்கொண்டார்.
குலைப்புவகைப் புத்தாக்கம் என்றால் என்ன?
[தொகு]- குலைவு என்பது செயல்முறையே தவிர விளைபொருளோ சேவையோ அன்று.
- இது கோரிக்கை ஏதும் வைக்காத வாடிக்கையாளர் எனும் அடிநிலையில் அல்லது புதிய சந்தை கால்கொள்ளும் இடத்தில் உருவாகிறது.
- புதிய நிறுமங்கள் தம் செந்தரத்துக்கு இணையாக தரம் உயரும் வரை முதன்மையோட்ட வாடிக்கையாளரை அணுகுவதில்லை.
- இங்கு வெற்றி முதல் இலக்கன்று; சில வணிகப் படிமம் குலைப்புவகையாக இருந்தாலும் தோல்வி காண்பதுண்டு.
- நிலவும் நிறுமத்தின் வணிக முறைமையில் அல்லது படிமத்தில் இருந்து புதிய நிறுமத்தின் வணிகப் படிமம் கணிசமாக வேறுபட்டமைகிறது.[13]
சாத்தியமான வாய்ப்புகள்
[தொகு]பின்வரும் பெருநிலை வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வாளர்களும் அறிவுரைஞர்களும் கணித்துள்ளனர்.
எண்னக்கரு | மதிப்பு | வரைவெல்லை |
---|---|---|
இலக்கவியல் உருமாற்றம் | $100 டிரில்லியன் | உலகவகை[14] |
சிறுகோள் சுரங்கம் | $100 டிரில்லியன் | உலகவகை[15] |
திறந்த நாட்டெல்லைகள் | $78 டிரில்லியன் | உலகவகை[16] |
குலைவுவகைத் தொழில்நுட்பங்கள் | $14- $33 டிரில்லியன் | உலகவகை[17][18] |
மின்வணிகம்[19] | $22 டிரில்லியன் | வளரும் நாடுகள் |
செல்வ மேலாண்மை | $22 டிரில்லியன் | உலகவகை[20] |
திறன்நகரத் தொழில் | $20 டிரில்லியன் | உலகவகை[21] |
செயற்கை அறிதிறன் | $15.7 டிரில்லியன் | உலகவகை[22] |
காலநிலை மாற்றச் சீராக்கம் | $7 டிரில்லியன் | உலகவகை[23] |
பெண் சமமை மேம்பாடு | $12 டிரில்லியன் | உலகவகை[24][25] |
கட்டற்ற வணிகம் | $11 டிரில்லியன் | உலகவகை[26] |
செழற்சிப் பொருளியல் | $4.5 டிரில்லியன் | உலகவகை[27] |
பாலினச் சம்பள இடைவெளி நீக்கல் | $2 டிரில்லியன் | OECD[28] |
நீள்பணி வாழ்க்கை | $2 டிரில்லியன் | OECD[29] |
இளம்பணியாளர் திறனாக்கம் | $1.2 டிரில்லியன் | OECD[30] |
சீருந்து பகிர்தல் | $1 டிரில்லியன் | உலகவகை[31] |
அச்சுறுத்தல் வாய்ப்புகள்
[தொகு]அச்சுறுத்தல் | இடர்நிலை | வரைவெல்லை |
---|---|---|
மருந்த் எதிர்ப்பு தொற்றுகள் | $100 டிரில்லியன் | உலகவகை[32] |
போக்குவரத்து நெரிசல் | $2.8 டிரில்லியன் | ஐக்கிய அமெரிக்கா[33] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Christensen 1997, ப. xviii. Christensen describes as "revolutionary" innovations as "discontinuous" "sustaining innovations".
- ↑ Ab Rahman, Airini (2017). "Emerging Technologies with Disruptive Effects: A Review". PERINTIS eJournal 7 (2). https://www.researchgate.net/publication/321906585. பார்த்த நாள்: 21 December 2017.
- ↑ Bower, Joseph L. & Christensen, Clayton M. (1995)
- ↑ Bagehot (15 June 2017). "Jeremy Corbyn, Entrepreneur". The Economist: p. 53. https://www.economist.com/news/britain/21723426-labours-leader-has-disrupted-business-politics-jeremy-corbyn-entrepreneur. "The most influential business idea of recent years is Clayton Christensen’s theory of disruptive innovation."
- ↑ Christensen 2003, ப. 49.
- ↑ Christensen 1997, ப. 47.
