குலு பள்ளத்தாக்கு

ஆள்கூறுகள்: 31°57′28″N 77°6′34″E / 31.95778°N 77.10944°E / 31.95778; 77.10944
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குலு பள்ளத்தாக்கு
குல்லு பள்ளத்தாக்கு
குலு பள்ளத்தாக்கு
Locationஇந்தியாவின் இமாச்சலப் பிரதேசம்
Geological typeபள்ளத்தாக்கு
ஆள்கூறுகள்31°57′28″N 77°6′34″E / 31.95778°N 77.10944°E / 31.95778; 77.10944
Population Centersகுலு

குலு பள்ளத்தாக்கு (Kullu Valley) என்பது இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு பரந்த திறந்த பள்ளத்தாக்காகும். இது மணாலி மற்றும் லார்கி இடையே பியாஸ் ஆற்றால் உருவாக்கப்பட்டுள்ளது.[1] இந்த பள்ளத்தாக்கு அதன் கோவில்கள், அழகு மற்றும் பைன், தேவதாரு காடுகள், பரந்த ஆப்பிள் தோட்டங்களால் மூடப்பட்டிருக்கும் அதன் கம்பீரமான மலைகளுக்கு பிரபலமானது. பியாஸ் ஆற்றின் போக்கானது, கீழ்ப்பாறை முகடுகளில் பைன் மரங்களுக்கு மேல் உயர்ந்து, தேவதாரு காடுகளால் அலங்கரிக்கப்பட்ட அற்புதமான வரிசையை வழங்குகிறது. குலு பள்ளத்தாக்கு பிர் பாஞ்சல், கீழ் இமயமலை , பெரிய இமயமலைத் தொடர்களுக்கு இடையில் அமைந்துள்ளது. [2] பனிச்சறுக்கு சுற்றுலா என்பது பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள இமாலயச் சிகரங்களில் பிரபலமடைந்து வரும் ஒரு விளையாட்டாகும். [3]

குலு அல்லது குல்லு, இந்திய மாநிலமான இமாச்சல பிரதேசத்தில் உள்ள குல்லு மாவட்டத்தின் தலைநகரம் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இந்த பள்ளத்தாக்கு 75 கிலோமீட்டர் நீளமும், 2 முதல் 4 கிமீ அகலமும் கொண்டது. மேலும், புகழ்பெற்ற ரோதங் கணவாய்க்கு அருகில் முடிகிறது. நக்கர் கோட்டை, ரோரிச் கலைக்கூடம், இடும்பன் கோயில் ஆகியவையும் பள்ளத்தாக்கின் முக்கிய ஈர்ப்பாகும்.

புகைப்படங்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. CIL. "Exhibition - Malana - A Lost Utopia in the Himalayas". ignca.nic.in. Archived from the original on 3 March 2016. பார்க்கப்பட்ட நாள் 2017-09-20.
  2. PRADESH, HIMACHAL. "Mythological references and evidances - Kullu District Official Website, Himachal Pradesh". himachal.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2017-09-20.
  3. Ski Touring India's Kullu Valley. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குலு_பள்ளத்தாக்கு&oldid=3774218" இலிருந்து மீள்விக்கப்பட்டது