உள்ளடக்கத்துக்குச் செல்

குலிக்கு ஆறு

ஆள்கூறுகள்: 24°29′24″N 88°18′14″E / 24.49000°N 88.30389°E / 24.49000; 88.30389
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குலிக்கு ஆறு
Kulik River
அமைவு
நாடுகள்இந்தியா, வங்காளதேசம்
மாநிலங்கள்மேற்கு வங்காளம், பீகார்
கோட்டங்கள்இராச்சாகி
நகரங்கள்
சிறப்புக்கூறுகள்
மூலம்இமயமலை
முகத்துவாரம்கங்கை ஆறு
 ⁃ அமைவு
கோதகிரி, சபாய் நவாப்கஞ்ச் மாவட்டம், வங்காளதேசம்
 ⁃ ஆள்கூறுகள்
24°29′24″N 88°18′14″E / 24.49000°N 88.30389°E / 24.49000; 88.30389
வடிநில சிறப்புக்கூறுகள்
துணை ஆறுகள் 
 ⁃ இடதுதாங்கோன் ஆறு, இரங்பூர் நாகர் ஆறு
 ⁃ வலதுமெச்சி ஆறு, கன்காய் ஆறு, பாலாசோன் ஆறு, கலிந்திரி ஆறு

குலிக்கு ஆறு (Kulik River) என்பது இந்திய மாநிலங்களான மேற்கு வங்களம், பீகாரிலும் வங்காளதேசத்தின் ரங்க்பூர் கோட்டம் வழியாகவும் பாயும் ஓர் எல்லை தாண்டிய ஆறாகும்.[1]

இந்தியா

[தொகு]

குலிக்கு ஆறு மேற்கு வங்காளத்தில் வடக்கு தினாச்பூர் மாவட்டம் வழியாக செல்கிறது. இந்த ஆற்றைச் சுற்றி ஒரு பறவை சரணாலயம் உள்ளது.[2] 2017 ஆம் ஆண்டில், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மூன்று பேர் இறந்தனர்.[3] சட்டவிரோதமாக கழிவுகளை கொட்டுவதாலும், ஆற்றின் அருகே நிலத்தை அபகரிப்பதாலும் ஆறு பெருமளவு சுருங்கிவிட்டது.[4] மேற்கு வங்க அரசு ஆற்றைப் புதுப்பிக்க முயற்சித்து வருகிறது.[4]

வங்காளதேசம்

[தொகு]

குலிக்கு ஆறு வங்காளதேசத்தில் உள்ள தாகுர்காவன் மாவட்டம் வழியாகப் பாய்கிறது.[5][6] தாகுர்காவன் மக்கள் வங்காளதேச அரசாங்கத்திடம் குலிக்கு ஆற்றின் மீது ஒரு பாலம் கட்ட வேண்டும் என்று கோரி வருகின்றனர்.[7] இராசா டோன்கோநாத்து அரண்மனை குலிக்கு ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Saving an indispensable river". The Statesman (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-10-24. Retrieved 2022-03-21.
  2. "Weekending with Storks at Kulik Bird Sanctuary". outlookindia.com (in ஆங்கிலம்). Retrieved 2022-03-21.
  3. "bengal floods: 3 killed, road and rail links to north Bengal remain cut off | Kolkata News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2022-03-21.
  4. 4.0 4.1 "N Dinajpur talks ways to save Kulick River". The Statesman (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-02-09. Retrieved 2022-03-21.
  5. "Thakurgaon people wait for bridge for years amid mounting sufferings". unb.com.bd (in English). Retrieved 2022-03-21.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  6. "Endangered 'Nilgai' found in Thakurgaon". Dhaka Tribune. 2018-09-05. Retrieved 2022-03-21.
  7. "People suffer as demand for a RCC bridge goes unheeded". unb.com.bd (in English). Retrieved 2022-03-21.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  8. "Raja Tonkonath's Palace in ruins". bdnews24.com. Retrieved 2022-03-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குலிக்கு_ஆறு&oldid=4338161" இலிருந்து மீள்விக்கப்பட்டது