- ↑ Assink, Marnix (2006). "Inhibitors of disruptive innovation capability: a conceptual model". European Journal of Innovation Management 9 (2): 215–233. doi:10.1108/14601060610663587.
- ↑ Durantin, Arnaud; Fanmuy, Gauthier; Miet, Ségolène; Pegon, Valérie (1 January 2017). Disruptive Innovation in Complex Systems (in ஆங்கிலம்). pp. 41–56. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-3-319-49103-5_4. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-319-49102-8.
{{cite book}}
:|journal=
ignored (help) - ↑ Bower, Joseph L. & Christensen, Clayton M. (1995). என்றாலும், ஒட்டுமொத்தப் பொருளியல் மாற்றத்தை உருவாக்கும் புதிய தொழில்நுட்பங்கள் பற்றிய எண்ணக்கரு ஒன்றும் புதியதன்று. ஏற்கெனவே, கார்ல் மார்க்சின் ஆக்கநிலைக் குலைப்பு எனும் எண்னக்கருவை யோசாப்பு சுசும்பீட்டர் தகவமைத்துப் பயன்படுத்தியுள்ளார். சுசும்பீட்டர் (1949) தனது எடுத்துகாட்டுகளில் ஒன்றில் பயன்கொண்டுள்ளார். "நடுவண் இல்லினாயிசால் தொடங்கபட்டநடுவண் கிழக்குப் பகுதி தண்டவாளத் தொடர் அமைப்பு" என்பது பற்றி அவர் எழுதுகிறார், " நடுவண் இல்லினாயிசு தண்டவாளத் தொடரமைப்பு வணிகத்தை மட்டுமே பெருக்கவில்லை; பல புதிய நகரங்கள் கட்டி எழுப்பப்பட்டன; பல நிலப்பகுதிகள் பண்படுத்தப்பட்டன; ஆனால், இந்தப் புத்தாக்கம் பழைய மேற்கத்திய வேளாண்மைக்குச் சாவுமணி அடித்தது."குலைப்புவகைப் புத்தாக்கம்: அலையைப் பின்தொடர்ந்து" ஆர்வர்டு வணிக மீள்பார்வை, ஜனவரி–பிப்ரவரி 1995
- ↑ Christensen 1997.
- ↑ Christensen 1997, ப. 3.
- ↑ Christensen 2003.
- ↑ Christensen, Clayton M.; Raynor, Michael E.; McDonald, Rory (2015-12-01). "What Is Disruptive Innovation?". Harvard Business Review (December 2015). https://hbr.org/2015/12/what-is-disruptive-innovation.
- ↑ "$100 Trillion by 2025: the Digital Dividend for Society and Business". World Economic Forum. பார்க்கப்பட்ட நாள் 2018-03-24.
- ↑ "The Biggest Opportunity of our Generation: Asteroid Mining could be a $100 Trillion Industry" (in en-US). Futurism. https://futurism.com/videos/the-biggest-opportunity-of-our-generation-asteroid-mining-could-be-a-100-trillion-industry/.
- ↑ "A world of free movement would be $78 trillion richer" (in en). The Economist. 2017-07-13. https://www.economist.com/news/world-if/21724907-yes-it-would-be-disruptive-potential-gains-are-so-vast-objectors-could-be-bribed. பார்த்த நாள்: 2018-02-21.
- ↑ "Disruptive technologies: Advances that will transform life, business, and the global economy". McKinsey & Company (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-03-11.
- ↑ "These 7 Disruptive Technologies Could Be Worth Trillions of Dollars" (in en-US). Singularity Hub. 2017-06-16. https://singularityhub.com/2017/06/16/the-disruptive-technologies-about-to-unleash-trillion-dollar-markets/#sm.0000sk8b5bnnudtrst31wwyc0k53e.
- ↑ "unctad.org | $22 trillion e-commerce opportunity for developing countries". unctad.org (in ஐரோப்பிய ஸ்பானிஷ்). Archived from the original on 2018-03-11. பார்க்கப்பட்ட நாள் 2018-03-11.
- ↑ "The firms that trade stocks for mom and pop have a $22 trillion opportunity". Business Insider. http://www.businessinsider.com/morgan-stanley-22-trillion-opportunity-in-wealth-management-2016-9.
