குலு குலு
தோற்றம்
| குலு குலு | |
|---|---|
| இயக்கம் | ரத்ன குமார் |
| தயாரிப்பு | எஸ் ராஜ் நாராயணன் |
| கதை | ரத்ன குமார் |
| திரைக்கதை | ரத்ன குமார் |
| இசை | சந்தோஷ் நாராயணன் |
| நடிப்பு | சந்தானம் அதுல்யா சந்திரா |
| பாடலாசிரியர் | விவேக் ரத்ன குமார் |
| ஒளிப்பதிவு | விஜய் கார்த்திக் கண்ணன் |
| படத்தொகுப்பு | பிலோமின் ராஜ் |
| கலையகம் | சர்க்கிள் பாக்ஸ் எண்டர்டெயின்மென்ட் |
| வெளியீடு | 29 ஜூலை 2022 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
குலு குலு (Gulu Gulu) என்பது 2022-இல் எஸ் ராஜ் நாராயணன் தயாரிப்பில் இயக்குநர் ரத்ன குமார் எழுதி இயக்கிய இந்தியத் தமிழ் மொழி நகைச்சுவைத் திரைப்படமாகும்.[1] இப்படத்தில் சந்தானம் மற்றும் அதுல்யா சந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லொள்ளு சபா மாறன், லொள்ளு சபா சேசு, டி எஸ் ஆர் ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேயாத மான், ஆடை போன்ற திரைப்படங்களை இயக்கிய ரத்ன குமார் இத்திரைப்படத்தினையும் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.[2]
நடிகர்கள்
[தொகு]- சந்தானம்
- அதுல்யா சந்திரா
- நமீதா கிருஷ்ணமூர்த்தி
- லொள்ளு சபா மாறன்[3]
- பிரதீப் ராவத்
- மரியம் ஜார்ஜ்
- சாய் தீனா
- லொள்ளு சபா சேசு[4]
- டி எஸ் ஆர்
- மகாநதி சங்கர்
- பிபின்
- கவி
- ஹரிஷ்
- யுவராஜ்
- மௌரி தாஸ்
இசை
[தொகு]பாடல் வரிகளை எழுதியவர்கள் ரத்ன குமார், விவேக் மற்றும் அசல் கோளாறு.[5]
| பாட்டு பட்டியல் | ||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| # | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
| 1. | "மாட்னா காலி" | சந்தோஷ் நாராயணன் | 3:19 | |||||||
| 2. | "அன்பரே" | தீ | 3:46 | |||||||
| 3. | "இன்னர் பீஸ்" | சந்தோஷ் நாராயணன் | ||||||||
தயாரிப்பு
[தொகு]சர்க்கிள் பாக்ஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் எஸ் ராஜ் நாராயணன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.[6]
திரைப்பட வெளியீடு
[தொகு]இப்படம் 29 ஜூலை 2022-ல் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Director Rathnakumar's film with Santhanam titled 'Gulu Gulu'". MSN (in Indian English). Retrieved 2022-06-23.
- ↑ Rawat, Archana (2022-04-20). "Gulugulu Tamil Movie Release Date, Star Cast, Trailer, OTT, Plot & More". JanBharat Times (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-06-23.
- ↑ "Santhanam's upcoming film 'Gulu Gulu' enters post-production and gears up for release! - Tamil News". IndiaGlitz.com. 2022-03-23. Retrieved 2022-06-23.
- ↑ "Santhanam begins dubbing for Rathna Kumar's Gulu Gulu - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2022-06-23.
- ↑ "First look of Santhanam's Gulu Gulu - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2022-06-23.
- ↑ Gulu Gulu - Official Motion Poster | Santhanam | Santosh Narayanan | Rathna Kumar, retrieved 2022-06-23