குலிஸ்தான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூந்தோட்டம் ஒன்றில் சா'தி்; சு. 1645-இல் குலிஸ்தானைப் பற்றிய முகலாய ஓலைகளிலிருந்து. சா'தி வலது பக்கம் இருக்கிறார்.
கவிஞர் சா'தி தோட்டத்தில் இரவில் தனது நண்பருடன் உரையாடும் காட்சி. Miniature from Golestan. Herat, 1427. Chester Beatty Library, Dublin; workshops of Baysunghur.
அறிமுகப் பகுதியின் முதற்பக்கம்
ஒரு தூணில் தனித்துவிடப்பட்ட இளம் விளையாட்டு வீரர். Chester Beatty Library, Dublin.

குலிஸ்தான், அல்லது குலிஸ்டான் (பாரசீகம்: گُلِستان, ஆங்கிலம்: Gulistan, பொருள்: "பூந்தோட்டம்"), ஒரு ஆகச்சிறந்த பாரசீக மொழி இலக்கியமாகும். பொ.ஊ. 1258-இல் எழுதப்பட்ட இது, பாரசீகத்தின் மிக முக்கிய உரைநடை இலக்கியமாகக் கருதப்படுகிறது.[1] இது இடைக்காலத்தின் மிகச்சிறந்த பாரசீக கவிஞர்களில் ஒருவராகக் கருதப்படும் சா'தியின் இரண்டு முக்கிய படைப்புகளில் ஒன்றாகும். இவரது மிகவும் பிரபலமான புத்தகங்களில் ஒன்றான இந்நூல், மேற்கிலும் கிழக்கிலும் செல்வாக்கு பெற்றதாகத் திகழ்கிறது.[2] பூந்தோட்டம் என்பது பூக்களின் தொகுப்பால் அமைந்தது போல் குலிஸ்தான் கவிதைகள் மற்றும் கதைகளின் தொகுப்பாகும். இது சிந்தனையின் ஊற்றாகப் பலராலும் பரவலாக மேற்கோள் காட்டப்படுகிறது. மேற்கத்திய உலகில் நன்கு அறியப்பட்டு அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் "காலில் செருப்பில்லை என்று கவலை கொள்ளும் ஒருவர் காலில்லாத ஒரு நபரைக் கண்டு அதைக்காட்டிலும் தனக்கு இருக்கும் மேம்பட்ட நிலையை எண்ணி கடவுளுக்கு நன்றி கூறுவதைச்" சொல்லும் பழமொழி வாக்கியம் குலிஸ்தானிலிருந்து பெறப்பட்டதாகும்.[3]

குறுகிய கதையமைப்புடன் கூடிய குலிஸ்தான் கதைகள் துல்லியமான மொழியமைப்பினைக் கொண்டும் உளவியல் நுண்ணறிவு கொண்டும் வெளிப்படுத்தப்படுகின்றன. இது கணித சூத்திரங்களின் அளவை ஒத்த சுருக்கத்துடன் கூடிய "சிந்தனைப் பாக்களை" உருவாக்குகிறது.[1] மனிதகுலம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு முக்கியப் பிரச்சினைகயையும் நம்பிக்கையூட்டும் தொனியிலும் சிலேடையாகவும் இந்நூல் அலசுகிறது.[4] இந்நூலில் ஆட்சியாளர்களுக்கும் இளவரசர்களுக்கும் நிறைய அறிவுரைகள் உள்ளன. "'சா'தியின் ஒவ்வொரு சொல்லும் எழுபத்திரண்டு பொருட்களைக் கொண்டுள்ளது' என்பதாகப் பாரசீக மொழியில் ஒரு பொதுவான பழமொழி உள்ளது" என்று ஈஸ்ட்விக் இந்நூலைப் பற்றிய தனது அறிமுகப் பகுதியில் விளக்குகிறார்.[5] சூஃபி அறிவுரைகளைக் கொண்ட இதிலுள்ள கதைகள் தங்களது கவித்துவத்தோடும் வாழ்வியல் சிந்தனைகளோடும் கூட இசுலாமிய துறவிகளான பாகிர்களின் நன்னடத்தை குறித்தும் அறிவுறுத்துகிறது. "இதைப் படிக்கும் வாசகர் ஒவ்வொருவர் மனதிலும் சூஃபி சிந்தனைகளை விதைக்கும் ஆற்றல் கொண்டதாக இந்நூல் அமைந்துள்ளது" என்று இட்ரீஸ் கூறுகிறார்.[6]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Gulistan of Sa'di
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குலிஸ்தான்&oldid=3696736" இருந்து மீள்விக்கப்பட்டது