குலாம் முஹைதீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம். குலாம் முஹைதீன்(M. Gulam Mohideen) ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். 1957 ஆம் ஆண்டு திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசின் சார்பாக போட்டியிட்டு மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

பிறப்பு[தொகு]

ஜூலை 1918 ஆம் ஆண்டு பெரும் நிலச்சுவான்தாரான முஹம்மது மீரா இராவுத்தருக்கு மகனாக அப்போதைய மதுரை மாவட்டமும், தற்போதைய தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் பிறந்தார்.

கல்வி[தொகு]

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் கல்வி பயின்றார்.

பொறுப்புகள்[தொகு]

  • முன்னாள் செயலாளர், மதுரை மாணவர் கூட்டமைப்பு,
  • முன்னாள் செயலாளர், கூட்டுறவு சங்கம் உத்தமபாளையம்,
  • முன்னாள் உறுப்பினர், தேனி கூட்டுறவு சங்கம், தேனி,
  • வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் முக்கிய பங்காற்றியவர்
  • 1942 ஆம் ஆண்டு யுத்த காலத்தில் மாணவர் தலைவராக பல போராட்டங்களை நடத்தியவர்,
  • இந்திய தேசிய காங்கிரசில், நகரம், மாவட்டம் மற்றும் மாகாண காங்கிரஸ் தலைவராக பதவிகளை வகித்தவர்,
  • விவசாயம் மற்றும் நலப்பனிகளில் ஆர்வமிக்கவர்,
  • உத்தமபாளையம் நகர பஞ்சாயத்து தலைவராக பணியாற்றியவர்,
  • உத்தமபாளையம் கிளைச் சிறைச்சாலையின் கௌரவ வருகையாளர் மற்றும் நலப்பணியாளர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குலாம்_முஹைதீன்&oldid=3480551" இலிருந்து மீள்விக்கப்பட்டது