குலுங்குங் பிராந்தியம்
குலுங்குங் பிராந்தியம்
Klungkung Regency Kabupaten Klungkung ᬓᬩᬸᬧᬢᬾᬦ᭄ᬓ᭄ᬮᬸᬂᬓᬸᬂ | |
---|---|
![]() குலுங்குங் அரண்மனை கீர்த்த கோசம் | |
குறிக்கோளுரை: தர்மனிங்க சத்திரிய மகோத்தம (Dharmaning Ksatriya Mahottama) | |
![]() பாலியில் குலுங்குங் பிராந்தியம் | |
ஆள்கூறுகள்: 8°32′20.12″S 115°24′16.24″E / 8.5389222°S 115.4045111°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
தலைநகரம் | செமராபுரா |
அரசு | |
• வகை | முடியாட்சி பிரதிநிதி |
• அரசர் | தேவாசொக்கர்தா சீமரபுத்ரா Dewa Agung Cokorda Géde Agung Sémaraputra |
• பிரதிநிதி | அய் நியோமான் சுவிர்த்தா I Nyoman Suwirta |
பரப்பளவு | |
• மொத்தம் | 315.00 km2 (121.62 sq mi) |
மக்கள்தொகை (2020)[1] | |
• மொத்தம் | 2,06,925 |
• அடர்த்தி | 660/km2 (1,700/sq mi) |
நேர வலயம் | இந்தோனேசிய நேரம் +8 |
தொலைபேசி | (+62) 366 |
இணையதளம் | klungkungkab.go.id |
குலுங்குங் பிராந்தியம் (ஆங்கிலம்: Klungkung Regency; இந்தோனேசியம்: Kabupaten Klungkung) என்பது இந்தோனேசியா, பாலி தீவில் ஒரு பிராந்தியம் ஆகும். பாலியில் இந்தப் பிராந்தியமே மிகச் சிறிய பிராந்தியமாக அறியப்படுகிறது.
315 கிமீ2 பரப்பளவைக் கொண்டுள்ள இந்தப் பிராந்தியம், 2010-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 170,543 மக்கள் தொகையைக் கொண்டிருந்தது;[2] 2020 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 206,925 ஆக அதிகரித்தது.[3] 2022-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அதிகாரப்பூர்வ மதிப்பீடு 214,012 (107,177 ஆண்கள்; மற்றும் 106,815 பெண்கள்.[1]
குலுங்குங் பிராந்திய ஆட்சிப் பகுதியின் நிர்வாக மையம் செமராபுரா Semarapura நகரமாகும். அதன் ஆட்சிப் பகுதியில் குலுங்குங் மாவட்டம் உட்படுகிறது.
பொது
[தொகு]கியான்யார் (Gianyar) நகரில் இருந்து நெடுஞ்சாலை வழியாக செமாராபுரா நகரத்தை எளிதாக அடையலாம். இந்தப் பிராந்தியம் அதன் உன்னதமான பாலினிய ஓவியங்களுக்கு பிரபலமானது. அவை பெரும்பாலும் மகாபாரதம் அல்லது இராமாயணம் போன்ற காவியங்களின் கதைகளைச் சித்தரிக்கின்றன.
இந்தப் பாரம்பரிய பாணி ஓவியங்கள், பாலினிய அரண்மனைகளின் ஓவியங்களிலிருந்து வந்தவை; மேலும் செமராபுரா நகர மையத்தில் உள்ள குலுங்குங் அரண்மனையிலும் அத்தகைய ஓவியங்கள் காணப்படுகின்றன. செமராஜெயா அருங்காட்சியகமும் (Semarajaya Museum) இந்தப் பகுதியில் அமைந்துள்ளது.
வரலாறு
[தொகு]குலுங்குங் பிராந்தியம் என்பது குலுங்குங் இராச்சியத்தின் (Kloengkoeng) வாரிசு ஆகும். தென்கிழக்கு ஆசியாவில் ஐரோப்பியர்கள் வருவதற்கு முன்பு பாலியில் உள்ள பல இராச்சியங்களில் குலுங்குங் இராச்சியமும் ஒன்றாகும். அதன் அண்டை இராச்சியங்களுடன் ஒப்பிடும்போது இந்த இராச்சியம் சிறியதாக இருந்தாலும், உண்மையில் மிக முக்கியமான இராச்சியமாக அறியப்படுகிறது.
குலுங்குங் இராச்சியத்தின் ஆட்சியாளர்கள், தேவா அகோங் (Dewa Agung) எனும் பெரிய தெய்வம் என்று அழைக்கப் படுகிறார்கள். அவர்கள் மற்ற அரச பிரபுக்களால் ஆன்மீகம் மற்றும் உலகியல் சக்திகளைக் கொண்ட பாலியின் உயர் மன்னர்களாகக் கருதப்படுகிறார்கள்.
குலுங்குங் அரச குடும்பம், பாலி தீவு முழுவதையும் ஆட்சி செய்த கெல்கெல் இராச்சிய மன்னர்களின் நேரடி அரச மரபினராகும். குலுங்குங் இராச்சியம் முதலில் மஜபாகித்தின் ஓர் அடிமை இராச்சியமாக இருந்தது. பின்னர் கிழக்கு ஜாவா மற்றும் அருகிலுள்ள நுசா பெனிடா (Nusa Penida), லோம்போக் மற்றும் சும்பாவா தீவுகள் மீது செல்வாக்கு செலுத்தும் அளவிற்கு ஒரு சுதந்திர இராச்சியமாக மாறியது.
காட்சியகம்
[தொகு]- குலுங்குங் பிராந்திய காட்சிப் படங்கள்
-
குலுங்குங் அரச அலுவலகம்
-
குலுங்குங் அரசர்கள்
-
குலுங்குங் அரச நெல்வயல்கள்
-
கீர்த்த கோசம்
-
நகர நுழைவாயில்
-
குலுங்குங் அரண்மனை
-
குலுங்குங் சிலை
-
குலுங்குங் கோயில்