- ↑ Inc., InterDigital. "Smart City Tech to Drive Over 5% Incremental GDP, Trillions in Economic Growth Over the Next Decade Reports ABI Research" (in en-US). GlobeNewswire News Room. https://globenewswire.com/news-release/2018/01/24/1304242/0/en/Smart-City-Tech-to-Drive-Over-5-Incremental-GDP-Trillions-in-Economic-Growth-Over-the-Next-Decade-Reports-ABI-Research.html.
- ↑ Nelson, Eshe. "AI will boost global GDP by nearly $16 trillion by 2030—with much of the gains in China" (in en-US). Quartz. https://qz.com/1015698/pwc-ai-could-increase-global-gdp-by-15-7-trillion-by-2030-with-much-of-the-gains-in-china/.
- ↑ Whiting, Alex (2018-01-26). "At Davos, bosses paint climate change as $7 trillion opportunity" (in en-US). The Sydney Morning Herald. http://www.smh.com.au/business/at-davos-bosses-paint-climate-change-as-7-trillion-opportunity-20180126-h0owt1.html.
- ↑ "How advancing women's equality can add $12 trillion to global growth". McKinsey & Company (in ஆங்கிலம்). Archived from the original on 2018-03-11. பார்க்கப்பட்ட நாள் 2018-03-11.
- ↑ McGrath, Maggie. "The $12 Trillion Opportunity Ripe For Investing Dollars: Advancing Gender Equality" (in en). Forbes. https://www.forbes.com/sites/maggiemcgrath/2017/01/24/the-12-trillion-opportunity-ripe-for-investing-dollars-advancing-gender-equality/#1b22e4946d9a.
- ↑ Lomborg, Bjørn (2018-03-15). "A Trade War On the World's Poorest by Bjørn Lomborg" (in en). Project Syndicate. https://www.project-syndicate.org/commentary/trade-war-hurts-world-poor-by-bjorn-lomborg-2018-03.
- ↑ "Waste to Wealth: Creating advantage in a circular economy" (in en-gb) இம் மூலத்தில் இருந்து 2018-02-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180222044139/https://www.accenture.com/gb-en/insight-creating-advantage-circular-economy.
- ↑ PricewaterhouseCoopers. "Women in Work Index" (in en). PwC. https://www.pwc.co.uk/services/economics-policy/insights/women-in-work-index.html.
- ↑ PricewaterhouseCoopers. "Golden Age Index" (in en). PwC. https://www.pwc.co.uk/services/economics-policy/insights/golden-age-index.html.
- ↑ PricewaterhouseCoopers. "Young Workers Index 2017" (in en). PwC இம் மூலத்தில் இருந்து 2018-02-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180222044332/https://www.pwc.co.uk/youngworkers.
- ↑ "Lyft thinks we can end traffic congestion and save $1 trillion by selling our second cars". The Verge. https://www.theverge.com/2018/1/10/16870732/lyft-traffic-congestion-car-ownership-ces-2018.
- ↑ Sanofi. "Evotec and Sanofi in exclusive talks to create an Evotec-led Infectious Disease open innovation R&D platform" (in en-US). GlobeNewswire News Room. https://globenewswire.com/news-release/2018/03/08/1418077/0/en/Evotec-and-Sanofi-in-exclusive-talks-to-create-an-Evotec-led-Infectious-Disease-open-innovation-R-D-platform.html.
- ↑ INRIX. "AMERICANS WILL WASTE $2.8 TRILLION ON TRAFFIC BY 2030 IF GRIDLOCK PERSISTS | INRIX". INRIX - INRIX (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-03-28.
வெளி இணைப்புகள்
[தொகு]- Peer-reviewed chapter on Disruptive Innovation by Clayton Christensen with public commentaries by notable designers like Donald Norman
- The Myth of Disruptive Technologies பரணிடப்பட்டது 2009-05-01 at the வந்தவழி இயந்திரம். Note that Dvorák's definition of disruptive technology describes the low cost disruption model, above. He reveals the overuse of the term and shows how many disruptive technologies are not truly disruptive.
- "The Disruptive Potential of Game Technologies: Lessons Learned from its Impact on the Military Simulation Industry", by Roger Smith in Research Technology Management (September/October 2006)
- Disruptive Innovation Theory
- Bibliography of Christensen’s "Theory of Disruptive Innovation" as it relates to higher education
- What does Disruption mean?
- Diffusion of Innovations, Strategy and Innovations The D.S.I Framework by Francisco Rodrigues Gomes, Academia.edu share research
- CREATING THE FUTURE: Building Tomorrow’s World
- Lecture (video), VoIP as an example of disruptive technology