குலாம் உசைன் மொக்சேனி-எஜேய்
குலாம் உசைன் மொக்சேனி-எஜேய் | |
|---|---|
غلامحسین محسنی اژهای | |
2023-இல் குலாம் உசைன் மொக்சேனி-எஜேய் | |
| ஈரானின் தலைமை நீதிபதி | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 1 சூலை 2021 | |
| நியமிப்பு | அலி காமெனி |
| முன்னையவர் | இப்ராகிம் ரையீசி |
| ஈரானின் இடைக்கால தலைமைத்துவ குழுவின் உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 1 மார்ச் 2026 | |
| முன்னையவர் | அலி காமெனி, (ஈரானின் அதியுயர் தலைவர்) |
| ஈரானின் தலைமை நீதிபதியின் முதல் உதவியாளர் | |
| பதவியில் 23 ஆகஸ்டு 2014 – 1 சூலை 2021 | |
| நியமிப்பு | சாடெக் லாரிஜானி |
| முன்னையவர் | இப்ராகிம் ரையீசி |
| பின்னவர் | முகமது மொசாதேக் கஹ்னமௌயி |
| ஈரானின் நீதித்துறை செய்தி தொடர்பாளர் | |
| பதவியில் 16 செப்டம்பர் 2010[3] – 8 ஏப்ரல் 2019 | |
| நியமிப்பு | சாடெக் லாரிஜானி |
| முன்னையவர் | அலிரேசா ஜம்சித்தி |
| பின்னவர் | குலாம் உசைன் இஸ்மாயிலி |
| ஈரான் அரசின் தலைமை வழக்கறிஞர் | |
| பதவியில் 24 ஆகஸ்டு 2009 – 23 ஆகஸ்டு 2014 | |
| நியமிப்பு | சாடெக் லாரிஜானி |
| முன்னையவர் | கோர்பனாலி டோரி-நஜாபாதி |
| பின்னவர் | இப்ராகிம் ரையீசி |
| 6வது உளவுத்துறை அமைச்சர் | |
| பதவியில் 24 ஆகஸ்டு 2005 – 23 சூலை 2009 | |
| குடியரசுத் தலைவர் | மஹ்மூத் அஹ்மதிநெஜாத் |
| முன்னையவர் | அலி யூனேசி |
| பின்னவர் | மஹ்மூத் அஹ்மதிநெஜா (தற்காலிகம்)[4] |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 29 செப்டம்பர் 1956 எழியே, இசுபகான் மாகாணம், ஈரான் |
| முன்னாள் மாணவர் | ஹக்கானி இறையியல் பள்ளி |
குலாம் உசைன் மொக்சேனி-எஜேய் (Gholam-Hossein Mohseni-Eje'i) (பிறப்பு:29 செப்டம்பர் 1956) ஒரு ஈரானிய அரசியல்வாதி மற்றும் இஸ்லாமிய சட்ட நிபுணர் ஆவார். இவர் 2021 முதல் ஈரானின் தலைமை நீதிபதியாக பணியாற்றி வருகிறார். இவர் 2005 முதல் சூலை 2009 வரை ஈரானிய உளவுத்துறை அமைச்சராக இருந்தார். நீதித்துறைத் தலைவராக இருந்த குலாம் உசைன் மொக்சேனி-எஜேய் 2025–2026ல் ஈரானில் போராட்டங்களை அடக்குவதில் முக்கியப் பங்காற்றினார். ஆர்ப்பாட்டக்காரர்களிடம் "மென்மை காட்டக்கூடாது" என்று அரசு வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தினார். இது விரைவான மரணதண்டனைக்கு பரவலாகப் பயன்படுத்தப்பட்டது மற்றும் பலருக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு உரிய செயல்முறை, சட்ட ஆலோசனை மற்றும் நியாயமான விசாரணைகளை மறுப்பதற்கு வழிவகுத்தது. [5] ஈரானின் அதியுயர் தலைவர் அலி காமெனியின் மறைவுக்குப்பின், புதிய அதியுயர் தலைவரை தேர்வு செய்யப்படும் வரை அலிரேசா அராஃபி மற்றும் ஈரானிய அதிபர் மசூத் பெசஸ்கியான் ஆகியோருடன் இணைந்து குலாம் உசைன் மொக்சேனி-எஜேய் ஈரானின் இடைக்கால அரசுக் குழுவின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "درباره حجت الاسلام محسني اژه اي چه مي دانيم؟/دانشنامه". yjc.ir. Young Journalists Club. Archived from the original on 2020-10-20. Retrieved 28 September 2022.
- ↑ "محسنی اژه ای در حالی می گوید مرا آیت الله نخوانید که بعضی افراد از رسانه ها می خواهند به آنها آیت الله بگویند". khabaronline.ir. Khabaronline News Agancy. 13 November 2021. Retrieved 28 September 2022.
- ↑ "انتصاب محسنی اژهای به عنوان سخنگوی قوهقضائیه". Donya-e Eqtesad. Retrieved 1 July 2021.
- ↑ Abbas Milani (3 August 2009). "Inside The Civil War That's Threatening The Iranian Regime". New Republic. Retrieved 3 June 2016.
- ↑ Who are the council members temporarily in charge of Iran?